பள்ளி, கல்லூரி விடுதிகளில், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை
ஆய்வு மூலம் உறுதிசெய்ய, கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சில அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தரமற்ற உணவு
வழங்கப்படுவதாகவும், அதனால், மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும்,
அரசுக்கு தொடர்புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள
கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களது மேற்பார்வையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி
தலைமையிலான குழுவினர், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள விடுதிகளின்
சமையலறை, உணவு சமைக்கப்படும் விதம், சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்கள்
குறித்து ஆய்வு செய்வர். அவற்றில் குறைபாடு இருந்தால் அதை சரிசெய்ய,
சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவர்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குறைபாடு சரிசெய்யப்படவில்லை எனில்
கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியருக்கு தரமான,
சுகாதாரமான உணவு கிடைக்கவே, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக, அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment