ஆசிரியர் தகுதி மறுதேர்வை தமிழகம் முழுவதும் 1,094
தேர்வு மையங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.
விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 11.8 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது.
இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததால், எந்தவிதப் பிரச்னையும் இன்றி மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வு அமைதியாக நடைபெற்றது.
முதல் தாளில் ஆங்கிலப் பகுதி கடினம்: ஏற்கெனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்து வெளியே வந்ததும் பல தேர்வர்கள் கேள்விகளைப் படித்துப் பார்க்கக் கூட நேரம் போதவில்லை என்று புகார் தெரிவித்தனர். அதனால், தேர்வு நேரம் 90 நிமிஷங்களிலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்வு எழுத போதிய நேரம் இருந்ததாகத் தேர்வர்கள் தெரிவித்தனர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய ஒருவர் கூறும்போது, உளவியல் பிரிவில் சில கேள்விகள் புரியவில்லை. ஆங்கிலம் சற்றுக் கடினமாக இருந்தது. ஆனால், தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
இத் தேர்வில் முதல் தாளை எழுதுவதற்காக தமிழகத்தில் 3 லட்சத்து 10,941 பேர் விண்ணப்பித்திருந்தனர். 36,529 பேர் தேர்வு எழுதவில்லை.
தமிழ்க் கேள்விகள் புரியவில்லை: இரண்டாம் தாளில் தமிழ்ப் பகுதியில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய பார்வைத் திறன் இல்லாத மாணவர் அஃப்ரோஸ் கூறியது:
ஆங்கிலப் பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. தமிழ்ப் பகுதி வினாக்களுக்கு விடையளிக்க மிகவும் சிரமப்பட்டேன். உளவியல் பிரிவும் சற்று சிரமமாக இருந்தது. எனினும் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
இப்போது, சென்னை புது கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் இலங்கநாதபுரத்தைச் சேர்ந்த வி.அமுதா கூறியது:
தேர்வு எழுத அதிகமான நேரம் இருந்தது. நன்றாகப் படித்தவர்களுக்கு இந்தத் தேர்வு சற்று எளிமையானதாக இருந்தது. ஆனால், தமிழ் வினாக்கள் கடினமாக இருந்தன.
வளிமண்டலத்தில் எத்தனை அடுக்குகள் என்ற கேள்விக்கான விடைகளில் சரியான விடை இடம்பெறவில்லை என்றார்.
இரண்டாம் தாள் எழுதுவதற்கு 4 லட்சத்து 23,095 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 49,300 பேர் தேர்வு எழுதவில்லை.
வெடிகுண்டு மிரட்டல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி தேர்வுகள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில்...: சென்னையில் இரண்டு தாள்களையும் சேர்த்து 41,106 பேர் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 8,259 பேர் தேர்வு எழுதவில்லை.

No comments:
Post a Comment