தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு,
6.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்றைய தேர்வில், 23
சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.
கடந்த முறையைப் போல், தேர்வு கடினமாக இருக்கும் என்ற அச்சத்தில், 1.40 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள், ஒரு மாதத்தில் வெளியாகும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த, இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், முதன்முறையாக, ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஜூலை, 12ம் தேதி நடந்தது. இதில், தேர்வு எழுதியவர்கள், 6.71 லட்சம் பேர்.
இந்த தேர்வில் பங்கேற்றவர்களில், வெறும்,
2,448 பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 0.36 சதவீதம்
மட்டுமே.இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்த,
17 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.16 லட்சம் பேருக்கு, நேற்று மறுதேர்வு
நடந்தது. தேர்வுக்காக, 1,094 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு எழுத
விண்ணப்பித்திருந்த, 6.16 லட்சம் பேரில், 1.40 லட்சம் பேர்,
பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment