நெல்லையில் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் திறம்பட பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி
மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நெல்லையில் நடந்தது. 6 முதல் 8ம்
வகுப்பு வரை 9, 10 வகுப்புகள், 11, 12 வகுப்புகள் என 3 பிரிவு
மாணவர்களுக்கு 11 போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை
பெற்றவர்கள் பரிசுக்கு தகுதி பெற்றனர்.
பாளை., சாரா டக்கர் பள்ளியில் தமிழ், ஆங்கில பேச்சுப்
போட்டி, தமிழ்க் கவிதைப் போட்டி, கிராமிய நடனப் போட்டி, இக்னேஷியஸ்
பள்ளியில் தமிழ், ஆங்கில கட்டுரைப் போட்டி, பரதநாட்டியம், வினாடி வினா
போட்டி நடந்தது. பாளை., சேவியர் பள்ளியில் இசைக்கருவி மீட்டல், குரலிசை,
ஓவியப்போட்டி நடந்தது.
3 இடங்களில் நடந்த போட்டிகளில் அனைத்து மாவட்டங்களைச்
சேர்ந்த 1,076 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் மாணவ, மாணவிகள்
தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசத்தினர்.
பரத நாட்டியப் போட்டியில் சிவன், பார்வதி வேடம் அணிந்து
கலைநயத்தை வெளிப்படுத்தி ஆடிய 2 மாணவிகள் பாராட்டுக்களைப் பெற்றனர்.
மேற்கத்திய இசையில், பரதநாட்டிய அசைவுகளுடன் இரு மாணவிகள் ஆடிய வேக நடனம்
அனைவரையும் கவர்ந்தது.
இசைக்கருவி மீட்டல் போட்டியில் சிறுவர்கள் வாத்தியங்களை
ஆர்வத்துடன் இசைத்ததை அனைவரும் ரசித்தனர். கிராமிய நடனப்போட்டியில் மாணவ,
மாணவிகளின் குதூகல ஆட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
No comments:
Post a Comment