கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஆறு யூனியன்களை சேர்ந்த
பெண்களுக்கு, நேரு இளையோர் மையம் சார்பில் இலவச தையல் பயிற்சி,
கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி வழங்கவுள்ளதால்
தகுதியானவர்கள் வரும் அக்டோபர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் கிராம புற
பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி, கணினி அடிப்படை பயிற்சி, அழகுகலை
பயிற்சி கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், சூளகிரி, ஓசூர்,
கெலமங்கலம் ஆகிய, ஆறு யூனியன்களை சேர்ந்த 180 பெண்களுக்கு மூன்று மாத காலம்
தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு தேசிய தொழிற்
பயிற்சி மைய சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள்,
18 வயதுக்கு மேல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச கல்வி
தகுதியாக, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிருஷ்ணகிரி
மாவட்டத்தை சேர்ந்தவர்களாக மட்டும் இருக்க வேண்டும்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையத்துடன் இணைந்த
மகளிர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு
மற்றும் தொண்டு நிறுவன பிரநிதிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்று
திறனாளி பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு பயிற்சியில் சேர
முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில்
உள்ள நேரு இளையோர் மைய அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு விண்ணப்பத்துடன்
இருப்பிட சான்று, கல்வி சான்று, பள்ளியின் மாற்று சான்று நகல் மற்றும்
மார்பளவு ஃபோட்டோவுடன் வரும் அக்டோபர், 5ம் தேதிக்குள் "நேரு இளையோர்
மையம், 515/ சி., காமராஜர் நகர், ராயக்கோட்டை ரோடு, பெத்ததாளப்பள்ளி
அஞ்சல், கிருஷ்ணகிரி -635002" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment