ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716
பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு,
இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
டி.இ.டி., முதல் தாளில் தேர்ச்சி
பெற்றவர்கள், தற்போதுள்ள நடைமுறை விதிகளின்படி, வேலைவாய்ப்பு பதிவு
முன்னுரிமை அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு, தேர்வு
செய்யப்பட உள்ளனர். எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு பதிவை பதிவு
செய்துள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில், இம்மாதம், 31ம்
தேதி ஆஜராகி, வேலைவாய்ப்பு பதிவு அட்டையின், சான்றொப்பமிட்ட இரு நகல்களை,
சமர்ப்பிக்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்த்தலுக்காக அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தின் நகலையும்,
"ஹால் டிக்கெட்' நகலையும், எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வுக்கான புதிய விதிமுறையின்படி, டி.இ.டி., தேர்வில் பெறும்
மதிப்பெண்கள், "வெயிட்டேஜ்' அடிப்படையில், 60 மதிப்பெண்களுக்கு
கணக்கிடப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத்
தேர்வில் பெறும் மதிப்பெண்கள், வெயிட்டேஜ் அடிப்படையில், 40
மதிப்பெண்களுக்கும் கணக்கிட்டு, 100 மதிப்பெண்களுக்கு, தேர்வர் பெறும்
மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர்.
அதன்படி, இடைநிலை ஆசிரியரைப் பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15, ஆசிரியர்
கல்வி பட்டய படிப்பிற்கு, 25 மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 என, 100
மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
இதனால், பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில், 1,716 பேர்
பெற்ற மதிப்பெண் விவரங்களை ஊர்ஜிதப்படுத்தவும், சான்றிதழ் நகல்களை பெறவும்,
இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் வருமாறு, டி.ஆர்.பி., அழைப்பு
விடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான அறிவிப்பு, இன்று வெளியாகும் என
தெரிகிறது.
trb going to give weightage ,what about group they studied in plustwo .for example my marks in tenth 450 and plustwo 960 in maths group my friend tenth marks 254 and plustwo marks 987 in vocational group. will they give equal marks to both of us if we passed in tet
ReplyDeleteDate
ReplyDelete