"விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு
முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு, சத்தான உணவு வகைகளை வழங்க
வேண்டும்," என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரசு முதன்மை செயலர்
அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரசு முதன்மை செயலர்
மற்றும் உறுப்பினர் செயலர் ராஜாராமன், கோவை நேரு ஸ்டேடியத்தை பார்வையிட்டு,
அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
"தமிழக முதல்வர் அறிவிப்பின் படி, கோவை நேரு ஸ்டேடியத்தில்
நடத்த திட்டமிட்டுள்ள சிறப்பு பணிகளை, அரசாணை பெற்றவுடன் நடத்த நடவடிக்கை
எடுக்கப்படும்" என்றார். விடுதி மாணவர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், உணவியல் மருத்துவரிடம்
ஆலோசித்து, சத்தான உணவு வகைகளை வழங்க அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அகாடமி
பயிற்றுனர் நிஜாமுதீன் மற்றும் அவரிடம் பயிற்சி பெற்று பதக்கம் வென்ற
வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
தேசிய தடகளத்தில், மும்முனை தாண்டும் போட்டியில், கடந்த
நான்கு ஆண்டுகளாக சாதித்து வரும் முகமது சலாவுதீனுக்கும், தேசியளவில்
தடகளத்தில் சாதித்து வரும் விடுதி மாணவன் முத்து வீரப்பனுக்கும் பாராட்டு
தெரிவித்தார்.
தேசிய தடகளத்தில் சாதித்து வரும் வீராங்கனை சிவ
அன்பரசிக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தேவையான
உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment