ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வரும் 14ம் தேதி நடத்தப்பட உள்ள,
டி.இ.டி. மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாநிலம்
முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
ஜூலையில் நடந்த, டி.இ.டி.,
தேர்வில், 6.67 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில், 2,448 பேர் தேர்ச்சி
பெற்றனர். இதில், தோல்வி அடைந்த தேர்வருக்காக, இம்மாதம், 3ம் தேதி,
மறுதேர்வு நடக்க இருந்தது; பின், புதிய தேர்வர்களும், தேர்வில்
பங்கேற்பதற்கு வசதியாக, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்காக, கடந்த மாதம், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 17 ஆயிரம் பேர்
விண்ணப்பித்தனர். இதையடுத்து, 6.82 லட்சம் பேர், 14ம் தேதி நடக்கும்
தேர்வில் பங்கேற்கின்றனர். 1,000த்திற்கும் மேற்பட்ட மையங்களில், தேர்வுகள்
நடக்கின்றன.
காலையில், இடைநிலை ஆசிரியருக்கான முதல்தாளும், பிற்பகலில், பட்டதாரி
ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இரு தேர்வுகளும், தலா,
150 மதிப்பெண்களுக்கு நடக்கும். தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் என,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வை கண்காணிக்க, டி.ஆர்.பி., உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment