நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும்
அவர்களின் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு திறன் எய்தும், பயிற்சி
அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம், என மாவட்ட தொழிலாளர்
அலுவலர் கேட்டு கொண்டார்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நல
வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் 14 வயதுக்கு
மேற்பட்ட குழந்தைகளுக்கு அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரிய தேவைப்படும்
திறன் எய்தும் பயிற்சியை, தமிழ்நாடு கட்டுமான கழகம், ஈரோடு மாவட்டத்தில்
உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் அளிக்கிறது.
கம்ப்யூட்டர் சம்மந்தமான டேலி மற்றும் கம்ப்யூட்டர்
அடிப்படை போன்ற பயிற்சிகள், பேசிக் எலக்ட்ரிக், வீட்டு ஓயரிங், பேசிக்
பிட்டரிங் மெஸர்மெண்ட் போன்ற தொழிற்பயிற்சிகள் பகுதி நேரமாக மாலை நேரத்தில்
கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சியை முடித்த பின், தேசிய தொழில் நெறி கல்வி பயிற்சி
சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கு குறைந்தபட்ச கல்வி
தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, ஈரோடு தொழிலாளர் அலுவலர் (சமூக
பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275592
மூலமாகவோ அணுகலாம், என மாவட்ட தொழிலாளர் அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment