"மாணவர்களுக்கு அறிவு மதம் பிடிக்க வேண்டும். அப்படி அறிவு
மதம் பிடித்தால் மட்டுமே அத்தனை பாடங்களும் மாணவர்களுக்கு கட்டுப்படும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதனை
படைக்கலாம்," என பெரியகுளத்தில் நடந்த "தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்"
நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
பெரியகுளத்தில் தேனி ரோட்டில் உள்ள தி.ராமானுஜம்
அரங்கத்தில் தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் காலை 10ம் வகுப்பு மதியம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் மேரிமாதா கல்லூரி
ஆங்கிலப் பேராசிரியர் ஆர்.மோகனசுந்தரம் பேசியதாவது:
"அடுத்த இரண்டு ஆண்டுகள் தான் உங்களின் 50 ஆண்டுகளுக்கான
வாழ்க்கையை தீர்மானிக்க போகிறது. பலம் அறியாத யானை சிறிய கயிறுக்கு
கட்டுப்பட்டு நிற்கும். யானைக்கு மதம் பிடிக்கும் போது மிகப்பெரிய
சங்கிலியை கூட அறுத்து எறிந்து விடும். அப்போது தான், யானையின் முழு பலம்
உலகிற்கு புரியும்.
ஆங்கிலம் புரியாது. கணக்கு வராது. இயற்பியல் தெரியாது
என்பதெல்லாம் மாயை. மாணவர்களுக்கு அறிவு மதம் பிடிக்க வேண்டும். அறிவு மதம்
பிடித்தால், பாடங்கள் உங்களுக்கு கீழ் படியும். உங்கள் பின்னால் வரும்.
அறிவு மதம் பிடித்து அறிவாற்றலால் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க வேண்டும்.
உலகம் நீங்கள் சொன்னபடி கேட்கும்.
உங்கள் அறிவும், ஆற்றலும் மேம்படும் போது நினைத்ததை சாதிக்க
முடியும். கூட்டுப்புழு உழைக்கும் போது பட்டாம் பூச்சியாகிறது. மரம்
தச்சன் கையில் கிடைக்கும் போது வீணையாகிறது. அறிவோடு கலந்த உழைப்பு உங்களை
உலகின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்." இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment