செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி
போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29
செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.
இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில், ரஷ்ய விண்வெளி நிலையமான,
காஸ்மோடிராஸ் நிறுவனத்தின், டி.என்.இ.பி.ஆர்., ராக்கெட், 2 நாட்களுக்கு
முன், விண்ணில் ஏவப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளின் துபாய்சாட் 2 உள்ளிட்ட,
32 செயற்கைக்கோள்களை, இந்த ராக்கெட் சுமந்து சென்றதன் மூலம், அமெரிக்காவின்
சாதனையை முறியடித்துள்ளது.
No comments:
Post a Comment