மாணவர்களை டீ மற்றும் சாப்பாடு வாங்க அனுப்பும் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், சமீப காலமாக, வகுப்பில் படிக்கும்
மாணவர்களை சாப்பாடு, டீ, தின்பண்டங்களை வாங்கும் வேலைக்கு பயன்படுத்தி
வருகின்றனர். பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களின் உத்தரவை மீறக்கூடாது என
கருதி, அவர்கள் கூறும் வேலைகளைத் தவறாமல் செய்து வருகின்றனர். மாணவர்கள்,
பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்குச் செல்லும் நேரங்களில் வகுப்பில்
ஆசிரியர் கற்றுத்தரும் பாடத்தினை கவனிக்க முடியாமல் போகிறது.
மேலும், சாலையோரங்களில் உள்ள கடைகளுக்குச் சென்று, மாணவர்கள் பொருட்களை
வாங்கி வரும்போது, தாறுமாறாகச் செல்லும் வாகனங்களில் சிக்கி, விபத்து
ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. விழுப்புரம் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர்
நல உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர், நேற்று காலை பள்ளி இடைவேளை
நேரத்தில் சாலையோரமாக சென்று, ஆசிரியர்களுக்கு டீ வாங்கி சென்றனர்.
மாணவர்களை, ஆசிரியர்கள் சொந்த வேலைக்குப் பயன்படுத்துவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment