புதுமையான
வேலைவாய்ப்புகள் வாழ்க்கையை ரசிக்கும்படியாக மாற்றிவிடுகிறது. வாழ்க்கை
ரசிக்கும்படியாக இருந்தாலும், வருமானமும் வளமான வாழ்க்கைக்கு அவசியம்.
அப்படி வருமானத்தை ரசிப்புத்தன்மையுடன் தரும் பணிகளில் ஒன்று ஒலிப்
பொறியாளர் எனும் "சவுண்ட் இன்ஜினியர்" பணியாகும்.
ஒரு ஒலிப் பொறியாளர்
எந்த நேரத்தில், எந்த இடத்தில் எந்த மாதிரியான ஒலியை அல்லது இசையை வழங்க
வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ற ஒலியை சரியான சத்தத்தில் வழங்க
வேண்டும். திரைப்படமோ, நாடகமோ அல்லது நேரடி நிகழ்ச்சியோ எதுவாகினும் அதனதன்
சூழ்நிலைகளை சரியாக புரிந்துகொண்டு சிறப்பான ஒலியை ஏற்படுத்த வேண்டும்.
இனிய ஒலியை ரசிக்காதவர்கள் எவருமில்லை. அதையும் ரசிப்புத்
தன்மையுடன் கொடுத்தால்தான் ரசிக்க முடியும். ரசனை மிகுந்த ஒருவரால் தான்
ரசனையை வெளிப்படுத்த முடியும். பொழுது போக்குத் துறையின் முக்கியமான
பிரிவாக உருவெடுத்து வரும் இத்துறை சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு இளநிலை படித்திருப்பது நல்லது.
வேலை வாய்ப்புகள்
பொழுது போக்குத்துறை அபரிவிதமாக வளர்ந்து வரும் துறையாகும்.
புதிய புதிய தொலைக்காட்சி அலைவரிசைகளும், எஃப்.எம். களும் அதிகரித்து
வருகிறது. அதே போன்று அனைத்து தரப்பு மக்களாலும் ஏதோ ஒரு தொலைக்காட்சி
அலைவரிசையோ, திரைப்படமோ, எஃப்.எம். அலைவரிசையோ ரசிக்கப்படுவதாக அமைந்து
உள்ளது.
எனவே தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்பட மற்றும்
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனங்கள், எஃப்.எம். அலைவரிசைகள்,
விளம்பரத்துறை சார்ந்த நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்பு நிறுவனங்கள், சி.டி.
தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள்
பெருகி வருகிறது.
வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள்
- ஒலியை ரசிக்கும் ஆர்வம்.
சிறந்த கல்வி நிறுவனங்களில் சில
இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூர்.
ஸ்கூல் ஆஃப் ஆடியோ இன்ஜினியரிங், (சென்னை, பெங்களூர், மும்பை)
ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் இந்தியா, புனே.
நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆஃப் ஃபிலிம் அன்ட் ஃபைன் ஆர்ட்ஸ், கொகட்டா.
மிடில் டென்னசி ஸ்டேட் யூனிவர்சிட்டி, அமெரிக்கா.
லண்டன் ஸ்கூல் ஆஃப் சவுண்ட், இங்கிலாந்து.
ஸ்கூல் ஆஃப் ஆடியோ இன்ஜினியரிங், (சென்னை, பெங்களூர், மும்பை)
ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் இந்தியா, புனே.
நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆஃப் ஃபிலிம் அன்ட் ஃபைன் ஆர்ட்ஸ், கொகட்டா.
மிடில் டென்னசி ஸ்டேட் யூனிவர்சிட்டி, அமெரிக்கா.
லண்டன் ஸ்கூல் ஆஃப் சவுண்ட், இங்கிலாந்து.
No comments:
Post a Comment