ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மொபைல் போனை கண்டுபிடிக்கும் நவீன கருவியை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், பள்ளிகளில் உள்ள தடை
உத்தரவையும் மீறி மாணவ, மாணவியர், மொபைல் போன்களை, ஆசிரியருக்கு தெரியாமல்
கொண்டு சென்று, "சைலண்ட் மோடில்" வைத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு மறைத்து வைக்கப்படும் மொபைல் போன்களை
கண்டுபிடிக்கும் நவீன கருவியை, அமெரிக்காவின், "பர்க்லே வேரிட்ரானிக்ஸ்"
என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. இதன் மூலம், வகுப்பறையில், எந்த திசையில்
மொபைல் போன் இருந்தாலும், அது பற்றிய தகவலை, இந்தக் கருவி
தெரிவித்துவிடும்.
"பாக்கெட் ஹவுண்ட்" என்றழைக்கப்படும் இந்த கருவி, அதன்
அருகில், மொபைல் போன் வைக்கப்பட்டிருந்தால், அது பற்றி தெரிவிக்கும்
வகையில், அதிர்வை ஏற்படுத்தி ஒளிரும். பேட்டரியால் இயங்கும், இந்தக்
கருவியில் பொருத்தப்பட்டுள்ள "ஆண்டனா" எந்த திசையில் மொபைல் போன்
வைக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தெரிவிக்கும். இதில் உள்ள, "ரிசீவர்",
எல்லாவிதமான போன்களையும் "ஸ்கேன்" செய்யும்.
No comments:
Post a Comment