எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, தேசிய அளவில் நடத்தப்படும் தேசிய தகுதி
மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
மாணவர், பெற்றோர் மத்தியில், இத்தீர்ப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
pack
உத்தரவை மீறி இலவச லேப் - டாப் வழங்கல்: திரும்ப பெற உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச
லேப்- டாப் தரப்படுகிறது. சுயநிதி பிரிவில் படிக்கும், மாணவர்களுக்கு இலவச
லேப்- டாப் கிடையாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திண்டுக்கல்
மாவட்டத்தில், சுயநிதிபிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் லேப்- டாப்
தரப்பட்டு வருகின்றன.
இலக்கிய படிப்புகளுக்கும் தொல்லியல், கல்வெட்டு அறிவு தேவை: தமிழ்ப் பல்கலை., துணைவேந்தர்
"எல்லாவிதமான இலக்கிய படிப்புகளுக்கும் தொல்லியல், கல்வெட்டு அறிவு தேவை" என, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை கூறினார்.
பள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு
அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விரைவில் கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது.
ஜனவரி முதல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, "பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கடந்த
ஜனவரி, 18ம் தேதியை கணக்கிட்டு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வை வழங்கலாம்" என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: மேல் முறையீடு செய்ய முடிவு
மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் நேற்று
முன்தினம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
40 நாளில் படித்து 24 மணி நேரம் தேர்வு: பிளஸ் 2 மாணவர் சாதனை
காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளி,
பிளஸ் 2 மாணவர் அருண்குமார், லிம்கா சாதனைக்காக, தொடர்ச்சியாக 24 மணி நேரம்
தேர்வு எழுதினார். அவர் சராசரியாக 184 மதிப்பெண் பெற்றார்.
2015ல் கல்வி அறிவு இலக்கு 80 சதவீதம்: அமைச்சர் பல்லம் ராஜூ
வரும் 2015-ம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 80
சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பர் என மனிதவள மேம்பாட்டு்ததுறை
அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பலியான சம்பவம்: பள்ளி முதல்வர் உட்பட மூவர் கைது
தூத்துக்குடி கடலில் மூழ்கி, பலியான நான்கு மாணவர்களின் பெற்றோர்,
பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக,
பள்ளி முதல்வர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
மதிய உணவு சாப்பிட்ட164 மாணவியருக்கு வாந்தி, மயக்கம்
என்.எல்.சி., பெண்கள் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட, 164 மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
புதிய பாடதிட்டத்தில் கற்பித்தல் என்பது இனி கிடையாது!
ஆசிரியர்கள் பணி என்பது முன்பு கற்பிப்பவர்தான். ஆனால் தற்போது
வந்துள்ள புதிய கல்விமுறைப்படி மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழிகாட்டிதான்
என்று தூத்துக்குடியில் நடந்த பயிற்சியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவப் படிப்பில் சேர ஒரே நுழைவுத்தேர்வு இல்லை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத்துவ
கவுன்சிலிங் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.
இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை முடிவு
செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு குழந்தைகள் பலி: கவனமாய் செயல்பட மத்திய அரசு வேண்டுகோள்
பீகாரில், அரசு துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மதிய
உணவு சாப்பிட்டு இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
கெட்டுப் போன உணவுப் பொருட்களை பயன்படுத்தி, உணவு சமைத்து வழங்கியதால்
தான், குழந்தைகள் பலியாக நேர்ந்தது என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது.
13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் "பேஸ்புக்" பயன்படுத்தக்கூடாது: டில்லி உயர்நீதிமன்றம்
சமூக வலைதளங்களில் ஒன்றான, "பேஸ்புக்"கில், 13 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு துவங்க டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இன்ஸ்பயர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் "இன்ஸ்பயர்" விருதுக்கு,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப
துறை சார்பில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே,
அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக, "இன்ஸ்பயர்" புத்தாக்க அறிவியல் ஆய்வு
விருதை வழங்குகிறது.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டமைப்பு துறையில் சிறந்து விளங்க...
முந்தைய நாட்களில், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக
பணியாற்றிய நபர்களை ப்ராபர்டி டீலர் என்று அழைத்தனர். ஒரு சிறிய வீடு என்ற
நிலையிலிருந்து பெரிய தொழில் வளாகங்கள் வரை, மேற்கூறிய அம்சங்களை
மேம்படுத்துவதில், இன்று, நிறைய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன.
குழந்தைகளின் வீர தீர செயல்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளின் வீரதீர செயல்களுக்கான விருதிற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மைக்ரோ பயாலஜி பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் கனவு தகர்ந்தது
மைக்ரோ பயாலஜி, சமூக பணி இளநிலை பட்டம் பெற்று, பி.எட்.,
முடித்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களின்
ஆசிரியர் கனவு தகர்ந்துள்ளது.
நேர்காணலில் என்ன செய்யக்கூடாது?
வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு
நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும்
எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை
தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றிகரமாகக் கடப்பது போன்ற
சவால்கள் அதிகம்தான்.
பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 16 பேர் பலி
பிகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தரமற்ற மதிய உணவைச்
சாப்பிட்ட சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
சில்லரை வணிக நிர்வாகம்
சந்தை வணிகத்தை எப்படி நிர்வகிக்கலாம்? என்பது குறித்த, பல சிறப்பு
படிப்புகள் இருக்கின்றன. அவற்றுள் சில்லரை வாணிபம் தொடர்பான நிர்வாகவியல்
குறித்து படிக்கும் படிப்பு தான், சில்லரை வியாபார நிர்வாகம் (ரீடெயில்
மேனேஜ்மென்ட்).
