தஞ்சாவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன்
கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க
வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக
கட்சியைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார்
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு
செய்ய வேண்டும்.
இந்தாண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் எந்த
கல்வி நிலையத்திலும் செயல்படுத்தப்பட வில்லை. இந்தச் சட்டப்படி 25 சதவீத
இலவச இடங்களை ஒதுக்காத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் சோழன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் சரீப் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, மேம்பாலம் அருகேயுள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளி
ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்ட 120 பேரை
போலீஸார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment