ஈரோட்டில், மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.
தட்டச்சு பாடத்தின் அவசியத்தை அனைத்து பள்ளி மற்றும்
கல்லூரிகளில் அறிக்கையாக வெளியிட, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை
வலியுறுத்த வேண்டும். முதுகலை பாடத்தில் பேலன்ஸ் ஷீட் மற்றும் மெக்கானிசம்
ஆகியவற்றை நீக்கம் செய்து, பாடத்திட்டத்தை எளிமையாக்கியமைக்கும், இதன்
மூலம் அனைத்து தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்
சமுதாயத்துக்கு மிகப்பெரிய உதவியை செய்து கொடுத்திருக்கும் அதிகாரிகளுக்கு
நன்றி தெரிவிக்கிறோம்.
தட்டச்சு பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்று மாநிலத்தில்
முதலிடம் வரும் மாணவர்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். ஆங்கிலம் இளம்
நிலையில் உள்ள ஸ்டேட்மென்ட்டை நீக்கம் செய்துவிட்டு, பிஸ்னஸ் லெட்டர்,
புரஃபஷனல் லட்டர், அப்ளிக்கேஷன் மற்றும் அரசு ஆணை மட்டும் வைத்துக்கொள்ள
வேண்டும்.
தட்டச்சு கல்வியின் மகத்துவத்தை மக்கள் அனைவரும் அறியும்
வண்ணம், தட்டச்சு கல்வி கற்ற மாணவர்கள் நல்ல பணியிலும், வாழ்க்கைத்தரம்
உயர்ந்து விளங்குகிறார்கள். தட்டச்சு கல்வியின் முக்கியத்துவத்தை நாடே
அறியும் வண்ணம், "விரல் நுனியில் வித்தை" என்ற தலைப்பில் காலைக்கதிர்
நாளிதழுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment