இந்தியாவில், 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக, பல்கலை
கழக மானியக்குழு அறிவித்துள்ளது. மாணவர்கள் இதில் சேர்ந்து ஏமாற வேண்டாம்,
எனவும் எச்சரித்துள்ளது.
பல்கலை மானியக்குழு விதிகளின்படி,
மத்திய, மாநில அரசால் நிறுவப்பட்டுள்ள பல்கலைகள், மட்டுமே,
"யுனிவர்சிட்டி" என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். வேறு எந்த கல்வி
நிறுவனமும் "யுனிவர்சிட்டி" என்ற வார்த்தையை பயன்படுத்தி, இளங்கலை, முதுகலை
பட்டப்படிப்புகளை நடத்தி, அதற்கென பட்டங்களை வழங்குவது, யு.ஜி.சி., சட்ட
விதியின்படி, தடை செய்யப்பட்டுள்ளது.
மீறும் கல்வி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் பாயும் எனவும்,
அது எச்சரித்துள்ளது. இந்தியா முழுவதும், யு.ஜி.சி., சார்பில், நடத்தப்பட்ட
ஆய்வில், 21 பல்கலைகள் போலியானது, என கண்டறியப்பட்டு, அதன் அதிகாரப்பூர்வ
வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 9, டில்லியில் 5, பீகார், கர்நாடகா,கேரளா, மத்திய
பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகியவற்றில் தலா ஒன்று
போலி பல்கலையாக கண்டறியப்பட்டு உள்ளது. மாணவர்கள் இதில் சேர்ந்து ஏமாற
வேண்டாம், எனவும் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment