கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க
அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில்
10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மாநகராட்சி
பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு
வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் சோர்வு மற்றும் பசியை போக்கும்
வகையில் மாலை நேர சிற்றுண்டி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய்
நிதி ஒதுக்கப்பட்டது.
மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் 2550
மாணவர்களுக்கும், பிளஸ் 2 படிக்கும் 2450 மாணவர்களுக்கும், மாலை நேர
சிற்றுண்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழங்கப்படும் சிற்றுண்டிகள்
வழங்கப்படும் சிற்றுண்டிகள்
சுக்கு டீ 100 மில்லி, வல்லாரை சூப் 150 மில்லி, தூதுவளை
சூப் 150 மில்லி (ஏதாவது ஒன்று) வழங்கப்படும். சோயா சுண்டல் 100 கிராம்,
கருப்பு கொண்டை கடலை சுண்டல் 100 கிராம், பாசிப்பயறு சுண்டல் 85 கிராம்
(ஏதாவது ஒன்று), ராகி புட்டு 100 கிராம், மக்காச்சோளப்புட்டு 100 கிராம்,
அரிசி புட்டு 100 கிராம் (ஏதாவது ஒன்று) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சிற்றுண்டி பொருட்கள்
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு பிரித்து வினியோகம்
செய்யப்படும். சிற்றுண்டிக்காக ஒரு மாணவனுக்கு ஒரு நாளுக்கு 25 ரூபாய்
செலவிடப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்"
என்றனர்.
No comments:
Post a Comment