வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாநில
அளவில் கட்டுரை, பேச்சு போட்டிகள், கல்லூரி, மேல்நிலை பள்ளிகள் அளவில்
நடத்தப்படுகிறது.
வள்ளலார் கண்ட சன்மார்க்க நெறிகள், வள்ளலாரும் புத்தர்,
ஏசு, ஷீரடி சாயிபாபா, நபிகள் நாயகம், ரமண மகரிஷிகள் ஆகியோர்களுக்கு உள்ள
ஒற்றுமை, வேற்றுமைகள், இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் அகற்றுவதற்கான
வழிமுறைகள், ஜீவ காருண்யமே மனிதனின் திறவுகோல், ஆகிய தலைப்புகளில் ஒன்றை
தேர்ந்தெடுத்து ஐந்து பக்கங்களுக்கு குறையாமல் கட்டுரை அனுப்ப வேண்டும்.
அதில் வீட்டு முகவரி, தொலைபேசி எண் குறிப்பிட வேண்டும்.
அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பரிசு
வழங்கப்படும். விழா நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
கட்டுரைகளை வரும் ஐந்தாம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இது தொடர்பாக, 84286 43528, 98425 78412, 0424-2262664, 93605 05686 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment