மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) சார்பில்
அதன் பாடத் திட்டத்தை நடத்தும் பள்ளி முதல்வர்களுக்கான சிறப்புப்
பயிலரங்கு, மதுரையில் மூன்று நாட்களுக்கு நடந்தது.
மதுரையைச் சேர்ந்த 20 பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும்
தாளாளர்கள் பங்கேற்றனர். ஈஸ் வித்யா அமைப்பின் முதன்மை பயிற்றுனர்
சித்ராதேவி பேசியதாவது:
"பள்ளிகளில் மாணவர்களை அணுகும் முறை தான், ஆசிரியர்களின்
பெயர்களை காலம் காலமாக மனதில் நிலை நிறுத்துகிறது. பள்ளி முதல்வர்கள் நல்ல
தலைவர்களாக இருந்தால் தான் மாணவர்களை வழி நடத்த முடியும்.
இப்போதுள்ள மாணவர்கள், தொழில்நுட்பத்தில் மேம்பட்டவர்களாக
இருப்பதால் வகுப்பறை கல்வியை திறம்பட கற்றுத்தர வேண்டியது அவசியம்.
"ஸ்மார்ட்" வகுப்பறைக்கு செலவிடுவதை விட, ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி
தரலாம்.
மாணவர்களை சிந்திக்க வைப்பதாக பாடப்புத்தகங்கள் அமைய
வேண்டும். வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொன்னால் மட்டும் புரியாது. எதனால்
வரலாறு உருவானது எனக்கூறினால், பாடங்கள் மனதில் பதியும்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் எல்லாம் தெரியும் என
நினைக்கின்றனர். பெற்றோர்கள் பள்ளிச் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத போது,
கோபப்படுகின்றனர். அதைச் சமாளிக்க, பள்ளி முதல்வர்களின் வார்த்தைகள்,
உடல்மொழி, நடத்தையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். சி.பி.எஸ்.இ., கல்விக்கு
மட்டுமின்றி, அனைத்துப் பாடத்திட்டங்களுக்குமே இம்முறை பொருந்தும்"
என்றார்.
பள்ளி முதல்வர்கள் குழுக்களாகப் பிரிந்து, வகுப்பறையில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களின் நடத்தைகளை நாடகமாக நடித்தனர்.
No comments:
Post a Comment