"10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி
அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது" என அரசு
தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவு: 2014 மார்ச்,
ஏப்ரலில், 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனை
கூட்டம், டிச.,3ல் சென்னையில் நடக்கிறது.
இதில், புதிய தேர்வு மையங்கள்
அமைப்பதற்கான கருத்துரு, தற்போதுள்ள தேர்வு மையத்தை வேறு தேர்வு மையத்துடன்
இணைத்தல், சில தேர்வு மையத்தை நீக்குதல், சிறைத் தேர்வர்களுக்கு தேர்வு
மையம் அமைத்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் மற்றும் அவர்களுக்கு
செய்முறைத் தேர்வில் விலக்கு அளித்தல், மாணவர்களுக்கு தேவையான விடைத்
தாளின் முதன்மை பகுதி, வினாத்தாள் கட்டுக்காப்பாளர் மையத்தை
மாற்றியமைத்தல், பள்ளி மற்றும் அதில் பணிபுரியும் ஆசிரியர்கள்
விபரப்பதிவேடு, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் எண்ணிக்கை உட்பட, பல்வேறு
அம்சங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், தேவையான விபரத்துடன் பங்கேற்கவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment