இன்று நடந்த டி.இ.டி., தேர்வில் கணித பாடத்தில் கேள்விகள்
குறைக்கப்பட்டதும், கடினமாக இருந்ததாலும் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
டி.இ.டி., தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு இன்று மீண்டும் தேர்வு
நடத்தப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 6.16
லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்டனர். மதியம் நடந்த இரண்டாவது தேர்வில்,
அறிவியல், உளவியல், கணிதம் என ஒவ்வொரு பாடத்திலும் 30 கேள்விகள் கேட்கப்பட
வேண்டும். ஆனால் கணிதத்தில் 30 கேள்விகளுக்கு பதில் 20 கேள்விகளே
கேட்கப்பட்டன. இதற்கு பதில் அறிவியலில் கூடுதலாக 10 கேள்விகள்
சேர்க்கப்பட்டு 40 கேள்விகள் கேட்கப்பட்டன. கணிதத்தில் கேட்கப்பட்ட
கேள்விகள் கடினமாகவும் இருந்துள்ளது. இதனால் 20 மதிப்பெண்களை அனைத்து
மாணவராலும் பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணித பிரிவு
மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.pack
:
No comments:
Post a Comment