"தமிழகத்தில், உயர் கல்வி பயில்பவர்கள், 19 சதவீதம் உயர்ந்துள்ளதோடு,
கல்வி திட்டத்தில், முதன்மை மாநிலமாக திகழ்கிறது" என பட்டமளிப்பு விழாவில்,
உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
ஆத்தூர் அருகே, தேவியாக்குறிச்சி
பாரதியார் கல்லூரியில், அன்னை தெரசா கலையரங்கம் திறப்பு மற்றும் மகளிர்
பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. தமிழக உயர் கல்வித்துறை
அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:
காற்றின் வேகம் குறைந்து, வெயில் அதிகம் உள்ளதால், சூரிய ஆற்றலை
மின்சக்திக்கு பயன்படுத்த வேண்டும். நெய்வேலியில், நிலக்கரி எவ்வளவு காலம்
கிடைக்கும் எனக்கூற முடியாததால், பெருகி வரும் தொழிற்சாலை, மக்கள் தொகைக்கு
ஏற்ப, சூரிய ஆற்றலை, மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, புதிய கண்டு
பிடிப்புகளை, பொறியியல் துறை மாணவர்கள் கண்டறிய வேண்டும்.
தமிழகத்தில், உயர் கல்வி படிப்பவர்கள், 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கல்வியில், தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலலிதா,
புதிதாக, 36 கலை, அறிவியல் கல்லூரி, நான்கு பொறியியல் கல்லூரி, 11 தொழில்
நுட்ப கல்லூரி என, மொத்தம் ஒரே ஆண்டில், 51 கல்லூரிகளை திறக்க
உத்தரவிட்டார்.
பொறியல் துறை படிக்கும் மாணவியர், படித்து பட்டம் பெற்றதும், வேலை,
திருமணம் என போகாமல், சூரிய ஆற்றலை, மின் சக்தியாக பயன்படுத்துதல் போன்ற
ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அன்னை தெரசா கலையரங்கம் திறந்து வைத்து, மகளிர் பொறியல்
கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கு, பட்டயச் சான்றுகளை,
அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment