பணிநிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
உண்ணாவிரதம்
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும்
ஆசிரியர்களையும், ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர்
பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை
வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக
அறிவித்திருந்தனர். அதன்படி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு அவர்கள்
தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள்.
கலந்துகொண்டவர்கள்
உண்ணாவிரதத்துக்கு தனியார் பள்ளி சம்மேளன பொதுச்செயலாளர் கிறிஸ்டோபர்
தலைமை தாங்கினார். தலைவர் வின்சென்ட்ராஜ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்
சம்மேளன தலைவர் சீத்தாராமன் போராட்டத்தை தொடங்கிவைத்தார். அரசு ஊழியர்
சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன், நிர்வாகிகள் நமச்சிவாயம், மோகனகிருஷ்ணன்,
ஆனந்தராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் அரசு
உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment