டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு
பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம்.
ஆண்டுதோறும், ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில், துறை தேர்வுகள்
நடத்தப்படுகின்றன. அதன்படி, டிசம்பரில் நடக்கும் துறை தேர்வுகளுக்கான
அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை,
தேர்வாணைய இணையதளம் வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
"டிசம்பர், 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை - 25ம் தேதி தவிர, தேர்வுகள் நடக்கும்" என தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment