நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள்
வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு
முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி
பெறும் மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
விலையில்லா நோட்டு புத்தகம், நான்கு செட் சீருடைகள், புத்தகப்பை, காலணி,
வரைபட கிரையான்கள், நிலவரைபட நூல், கணித உபகரணங்கள், சத்துணவு ஆகியவை
வழங்கப்படுகிறது.
மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக முப்பருவ
கல்வித்திட்டத்தை அரசு கொண்டுவந்தது. அதனால், மாணவர்களின் புத்தகச் சுமை
குறைந்து தேர்வு முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. புத்தகங்கள் யாவும்
தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் அச்சடிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில்
இருந்து பள்ளிகள் வாரியாக வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் முதல் பருவப்
புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் பருவ
புத்தகங்கள் வழங்கப்பட்டது. அதேபோல், மூன்றாம் பருவ புத்தகம் வழங்குதற்கான
பணிகளை கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல்
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தம் மற்றும் நோட்டுகள், டி.இ.ஓ.,
அலுவலக வளாகத்தில் உள்ள புத்தக குடோனுக்கு வரத்துவங்கியுள்ளது.
ஆறாம், ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம்
ஒரே புத்தகமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஒரே புத்தகமாகவும்
வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஒரே
புத்தகமாகவும், கணிதம் ஒரு புத்தகமாகவும், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
ஒரே புத்தகமாகவும் வழங்கப்படும்.
அதேபோல், 80 பக்க நோட்டுகள், ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும்
தலா ஒன்று வீதம் வழங்கப்படும். தமிழ்வழி படிக்கும் மாணவர்களுக்கு
வழங்கப்படுவது போல, ஆங்கிலவழியில் அரசுப் பள்ளியில் படிக்கும்
மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
"டிசம்பர் மாதம் நடக்கும் அரையாண்டு தேர்வின் விடுமுறைக்கு
முன்னதாக, அனைத்து பள்ளிகளுக்கும் நோட்டு மற்றும் புத்தகங்கள் சப்ளை
செய்யப்படும்" என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment