"குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அறிவை வளர்க்க வேண்டும்," என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த குழந்தைகள் பாதுகாப்பு, வளர்ச்சி கருத்தரங்கில் கலெக்டர் சுப்ரமணியன் பேசியதாவது:
"18 வயது வரை உள்ளவர்கள் குழந்தைகள் தான். அவர்கள்
பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குழந்தை தொழிலாளர்,
குழந்தை திருமணம், குழந்தைகள் கடத்தல், பெற்றோர் இல்லாத குழந்தைகள்,
மாற்றுத் திறனாளி குழந்தைகள் என பல வகைகளில் கொடுமைகள் நடக்கின்றன.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் குழந்தைகளை
பாதுகாக்கலாம். 14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு
பங்கு உள்ளனர். பல தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை
கண்டறிந்து, படிப்பறிவை வளர்க்க வேண்டும்.
பிறந்த குழந்தைகள் இறப்பு ராஜஸ்தானில் 21.8 சதவீதம்,
உ.பி.,யில் 21.2, மத்திய பிரதேசத்தில் 20.4 சதவீதம் உள்ளது. தமிழகத்தில் 5
சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதை குறைக்க மாவட்ட நிர்வாகம் மாதம்தோறும்
சிசு இறப்பு குறித்து தணிக்கை செய்து காரணத்தை கண்டறிகிறோம். முறையாக
பராமரிக்காதது, அதிக உணவு போன்றவற்றால் இறப்பு அதிகம் உள்ளது.
உலகளவில் 5 வயதுக்கு கீழ் உள்ளோர் இறப்பு 1990ல் ஆயிரம்
பேரில் 87 எனவும், இந்தியாவில் 115 ஆகவும் இருந்தது. தற்போது உலகளவில் 57
ஆகவும், இந்தியாவில் 59 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் 27 பேராக உள்ளது,
என்றார்.
No comments:
Post a Comment