டி.என்.பி.எஸ்.சி. மூலம் 28 டி.எஸ்.பி.க்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்
(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்யப்பட்ட 28 டி.எஸ்.பி.க்களை நியமனம்
செய்வதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி
பிறப்பித்துள்ளார்.
உலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை சத்தமின்றி ஏற்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்
"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை" என, ஒரு சாரார் குறை
கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகள் தரம் உயர்வு பட்டியல் தாமதம்: மாணவர் எண்ணிக்கை சரிவு
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
குரூப் 4 தேர்வு: ஒரு இடத்திற்கு 290 பேர் போட்டி
குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு 16.13 லட்சம் பேர்,
ஆன்-லைன் வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு, 290 பேர் முட்டி
மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு
தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி
வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில்
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சித்த மருத்துவம் படிக்க வந்திருக்கும் சீனத் துறவிகள்
சீனாவின் ஹனான் மாநிலத்தில் உள்ள சுங்ஷான் ஊரில், ஷாவோஷீ
மலையடிவாரத்தில் உள்ளது "ஷாவோலின்" ஆலயம். கி.பி., 467ம் ஆண்டு, "பாத்வோ"
அல்லது "புத்தபத்ரா" என்பவர் அந்த ஆலயத்தைஉருவாக்கினார் என, வரலாறு
கூறுகிறது.
தொல்லியலை மாணவர்கள் கற்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்: அகழ்வாராய்ச்சியாளர்கள்
ஈரோடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில், "தமிழ் பண்பாட்டு
அடையாளம் - ஈரோட்டின் கொடுமணல்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு
நடந்தது.
வாழ்வியல் அனுபவம் தரும் மனையியல் கல்லூரி
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் மதுரை மனையியல் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காண்டு பி.எஸ்சி., மனையியல் படிப்பு
வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியருக்கு கிடைக்குமா பள்ளி கல்வி சுற்றுலா?
தமிழகத்தில் புறையோடிய பள்ளி கல்வி சுற்றுலாவால், மாணவர்களின் மனநிலை
பாதிப்பதாகவும், மீண்டும் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும், எனவும்
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு மாணவர் 5 மரங்களை நட வேண்டும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
சுற்றுப்புற சூழலை பாதுகாத்து தணணீர் பெற ஒரு மாணவர் ஐந்து மரங்களை நட வேண்டும் என விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசினார்.
முதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவ, மாணவியர், முதல்வர் தகுதி பரிசுக்காக விண்ணப்பிக்க,
நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப,
பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி
எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஸ்டான்லி மருத்துவ கல்லூரி: 100 கூடுதல் இடங்களில் சேர்க்கைக்கு அனுமதி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்.,
இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ கவுன்சில்
(எம்.சி.ஐ.,) ஒப்புதல் வழங்கி உள்ளது.
பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு
கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெற வேண்டும் என்பதை
நோக்கமாக கொண்டு, 25 கல்லூரிகளில், சிறப்பு வகுப்புகளை நடத்த, அரசு
திட்டமிட்டு உள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?
மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில்
தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக்
கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு
தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.
வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்
கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.
கட்டாய கல்வி சட்டத்தை ஏமாற்றிய சி.பி.எஸ்.இ., பள்ளிகள்
தமிழகத்தில், 400க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும்
நிலையில், வெறும், 119 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை
குழந்தைகளுக்கு, இடம் வழங்கியுள்ளன. மற்ற பள்ளிகள் குறித்து, எவ்வித
தகவலும் தெரியவில்லை.
மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2ம் கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஆகஸ்ட் முதல்
வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு
ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப்
பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்
அதிகரித்து உள்ளது.
ஒன்பது பல்கலையில் விரைவில் விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்
தமிழகத்தில் உள்ள, ஒன்பது பல்கலையில், "விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்"
அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில்
இம்மையம் செயல்பாட்டிற்கு வருகிறது.
தொலைதூர கல்வியில் கடல்சார் சட்டப்படிப்பு
"சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், விரைவில், கடல்சார்
சட்டப் பட்டய படிப்பு துவங்கப்படும்" என அப்பல்கலைக்கழக துணைவேந்தர்
விஜயகுமார் கூறினார்.
ஓர் ஆசிரியருக்கு இரு பள்ளிகளில் பணி: இந்தாண்டும் தொடரும் சோதனை
மதுரையில் நடந்த, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான
கலந்தாய்வில், ஓர் ஆசிரியருக்கு, இரு பள்ளிகளில் பணியாற்ற உத்தரவிடப்
பட்டதால், இத்துறை ஆசிரியர்களின் வேதனை தொடர்கதையாகி உள்ளது.
185 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
சென்னை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள, 85
எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்
கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு,
இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
டி.ஆர்.பி., பணியிடங்கள் பல மாதங்களாக காலி: அலுவலர்கள் திணறல்
முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு
என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில்,
மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர்
பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு
அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்
இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு,
மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம் பணி துவக்கம்
பாளை., சித்த மருத்துவக் கல்லூரியில் சித்தா, ஆயுர்வேதம்
உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்
விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம்
ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு
வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில்
சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)