அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம்
வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள்
வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், எட்டாம்
வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டம் அமலில் உள்ளது. அடுத்த ஆண்டில்,
ஒன்பதாம் வகுப்பிற்கும் நீட்டிக்கப்படுகிறது. அதற்காக, ஒன்பதாம் வகுப்பு
பாடப் புத்தகங்களை, மூன்று பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கும் பணி, கல்வித்
துறையில் தற்போது நடந்து வருகிறது.
இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்
ஈடுபட்டுள்ளனர். இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் மேற்பார்வையில்,
பணிகளை முடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்களில்
உள்ள பிழைகளை சரி செய்யும் பணியும், வேகமாக நடந்து வருகிறது.
அனைத்துப் பணிகளையும் முடித்து, மாத இறுதிக்குள், மூன்று பருவத்திற்கான
பாடப் புத்தக பகுதிகளை, பாட நூல் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாட நூல் வட்டாரம் கூறியதாவது: 9ம் வகுப்பு பாடப்
புத்தகங்கள் அச்சிடும் பணி, நவம்பரில் துவங்கும். தற்போது, 8ம் வகுப்பு
வரை, பருவத்திற்கு, இரு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பில்,
பாடத் திட்டங்கள் அதிகம்.
எனவே, ஐந்து பாடப் புத்தகங்களை, பருவத்திற்கு, மூன்று புத்தகங்களாக
வழங்க திட்டமிட்டுள்ளோம். 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு,
மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை அச்சிட, 140 அச்சகங்களுக்கு,
தற்போது, ஆர்டர் வழங்கி வருகிறோம். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment