இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர் ஆசிரியைகள்.
pack
:
டி.இ.டி.: 1,716 பேருக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வில், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 1,716
பேர், புதிய விதிமுறைகளின்படி தேர்வு செய்ய இருப்பதால், அவர்களுக்கு,
இம்மாதம், 31ம் தேதி, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
தமிழில் தடுமாறும் அரசு பள்ளி மாணவர்கள்
ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
டி.இ.டி. மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு
டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம்
முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ
வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு ஊழியருக்கு "லேப்டாப்' : பி.எஸ்.என்.எல்., சலுகை
பி.எஸ்.என்.எல்., மற்றும் அரசு ஊழியர்களுக்கு, 10 முதல் 12.5 சதவீத
தள்ளுபடியில் "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது.
2.1 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே நடவடிக்கை
மத்திய அரசுக்கு சொந்தமான ரயில்வே துறையில் பாதுகாப்பு தொடர்பான
பிரிவுகளில் 90 ஆயிரம் பணியிடங்கள் உட்பட 2.1 லட்சம் காலிப் பணியிடங்களை
நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க பள்ளிகளுக்கு நிதி
மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவங்க, 59 பள்ளிகளுக்கு ரூ.1.47 லட்சம் வழங்கப்பட்டது.
எஸ்.எஸ்.ஏ., தொகுப்பூதிய ஊழியர் கோரிக்கை நிராகரிப்பு
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தில், பணியாற்றி வரும், 5,000
தொகுப்பூதிய ஊழியர்களின், பணி வரன்முறை கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என,
இயக்ககம் கைவிரித்து விட்டது.நாடு முழுவதும், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து
மாணவ, மாணவியருக்கும் கல்வி அளிக்கும் நோக்கில் எஸ்.எஸ்.ஏ., திட்டம், 2002ல் துவக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர்: 55 பணியிடங்கள் காலி-dinamalar
தமிழகத்தில் காலியாக உள்ள 55 மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஒ.,)
பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பள்ளி கல்வி துறையில், மாவட்ட
கல்வி அலுவலர்களின் பணிகள் முக்கியம். முப்பருவ கல்வி முறையில் முழுமையான
தொடர் கல்வி மதிப்பீடு, மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா பொருட்கள்
வழங்குவது, பள்ளி ஆண்டாய்வு, கல்வி தரம் ஆய்வு, பொது தேர்வுகள், தனியார்
பள்ளிகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்கள் மற்றும் சம்பளம் வழங்கலுக்கான
ஒப்புதல் போன்ற பணிகளில் டி.இ.ஓ.,க்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளி மாணவர் ஜப்பான் சுற்றுலாவுக்கு தேர்வு
கிராமப்புற பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர், கல்வித்துறை சார்பில் ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு: நவம்பர் 10க்குள் புதிய பட்டியல்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே வெளியிட்ட, 2,895 முதுகலை ஆசிரியர்
தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய பட்டியலை தயாரிக்க வரும் 30, 31ம் தேதிகளில், மீண்டும் சான்றிதழ்
சரிபார்ப்பை டி.ஆர்.பி. நடத்துகிறது.
நவம்பர் 4ல் குரூப்-2 மறுதேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குரூப்-2 தேர்வுக்கான
வினாத்தாள் முன்பாகவே வெளியானதால், அந்தத் தேர்வை டி.என்.பி.எஸ். ரத்து
செய்த நிலையில், அதற்கான மறுதேர்வு நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருச்சி, ஊட்டி, குன்னூர் பள்ளிகளுக்கு நாளை (22.10.20120 விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி
நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலேரா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை
காரணமாக நீலகிரி மாவட்டம் , ஊட்டி, குன்னூர் கோத்தகிரி, குந்தா ஆகிய
பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு ஆட்சேபங்களை சமர்ப்பிக்கலாம்
விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை trb.tn@nic.in என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பலாம்.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விடைகள் தொடர்பான ஆட்சேபங்களை தேர்வர்கள் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான சரியான விடைகள் மேற்கண்ட இணையதளத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 22) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல்
நாளை வெளியீடு: மாநிலம் முழுவதும் 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்காக கடந்த மே மாதம் தேர்வு
நடத்தப்பட்டது.
"ஆதிதிராவிடர் பள்ளி விடுதிகள் மோசம்"
"தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளி விடுதிகள், மிக
மோசமான, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன" என தேசிய குழந்தை உரிமைகள்
பாதுகாப்பு ஆணைய தலைவர், சாந்தா சின்கா கூறினார்.
224 தலைமை ஆசிரியர்கள் நியமனம்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்-லைன்
வழியாக, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர்,
தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
மாநகராட்சி பள்ளிகளில் சாக்பீஸ், கரும்பலகைக்கு குட்பை
மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் மத்தியில் கம்ப்யூட்டர் அறிவை
மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ்
வகுப்புகளை துவக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேர் சான்றிதழ் இன்றி தவிப்பு
கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு வழங்க தடை
கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு, இந்த மாதம், 30ம் தேதி வரை,
நியமன உத்தரவுகளை வழங்க, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை
விதித்துள்ளது.
குரூப்-2 நியமன உத்தரவு வழங்க உயர் நீதிமன்றம் தடை
குரூப்-2 பணிகளுக்கு, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு, இந்த
மாதம், 29ம் தேதி வரை, நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை உயர் நீதிமன்றம்
தடைவிதித்து உள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி
சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்
தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்,
விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த, 2008- 09, 2009- 10, 2010-
11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை
நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது.
கல்வித்துறையில் தகவல் மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை
தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த
தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை,
ஆன்லைனில் பெறலாம்.
"ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாவிட்டால் பள்ளிகளை மூடுங்கள்"
"துப்புரவு தொழிலாளர்களை விட, ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம்
வழங்கப்படுகிறது; நியாயமான சம்பளம் வழங்க முடியாவிட்டால், பள்ளிகளை
மூடிவிடலாம்" என, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.2000லிருந்து ரூ.5000/- ஆக உயருமா ?
இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன் பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும்,
தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களை தத்தெடுக்க உத்தரவு
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10 ,12ம் வகுப்பில் தலா
பத்து மாணவர்களை தத்தெடுத்து, தினமும் அவர்களை கண்காணிக்க அரசு
உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக 143 பேர் பதவி உயர்வு
பள்ளிக் கல்வித்துறை, நேற்று நடத்திய பதவி உயர்வு கலந்தாய்வில், 143
பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
10 நாட்களில் டி.இ.டி தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு
ஆசிரியர் தகுதி மறுதேர்வின், "கீ-ஆன்சர்" 10 நாட்களில்
வெளியிடப்படுகிறது. அக்டோபர் 14ல் நடந்த, டி.இ.டி., மறு தேர்வில், 4.75
லட்சம் பேர் பங்கேற்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246 பேருக்கு முதலில் பணி நியமனம்- தினமணி செய்தி
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2,246
பேருக்கு முதலில் பணி நியமனம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய
வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூனில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - 1.40 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்விற்கு,
6.16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்றைய தேர்வில், 23
சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.
நவம்பர் இறுதியில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள்
ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வரும் நவம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: எளிமையாக இருந்தது வினாத்தாள்!
ஆசிரியர் தகுதி மறுதேர்வை தமிழகம் முழுவதும் 1,094
தேர்வு மையங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.
விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 11.8 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை.
இன்றைய TN-TET தேர்வு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
இன்று நடைபெற்ற தேர்வில் கேள்விகள் பழைய தேர்வைப் போன்றே கடினமாக இருந்தது என்றும், இதற்கு 3 மணி நேர கால அளவு தேவையற்றது 2 அல்லது 2.30 மணிநேரம் போதுமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 1 முதல் 8 வரை கட்டாயக் கல்விச் சட்டம் காரணமாக இத்தேர்வு நடத்தப்பெற்றாலும் பாடப்பகுதிகள் 12ஆம் வகுப்பையும் தாண்டிய கடினப்பகுதியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
டி.இ.டி., தேர்வு: கணிதப்பிரிவு மாணவர்கள் ஏமாற்றம்
இன்று நடந்த டி.இ.டி., தேர்வில் கணித பாடத்தில் கேள்விகள்
குறைக்கப்பட்டதும், கடினமாக இருந்ததாலும் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
டெங்கு காய்ச்சல் – வருமுன் காக்க வழிகள் – தடுப்பு முறைகள்
டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது...?
டெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன.
click here for pledge-நாம் இந்த உறுதிமொழியை தினம் மாணவர்களை படிக்கவைத்து விழிப்புணர்வை கொஞ்சம் ஏற்படுத்தலாமே!...
டெங்கு காய்ச்சல் டெங்கு 1,2,3,4 என நான்கு வகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். ஏடிஸ் எஜிப்டை என்ற வகை கொசுக்களினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. அவை மலேரியாவைப் பரப்பும் கொசுக்களிலிருந்து மாறுபட்டவை. அவை பொதுவாக பகலில் மட்டுமே கடிக்கின்றன.
click here for pledge-நாம் இந்த உறுதிமொழியை தினம் மாணவர்களை படிக்கவைத்து விழிப்புணர்வை கொஞ்சம் ஏற்படுத்தலாமே!...
வேலூர் CEO மாற்றம்!...
வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக திரு.செங்கூட்டவன் (திருவண்ணாமலை செய்யாரை சேர்ந்தவர் ) அவர்கள் இன்று காலை 8.30 பதவி ஏற்றார். தற்பொழுது வந்துள்ள திரு.செங்குட்டவன் அவர்கள்
பள்ளிக்கல்வித்துறையில் துணை இயக்குநர் பதவியிலிருந்து வேலூர் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலராக பதவி ஏற்றுள்ளார்.
டி.இ.டி., தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள்
நாளை டி.இ.டி., மறு தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற சில ஆலோசனைகள்:
பத்தாம் வகுப்பு நேரடி தனி தேர்வர் விண்ணப்பங்கள்: ஆயிரக்கணக்கில் நிராகரிப்பு
தமிழகம் முழுவதும், இம்மாதம், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தனி
தேர்வு துவங்க உள்ள நிலையில், எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக,
10ம் வகுப்பு தனி தேர்வுக்கு விண்ணப்பித்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் செய்முறை பயிற்சியில்
பங்கேற்காததால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் 15ம் தேதி பாரிமுனைக்கு மாற்றம்
சென்னை, ஆயிரம் விளக்கு,
கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம், 15ம் தேதி
முதல், பாரிமுனையில் உள்ள புதிய கட்டடத்தில் இயங்க உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகளை அறிய இணையதளம்
மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உரிமைகள், சட்டங்கள் போன்றவற்றை
அறிந்து கொள்வதற்கு, மாத இதழும், இணையதளமும் வெளிவர இருக்கின்றன. தமிழ்நாடு
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான
சங்கத்தின் சார்பில், "ஊனமுற்றோர் உரிமைக்குரல்" மாத இதழ், வெளிவர
இருக்கிறது.
அஞ்சல் வழி கற்கும் பாடங்களில் அங்கீகரிக்கப்படுபவவை எவை?: அரசு விளக்கம்
அஞ்சல் வழியாக கற்கும் பாடங்களில் அரசு பணி நியமனத்தின்போது
ஏற்றுக் கொள்ளக் கூடிய படிப்புகள் எவை என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்காதீர்:கல்வித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
பள்ளிகளில் புகார்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
மதுரை டிவிஎஸ் மெட்ரிக். பள்ளியில் மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
15ல் எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்
எஸ்.எஸ்.எல்.சி தனித்தேர்வுகள் வரும் 15ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்காக 3
மாவட்டங்களில் நேற்று (11ம் தேதி) முதல் ஹால் டிக்கெட்கள் வழங்கும் பணிகள்
தொடங்கின.
அறிவியல் செய்முறை பயிற்சி: பதிவு செய்ய அக்டோபர் 31 இறுதிநாள்
அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத
விரும்பும் தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க,
இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என,
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
TET- புதிய விதிமுறைகளால் தேர்வர்கள் அதிருப்தி
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு
வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத
அளவிற்கு, கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இணையதளத்தில் வெளியிட பள்ளிகளின் புள்ளிவிவரம் சேகரிப்பு
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு
வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான
விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு
பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்,
அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.
கேட் தேர்வுகள் தொடக்கம்: ஜனவரி 9ம் தேதி ரிசல்ட்
ஐஐஎம் போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக
நடத்தப்படும் கேட் தேர்வு இன்று தொடங்கி வரும் நவம்பர் 6ம் தேதி வரை
மொத்தம் 21 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் ஜனவரி 9ம் தேதி
வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய மதிப்பெண் மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி
வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி
மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
முப்பருவக் கல்வி: ஒன்பதாம் வகுப்பிற்கு 3 புத்தகங்கள்
அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம்
வகுப்பும் வருகிறது. இவ்வகுப்பிற்கு, பருவத்திற்கு, மூன்று புத்தகங்கள்
வீதம் வினியோகிக்க, பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.
14ல் டி.இ.டி. மறுதேர்வு: 6.82 லட்சம் பேர் எழுதுகின்றனர்
ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வரும் 14ம் தேதி நடத்தப்பட உள்ள,
டி.இ.டி. மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாநிலம்
முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
ஆன்-லைனில் பட்டதாரி ஆசிரியர் நியமன கவுன்சிலிங்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்டோபர் 10, தேதி நடக்கிறது.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை
பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு
மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அரசு பேருந்துகளில் மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல முடிகிறதா?
தனியார் பள்ளி மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை
குறிப்பிட்ட வழித் தடங்களில் இயக்க உத்தரவிட வேண்டும் என, தாக்கலான
மனுவிற்கு பதிலளிக்க, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை உயர் நீதிமன்றக்
கிளை உத்தரவிட்டது.
சிவகாசி தென்மண்டல குழந்தை
உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் அருணோதய எர்ஸ்கின் தாக்கல் செய்த
மனு: சென்னையில், பள்ளி வேனில் சென்ற, 6 வயது குழந்தை, அதே வேன் ஓட்டை
வழியாக விழுந்து பலியானது. இதைத் தொடர்ந்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு
குறித்து, அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம், (கல்வி நிறுவன வாகனங்கள் ஒழுங்குமுறைச்
சட்ட சிறப்பு விதிகள் 2012) அரசு கொண்டு வர உள்ளது. அரசு அல்லது அரசு உதவி
பெறும் பள்ளிகளில் தான், 67 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக அரசு,
27.2 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. அவர்கள் தினமும்
பல இடையூறுகளை சந்தித்து, அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.
அரசு பஸ் ஓட்டுனர்கள் உரிய இடங்களில் நிறுத்துவதில்லை. மாணவர்கள் ஓடிச்
சென்று, பேறுந்துகளில் ஏற வேண்டியுள்ளது. பேருந்துகளில் கம்பிகள் நீட்டிக்
கொண்டும், இருக்கைகள் கிழிந்தும் உள்ளன. தனியார் பள்ளி வாகனங்களுக்கு,
கடும் விதிமுறைகளை அரசு வகுக்கிறது. ஆனால், அரசு பஸ்களில் பாதுகாப்பு
அம்சங்கள் குறித்து கண்டுகொள்வதில்லை.
மாணவர்களுக்கு, தனி பேருந்துகளை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க
வேண்டும். அனுபவம் வாய்ந்த டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்க வேண்டும்;
அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு
உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பினேன். மனு
மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் பி.பி.எஸ்.ஜனார்த்தன ராஜா, எம்.துரைசாமி கொண்ட அமர்வு
முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.நாராயணன்
ஆஜரானார். தலைமைச் செயலர், போக்குவரத்துத் துறை செயலர், பள்ளிக் கல்வித்
துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு 9% கட்டணம் அதிகரிப்பு
"தனியார் பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு, 9 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி
நிர்ணயித்துள்ளோம்" என, கட்டண நிர்ணய குழுத் தலைவர், சிங்காரவேலு கூறினார்.
அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல்
கட்டணங்களை திருப்பித் தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில், @நற்று அவர்
கூறியதாவது: இதுவரை, 1,000 பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளோம்.
புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 400 பள்ளிகள்
வழக்கு தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கு, டிசம்பருக்குள், புதிய கட்டணம்
நிர்ணயிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது.
முதல் கட்டமாக, 200 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை
நிர்ணயித்து விட்டோம். இம்மாத இறுதிக்குள், கட்டண விவரம், அரசு
இணையதளத்தில் வெளியிடப்படும். மீதமுள்ள, 200 பள்ளிகளிடம், விசாரணை நடந்து
வருகிறது.
நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பரிலோ, அந்தப் பள்ளிகளுக்கான கட்டண
விவரம் வெளியிடப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கான
கல்வி கட்டணங்களை, தனித்தனியே அட்டவணையிட்டு வழங்குகிறோம்.
விலைவாசி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில்
கொண்டு, ஆண்டுக்கு, 9 சதவீதம் வீதம், கட்டணத்தை உயர்த்தி
நிர்ணயித்துள்ளோம். "ஸ்மார்ட் வகுப்புகள்&' நடத்துவதாக கூறி, பல
பள்ளிகள் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன.
தற்போது, அந்த வகுப்புகளுக்கும் சேர்த்தே, கட்டணம் நிர்ணயிக்கிறோம்.
எனவே, இனி, அதற்கென தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிக கட்டணம் வசூலித்த
பள்ளிகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித்
தந்துள்ளன.
கூடுதல் கட்டணங்களை திருப்பி வழங்கியதற்கான ஆவணங்களை காட்டாவிட்டால்,
மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டு, உறுதி செய்து கொள்கிறோம்.
இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.
பத்தாம் வகுப்பு தனி தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்&' வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், எஸ்.எஸ்.எல்.சி., -
ஓ.எஸ்.எல்.சி., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வுகள், அக்டோபர் 15ம்
தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக் தனித் தேர்வு, அக்டோபர்
15ம் தேதி துவங்கி, 29ம் தேடி வரை நடக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, வரும் 11ம் தேத் முதல் 13ம்
தேதி வரை, தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் வெளியிடும் மையங்களில்,
ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வர், நேரில் சென்று, ஹால் டிக்கெட்டை பெற
வேண்டும். ஹால் டிக்கெட் கிடைக்காதவர், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை
அணுகலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
நேரடி தொடர்பு கொள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு
கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள்
நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி
தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து
வருகிறது.
தமிழகத்தில், ஒன்று முதல், 12ம்
வகுப்பு வரை, இந்த தகவல் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, பள்ளியில் அடிப்படை
கட்டமைப்பு, குடிநீர், கழிவறை வசதிகள், ஆசிரியர்கள் கல்வி தகுதி, இனத்
தகுதி, மாணவர்களின் இன மற்றும் வகுப்பு வாரி விவரங்கள் உட்பட பல விவரங்களை
சேகரித்து, கணினியில் பதிவு செய்ய உள்ளனர்.
இதன்மூலம், மாநிலத்தில், கடைக்கோடியில் உள்ள பள்ளியின் தலைமை
ஆசிரியரிடம், பள்ளி குறித்து, மாநில அலுவலர்கள் நேரிடையாக விவாதிக்கவும்,
தகவல் சேகரிக்கவும் முடியும். இதற்காக, தனி இணையதளம் துவக்கப்பட உள்ளது.
விவரங்களை சேகரிக்கும் பணியில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி
திட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)