மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டிகள் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில்
பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டிகள் அக்டோபர், 10, 11 ஆகிய இரண்டு
நாட்கள் காலை 8 மணி முதல் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.
ஆறு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவியருக்கு அக்டோபர் 10ம்
தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 11ம் தேதியும்
நடக்கிறது.
தகுதிகள் என்ன?
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் மட்டும் போட்டியில்
பங்கேற்கலாம். வயது சான்றிதழ் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற வேண்டும்.
வெற்றி பெறும் வீரர், வீராங்கனைக்கு பரிசு தொகை வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்போர் நுழைவு விண்ணப்பத்தை, போட்டி
நடக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு ஆண், பெண் பிரிவுகளில்
இரட்டையர் பிரிவுக்கு ஒரு அணியும், ஒற்றையர் பிரிவுக்கு, இருவர் மட்டும்
பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
No comments:
Post a Comment