"பிற பட்டதாரிகளைப் போல, பி.எல்., (5 ஆண்டு) முடித்தவர்களையும் சமமாக
கருதி, அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
pack
Showing posts with label court. Show all posts
Showing posts with label court. Show all posts
தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை: முடிவுகள் வெளியிட தடை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்
நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த, மதுரை
ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த
நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது;
தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
என்.சி.சி., சான்றிதழுக்கு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு
போலீஸ் பணி மறுக்கப்பட்டவருக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால், வாய்ப்பு கிடைத்துள்ளது.
நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
"மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு, நுழைவுத்
தேர்வு நடத்தக் கூடாது" என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை
எதிர்த்தும், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், தனியார்
அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மேல் முறையீட்டு மனு தாக்கல்
செய்துள்ளது.
மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: மேல் முறையீடு செய்ய முடிவு
மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் நேற்று
முன்தினம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் 94 பட்டதாரிகள் நிம்மதி
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை
வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்
"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை
குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச
நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் 3 இடங்கள் காலியாக வைக்க ஐகோர்ட் உத்தரவு
மாற்றுத் திறனாளிகளுக்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மூன்று இடங்களை
காலியாக வைத்திருக்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால
உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் துண்டு பிரசுரங்கள்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
கவுன்சிலிங் நடைபெறும் போது எந்த விளம்பரங்களையும்
கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை சென்னை ஐகோர்ட் முடித்து
வைத்துள்ளது.
இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் தேவையா? அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.ஐ.,) ஒப்புதல் வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து
செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், பொறியியல் கல்லூரி மனு தாக்கல்
செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அண்ணா பல்கலை, தொழிற்கல்வி
கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐகோர்ட் தலையீட்டால் பள்ளி மாணவிக்கு வெளிநாட்டு பல்கலையில் வாய்ப்பு
சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்த, சென்னை மாணவிக்கு,
பாஸ்போர்ட் எண் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஐகோர்ட் தலையீட்டால்,
பறிபோகும் நிலையில் இருந்த வாய்ப்பு, கைகூடியது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
"பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
"மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த,
தனியார் பள்ளி, பாதிக்கப் பட்டவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்' என,
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ரவி என்பவர்,
வியாசர்பாடி, டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக, மாவட்ட நுகர்வோர்
கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:கடந்த, 2007-08ம் கல்வியாண்டில், என் மகள்
ரம்யா மற்றும் ஜெகன், எதிர் மனுதாரர் பள்ளியில், முறையே, மூன்றாம் வகுப்பு
மற்றும் ஆறாம் வகுப்பு படித்து வந்தனர். தண்டனை என்ற பெயரில், 2007 மார்ச்,
28ம் தேதி முதல், ஏப்ரல், 4ம் தேதி வரை, ரம்யாவை, இருட்டறையில் சிறை
வைத்தனர். இதுதொடர்பாக, முதல்வர் தனிப் பிரிவு, கல்வித் துறை அதிகாரி
மற்றும் மனித உரிமைகள் அமைப்பில் புகார் செய்யப்பட்டது.
இச்சம்பவம்
குறித்து, உதவி கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். பின், பள்ளி
நிர்வாகத்துடன் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, ரம்யாவை மட்டும் பள்ளியில்
சேர்த்துக் கொள்ள, ஒப்புக் கொண்டனர். அவளை பள்ளியில் அனுமதித்த பின்,
திடீரென பள்ளியை விட்டு வெளியேற சொன்னதுடன், மாற்றுச் சான்றிதழையும் தர
மறுத்தனர்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, சென்னை (வடக்கு) நுகர்வோர் கோர்ட், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டை சேவை குறைபாடாக கருதி, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், மாநில நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "எதிர்மனுதாரர், தன் விருப்பப்படியே, அவரின் மகள் ரம்யாவை பள்ளியை விட்டு நிறுத்தினார். அவருக்கு, மாற்றுச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. எதிர்மனுதாரர், பள்ளி நற் பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்
ஆறு வயது முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதை
கட்டாயமாக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.
அதே நேரத்தில், "நர்சரி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, பள்ளிகளே முடிவு
எடுத்துக் கொள்ளலாம்" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
உத்தரவிட்டிருந்தது.
பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு: தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பிளஸ்–2 படிக்காமல் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறி தலைமை ஆசிரியர்
பதவி உயர்வை திரும்பப் பெற்ற கல்வி அதிகாரியின் நடவடிக்கையை ரத்து செய்து
மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"
"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே
அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு
கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
"பொறியியல் கல்லூரிகளில் சேர, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கு, குறைந்தபட்ச தகுதியாக, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது
செல்லும்" என சென்னை ஐகோர்ட் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்
கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால்
ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)