"ஆண்டுக்கு 55 லட்சம் மாணவர்கள் இங்கு படித்து பட்டம்
பெறுகின்றனர். இவர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே, வேலை
வாய்ப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்" என, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்
கோவை மண்டல தலைவர் சுந்தரராமன் பேசினார்.
இந்திய தர வட்ட மன்றம் (குவாலிட்டி போரம் ஆப் இண்டியா) கோவை
மைய துவக்க விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற இந்திய தொழில்கள்
கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) கோவை மண்டல தலைவர் சுந்தரராமன் பேசியதாவது:
"சர்வதேச அளவிலான ஒப்பீடுகள், இந்தியாவுக்கு நற்சான்று
வழங்கவில்லை. மோசமான நிலையில், இந்தியா நீடித்துக் கொண்டிருக்கிறது. பல
சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்திய அளவில் கூட போட்டியில்
பங்கேற்கவில்லை.
சர்வதேச தொழில் போட்டியில் 133 நாடுகளுடன் ஒப்பிடுகையில்,
இந்தியா 49வது இடத்தில் உள்ளது. சுகாதாரத்தில் 107வது இடத்தில் உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் கூட சுகாதாரம் நன்றாக இருக்கிறது.
ஆண்டுக்கு 55 லட்சம் மாணவர்கள், இங்கு படித்து பட்டம்
பெறுகின்றனர். இவர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே
வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்கள்; மூன்று சதவீதம் பேர் மட்டுமே
திறமையானவர்கள்.
"இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; ஒட்டுமொத்த வளர்ச்சி
விகிதம், நன்றாக இருக்கிறது" என, கூறுவதெல்லாம் எவ்வளவு தூரம் சரியானதாக
இருக்கும் என்பதை மதிப்பிட முடியாது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் நான்கு
சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது; தொழில் துறையில் பின்தங்கிய
நிலையில் உள்ளது." இவ்வாறு, சுந்தரராமன் பேசினார்.
No comments:
Post a Comment