ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
pack
Showing posts with label tet. Show all posts
Showing posts with label tet. Show all posts
டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்
டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம்
வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.
டி.இ.டி., வினாத்தாள் மோசடி: மேலும் 5 பேர் கைது
டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் டி.ஆர்.பி. அதிகாரிகளுக்கு தொடர்பு? - தினமலர் செய்தி
டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த
போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில்,
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக
கூறப்படுகிறது.
டி.இ.டி. வினாத்தாள் இருப்பதாகக் கூறி மோசடி: குற்றவாளிகள் கைது
தமிழகம் முழுவதும் நேற்று, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது.
தர்மபுரி மற்றும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை
தருவதாகவும், ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் வரை, விலை பேசி
காரிமங்கலம் பகுதியில் தங்கி விற்பனை செய்து வருதாகவும், தர்மபுரி எஸ்.பி.,
ஆஸ்ராகார்க்கிற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. மோசடியில்
ஈடுபட்ட, டாஸ்மாக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் கைது
செய்தனர்.
டி.இ.டி., தேர்வுகளில் ஈடுபடபட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
"ஆசிரியர்
தேர்வு வாரியம் நடத்தும் டி.இ.டி., தேர்வு பணிகளை முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்,'
என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்க 100 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை
ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக சென்னையில் 100
ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட
ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
டி.இ.டி., தேர்வு மையம்: தேர்வர்கள் குழப்பம்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல தேர்வர்களுக்கு, தென்
மாவட்டங்களில், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதால், தேர்வர்கள்
குழப்பம் அடைந்துள்ளனர்.
தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள்ளிகளில் கல்விப்பணி பாதிப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தனியார் பள்ளி ஆசிரியர்களில்
பெரும்பாலானோர் விடுப்பு எடுத்து, தேர்வுக்கு தயாராவதால், தனியார்
பள்ளிகளில் கல்விப்பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டி.இ.டி., தேர்வு ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்வதில் சிக்கல்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,) ஹால் டிக்கெட்
இணையதளத்தில், "டவுண்லோடு" செய்ய முடியாததால் தேர்வர்கள் சிரமம்
அடைந்துள்ளனர்.
டி.இ.டி., தகுதி மதிப்பெண் குறைக்க கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்
"ஆசிரியர் தகுதி தேர்வில், பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத
மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும்" என
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு
"வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க,
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார்
தெரிவித்தார்.
டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று
மாலை வெளியிடப்பட்டது. வரும், 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு
நடக்கிறது. ஏழு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் 94 பட்டதாரிகள் நிம்மதி
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை
வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்
அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம்
பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல்
அவதிப்படுகின்றனர்.
முதல் நாளில் ஒரு லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை
நேற்று ஒரே நாளில், ஒரு லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை
ஆகியுள்ளன. கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய
மாவட்டங்களில், அதிகளவில், விண்ணப்பங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது.
பள்ளிகளில் இருந்து, புள்ளி விவரங்கள் பெற வேண்டியிருப்பதால், இன்று தான்
விவரம் கிடைக்கும் என, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.இ.டி., தகுதித் தேர்வு: விண்ணப்பம் விற்பனை தொடக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், இன்று தொடங்குகிறது.
வேலூரில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக இடங்கள்:
1 அரசு மேல்நிலைப்பள்ளி, விருபாட்சிபுரம்
2 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி
3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈவேரே,வேலுhர்
4 அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலுhர்
5 அரசு மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி
6 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊசூர்
2 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி
3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈவேரே,வேலுhர்
4 அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலுhர்
5 அரசு மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி
6 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊசூர்
சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக இடங்கள்:
1. அரசு மதரசா ஐ ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை, சென்னை-2.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, (புதூர்) மேற்கு மாம்பலம், சென்னை-83.
3. பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை-24.
மதுரையில் தினமலர் டி.இ.டி., தேர்வு பயிற்சி முகாம்
கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.இ.டி., தேர்வு பயிற்சி
முகாம், தினமலர் சார்பில் மதுரையில் நாளை (ஜூன் 15) நடக்கிறது.
Subscribe to:
Posts (Atom)