பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் பள்ளி தலைமைத்துவ மாநாடு(School
Leadership Conference), சென்னையில் நவம்பர் 18ம் தேதி துவங்கியது. இதில்
கலந்துகொண்டு உரையாற்றிய கல்வித்துறை நிபுணர்கள் பலர், தங்களின் ஆலோசனைகளை
வழங்கினார்கள்.
அவர்கள் பேசியவற்றிலிருந்து சில அம்சங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள், அறிவியல் பாடங்களை கற்பிக்கும் நடைமுறையில் மாற்றங்களை
மேற்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட விளைவை எதிர்பார்த்து, அவர்கள்
ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தூண்டாமல், பல புதிய விஷயங்களைக்
கண்டுபிடிக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
மாணவர்கள் சிந்திப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மாற்றங்களையும்,
சவால்களையும் ஏற்றுக்கொள்வதோடு, மாணவர்கள் அதை ஏற்று வெற்றிகாணும் வகையில்
பயிற்சியளிக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மாணவர்களைவிட, இன்றைய மாணவர்கள்
மிகவும் வித்தியாசமாக இருக்கிறார்கள். ஆசிரியர்களிடமிருந்து, மாணவர்களுக்கு
ஆற்றல் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள், தங்களின் சுற்றுப்புறம்
குறித்து தேவையான விழிப்புணர்வுடன் இன்று இருக்கிறார்கள். எனவே,
அத்தகையதொரு சூழலில், மாணவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர்கள்
தங்களை தயார்செய்து கொள்ள வேண்டும்.
வெறுமனே பாடப்புத்தகங்கள் மட்டுமே மாணவர்களுக்கு போதுமானதல்ல. அதனால்,
அவர்கள் சலிப்பை உணர்வார்கள். எனவே, ஆன்லைனில் படிக்க மற்றும் வேறுபல அறிவை
மேம்படுத்தும் புத்தகங்களைப் படிக்க அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.
வாழ்க்கை முழுவதுமான கற்றல் செயல்பாட்டை மாணவர்களுக்கு கற்றுத்தர
வேண்டும். அவர்களிடம், பாடத்திட்ட விஷயங்களை திணிக்கக்கூடாது. பலவிதமான
திறன்கொண்ட மாணவர்களை கையாளும் வகையில், ஆசிரியர்கள் தங்களைப்
பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பல்வேறான ஆலோசனைகள்
வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment