அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று
அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை
தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
CBSE பள்ளிகள் accreditation பெறுவது முன்பு தன்னார்வ செயல்பாடாக
இருந்தது. ஆனால் தற்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக CBSE
வட்டாரங்கள் கூறுவதாவது: CBSE பள்ளிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
accreditation பெறுவது கட்டாயம். தரமான கல்வி என்று நோக்கத்தை முன்வைத்தே,
இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது.
இணைப்புக் கட்டணமாக, பள்ளிகள் சுமார் ரூ.55,000 செலவிட
வேண்டியிருக்கும். ஒருமுறை accreditation பெற்றவுடன், சிறப்பு நன்மைகளை
அந்தப் பள்ளிகள் பெறும். அனைத்து CBSE பள்ளிகளும், நிரந்தர இணைப்பு
தகுதியைப் பெறும். CBSE இணையதளத்தில், Form of Intent -ஐ பூர்த்திசெய்து
ஆன்லைன் விண்ணப்ப செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப செயல்பாடு
மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment