நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட,
ஒன்பது தென் மாவட்டங்களில், 18,650 ஏக்கரில், ஒன்பது தொழில் பூங்காக்கள்
அமைக்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
pack
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல்
படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.பெங்களூர் பல்கலைக்கழகத்தின் இயற்கை
அறிவியல் மையம் (ஸ்கூல் ஆப் நேச்சுரல் சயின்ஸ்) வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: இப்பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் மையத்தின் கீழ்,
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் (இன்டகிரேடட் எம்.எஸ்சி இன்
பயாலஜிகல் சயின்ஸ்) பாடப் பிரிவு நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 13 முதல் விண்ணப்பம் விநியோகம்
2013-14 கல்வியாண்டின் கால்நடை மருத்துவ
படிப்பில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு
சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இளங்கலை தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது.
ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி
நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும்
வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள்
காத்திருக்கின்றன.
ஊழியர் பற்றாக்குறை: முதன்மை கல்வி அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை- Dinamalar
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், ஊழியர் பற்றாக்குறை
நிலவுதால், அங்கு பணிபுரிவோர் கூடுதல் பணிச்சுமையால் பெரும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
அரசு திரைப்பட நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ
"எம்.ஜி.ஆர்., அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனத்தில், இந்த ஆண்டு முதல், அனிமேஷன் தொடர்பான டிப்ளமோ படிப்பு
துவங்கப்படும்" என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பி.டெக்.
படிப்பில் மாணவர்களை சேர்க்க மே 15ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்க
உள்ளது.
ஜேஇஇ-மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ(மெயின்) தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?
பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது
என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை
நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம். அதற்கு
முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்
அரசு அறிவிப்புப்படி கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ், ஏழை
மாணவியை ஒன்றாம் வகுப்பு சேர்க்க இழுத்தடித்த தனியார் பள்ளி நிர்வாகம்,
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், அந்த மாணவிக்கு விண்ணப்பம் வழங்கி
உள்ளது.
19 ஆயிரம் மாணவருக்கு இலவச லேப்டாப் வழங்கல்
"நாமக்கல் மாவட்டத்தில், 19 ஆயிரத்து, 167 பேருக்கு, விலையில்லா
லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது" என, விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சர்
தங்கமணி பேசினார்.
கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை
கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர்களுக்கும் உதவியாளர் பணி
வழங்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை
பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி
முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில், குறைந்து வரும்
மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்கும் வகையில், ஆங்கில வழிக் கல்வி கற்பிக்க
நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி
அரசு கலை அறிவியல் கல்லூரியில், விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.
மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். தமிழகம் முழுவதும்
உள்ள, 8.5 லட்சம் மாணவ மாணவியர், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதியுள்ள
நிலையில், வரும் 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், நேற்று துவங்கியது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை
"பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ,
மாணவியர்களின் உயிரிழப்பை தடுக்க குட்டைகள், ஏரிகள், கற்கள் தோண்டப்பட்ட
குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளை, பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை
அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாய
பாடமாக்க உத்திர பிரதேச அரச உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல்
போதிய அளவு ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்
பி.ஏ., - பி.எல்., (ஹானர்ஸ்) மற்றும், பி.ஏ., - பி.எல்., ஐந்தாண்டு
சட்டப் படிப்புகளுக்கும், வரும், 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட
உள்ளன.
மாணவியருக்கு விளையாட்டு: சவுதி அரேபிய அரசு அனுமதி
சவுதி அரேபிய அரசு, தனியார் பள்ளிகளில், மாணவியர் விளையாடுவதற்கு,
அனுமதி வழங்கி உள்ளது. அரேபியாவில், பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டு உள்ளன. வீட்டை விட்டு வெளியே வரும் போது, பர்தா அணிய
வேண்டும்; வாகனங்கள் ஓட்ட அனுமதி கிடையாது; விளையாடுவதற்கும் அனுமதி
இல்லாமல் இருந்தது.
454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது
நாமக்கல் மாவட்டத்தில், 454 மாணவ, மாணவியருக்கு, ராஜ்ய புரஸ்கார் விருது
வழங்கப்பட்டது.சாரண, சாரணீய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ,
மாணவியருக்கு, மாநில அளவில், உயரிய விருதான, ராஜ்ய புரஸ்கார் விருது, மாநில
ஆளுனர் வழங்கி வருகிறார்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்
முறை, கட்டணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை இணையதளங்களில் பெறலாம்.
தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து- Dinamalar
தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஏப்ரல் 21ம் தேதி முதல், ஜூன்
2ம் தேதி வரை, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை
விடுமுறைக்கு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும்
விடுமுறையில் இருப்பர்.
9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கும்,
முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட
உள்ளது. இதற்கான முதல்கட்ட மாநில அளவிலான பயிற்சி முகாம் சென்னையில்
நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற 2015 வரை ஐகோர்ட் கெடு
"ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், 2015 மார்ச் 31ம்
தேதிக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், ஏற்படும் காலிப்
பணியிடங்களில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
மனுதாரர்களுக்கு, கல்வி அதிகாரிகள் தற்காலிக அங்கீகாரம் வழங்க வேண்டும்" என
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
25% இடஒதுக்கீடு சேர்க்கை: தனியார் பள்ளிகள் "கப்சிப்"
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு
இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என, பல மாதங்களாக,
கல்வித்துறை அதிகாரிகள், வாய்வலிக்க பிரசாரம் செய்த போதும், அதை, பள்ளி
நிர்வாகங்கள், சட்டை செய்யவில்லை.
தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
தமிழகத்தில்
6வது பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இப்பணியில்
ஈடுபட பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்
நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்,
இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள்
இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
யு.பி.எஸ்.சி., தேர்வு: தமிழக அளவில் சென்னை மருத்துவர் முதலிடம்
"மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்"
என யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற அருண் கூறினார்.
எம்.பில்., பிஎச்.டி., ஆய்வு பட்டம் - பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கிடுக்கிபிடி
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆய்வு
பட்டங்களை தரப்படுத்தும் வகையிலான சில கண்டிப்பான திட்டங்களை யு.ஜி.சி.,
வகுத்துள்ளது.
பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.3.10 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் உணவூட்டும் செலவினத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக
உட்படுத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்
சங்கம் முடிவு செய்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வு: கோவை மாணவர்கள் 5 பேர் வெற்றி
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை
இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
"விருப்பத்துடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது"
"சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க
முடிந்தது,' என, அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்ற மதுரை
டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
"மனிதவளத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு'
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மனித வளம் ஆற்றலை
மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று தமிழக ஆளுநர்
கே.ரோசய்யா கூறினார்.
8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை
நலிவடைந்த நிலையில் உள்ள 8 பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு
கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"
"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்
கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில், ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு
முகாம், 6ம் தேதி முதல், 11ம் தேதி வரை, மதுரை எஸ்.டி.ஏ.பி., விளையாட்டு
மைதானத்தில் நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-4,
குரூப்-2,வி.ஏ.ஓ., தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இலவச
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தேர்வர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 8ம் தேதி கலந்தாய்வு
எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி நடக்கிறது.
மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!
நமது சமூகத்தை ஒரு மோகம் ஆட்டிப் படைக்கிறது. அது, இன்ஜினியரிங்
தொழில்நுட்ப மோகம். இன்றைய காலத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம்,
தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மூளையுடனேயே பிறக்கின்றன என்பது பெற்றோர்
உள்ளிட்ட பலரின் நினைப்பு.
6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி பயிலும், ஆறு முதல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளிக்கல்வித்துறை
சார்பில் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ்
கட்டட அனுமதி பெற்றது தொடர்பாக, திருப்பூரில் உள்ள 58 தனியார் பள்ளிகளுக்கு, உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பத்தாம் வகுப்பில் வெற்றி: எம்.எல்.ஏ., சாதனை
ஒடிசாவில், பாரதிய ஜனதா கட்சி, எம்.எல்.ஏ., ஒருவர், 10ம்
வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனால், அவரின் ஆதரவாளர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள தொழில் நுட்ப
பணியாளர் பணியிடத்துக்கு உத்தேச பணி பதிவு மூப்பு பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் படிக்கும் மாணவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்
"தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் தங்களது
தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்," என பாவாணர் தமிழியக்க செயலாளர்
திருமாறன் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க தமிழக அரசு அதிரடி முடிவு
தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ,
மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில்,
ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த
அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னணு பயிற்சி முகாம்: மாணவர்களுக்கு அழைப்பு
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், மே 9ம்
தேதி முதல், மின்னணு பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து,
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது
திருப்பாச்சேத்தி அருகே, ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக
கூறி, மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவர், கைது
செய்யப்பட்டார்.
Subscribe to:
Posts (Atom)