மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர்
சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல்,
"பொறுப்பு" ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இத்துறைக்கு உட்பட்ட 5 பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக சமீபத்தில் தரம்
உயர்த்தப்பட்டன. அரசு உத்தரவுப்படி, தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்
பள்ளிகளுக்கு, 9 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்க வேண்டும். இந்த
உத்தரவை அதிகாரிகள் பின்பற்றாமல், "பொறுப்பு&' ஆசிரியர்களை கூடுதலாக
நியமித்து புதிய பணியிடங்கள் உருவாக்குவதை தள்ளிப்போடுகின்றனர்.
இதனால், பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் கனவில் உள்ள ஆசிரியர்கள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க
மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தேனி மாவட்ட தலைவர் சுதாகர்
கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 45 புதிய பணியிடங்களை உருவாக்க
வேண்டும்.
மேல்நிலை முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு வாய்ப்பு
ஏற்படும். சிறப்பு "கவுன்சிலிங்" நடத்தப்பட்டால் வெளி மாவட்டங்களில்
பணிபுரியும் பலருக்கு, பணிமூப்பு அடிப்படையில் உள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு
மாறுதல் கிடைக்கும். "பொறுப்பு" ஆசிரியர் நியமித்து சமாளிப்பதால், ஒரே
ஆசிரியர் இரு பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கும் நிலையுள்ளது, என்றனர்.
No comments:
Post a Comment