தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், மே 9ம்
தேதி முதல், மின்னணு பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து,
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட அறிக்கை:
pack
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது
திருப்பாச்சேத்தி அருகே, ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக
கூறி, மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவர், கைது
செய்யப்பட்டார்.
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே
அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு
பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை
மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ,
மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை,
காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?
"குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக
அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,''
என, அமைச்சர் முனுசாமி கூறினார்.
குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின்
அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்
புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு
"பட்டம் பெற்றவர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்" என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ பேசினார்.
கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு
இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை,
முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு
ஆகியவற்றின் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே
செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய
வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க
கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி
ஓய்வு பெறும் வயதை எட்ட, இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பெண்ணுக்கு,
அரசுப் பணி கிடைத்துள்ளது. அவர், சென்னை மாநகராட்சியில், டைபிஸ்ட் பணியில்
நேற்று சேர்ந்தார்.சென்னை மாநகராட்சியில், 3,189 பணியிடங்களை நிரப்ப, அரசு
அனுமதித்தது. இதன்படி, காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தட்டச்சர்
பணிக்கு,வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 35 பேர், தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில்,
நேற்று நடந்தது.
அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது
காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில், உயர் கல்வியில்
அந்நிய முதலீடு, உள்நாட்டு தனியார் முதலீடு, அரசு கல்லூரிகளின் இன்றைய
நிலைப்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது.
கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு
"கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின்
வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர்,
பல்லம் ராஜூ பேசினார்.
தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
மாநகராட்சி தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும்
மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், இலவசமாகப் பேருந்து பயண அட்டை
வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி
மதுரை விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள மனையியல்
கல்லூரியில், 7 - 12 வயதுள்ள மாணவர்களுக்கு, சத்தான, ஆரோக்கிய உணவுகள்
குறித்த பயிற்சி, மே 6,7ல் நடத்தப்படுகிறது.
மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே புத்தகம்
வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருவதாகவும், அதற்கு நூலகத் துறை மூலம்
வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்
தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க
ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு
என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு ; விண்ணப்பங்களை வரவேற்கும் திருச்சி ஐ.ஐ.எம்
திருச்சி ஐ.ஐ.எம்., சென்னை மையத்தில், பகுதி நேர மேலாண்மை
முதுகலை பட்டய படிப்பிற்கான, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பொறியியல் சேர்க்கை மதிப்பெண் விவகாரம்: எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் நிலை கேள்விக்குறி
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர், பொறியியல்
கல்லூரிகளில் சேர, குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்து, தெளிவான
நிலை இல்லாததால், அவர்களின் நிலை, கேள்விக்குறியாக உள்ளது. இந்த
விவகாரத்தில், தமிழக அரசிடம் இருந்து, தெளிவான உத்தரவு வராததால், அண்ணா
பல்கலையும் குழப்பம் அடைந்துள்ளது.
சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,
அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., - சுற்றுச்சூழல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.இ., - சுற்றுச்சூழல்
பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
குரூப் 4 மூலம் வி.ஏ.ஓ.,க்கள் தேர்வு: கருத்தரங்கில் வலியுறுத்தல்
"வி.ஏ.ஓ., பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் நடத்தப்படும், நேரடி தேர்வை ரத்து செய்து, இளநிலை
உதவியாளர் பணி நிலையில், "குரூப் 4” மூலம் தேர்வு செய்ய வேண்டும்” என,
கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை
அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென
பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில்
போட்டியிட விரைவில் தடை வருகிறது. இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம்
கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு
எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய
மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர்.
நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்"
தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும்
என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு
பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச்
சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி
தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160
விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும்
இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு
பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
முடிவு செய்தது.
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு
"எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான
மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என,
மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி
முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு
அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது.
பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
"கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே
அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்
வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,
மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி
கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு,
இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங்
நடக்கிறது.
கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு
கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சிவில் சர்வீஸ் தேர்வு கொள்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது
பாடப் புத்தகங்களைப் பார்த்து, பொதுத்தேர்வை எழுதும், புதிய வகை
திட்டம், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்தப்பட
உள்ளது. பொதுத் தேர்வுகள், மாணவர்களிடையே மன அழுத்தத்தை தருவதால், தேர்வு
நடைமுறைகளில், படிப்படியாக, பல்வேறு சீர்திருத்தங்களை, மத்திய அரசு
அமல்படுத்தி வருகிறது.
மாணவிகள் விடுதியில் கவுன்சிலிங்: கல்வித்துறை உத்தரவு
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம், பள்ளி
விடுதி மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் அரசு, உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு
மாணவிகளுக்கு கல்வித் திறனை வளர்த்தல், இடைநின்றல் தவிர்த்தல், தேர்ச்சி
விகிதம் அதிகரித்தல், கூடுதல் வகுப்பறை கட்டுதல் போன்ற பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 55 பகுதி நேர
ஆசிரியர் பணியிடம் நிரப்பபடுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்
"செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் தினமும் படித்து
வந்தால் சிந்தனை திறன் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிப்பால்
செயல்திறன் கூடும்," என்று உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் கூறினார்.
முதல் தலைமுறை பட்டதாரிகள் சுய தொழில் துவங்க அழைப்பு
முதல் தலைமுறை பட்டதாரிகள், சுய தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்
"தமிழ் வழியில், பி.எல்., படித்த பெண்ணை, சிவில் நீதிபதியாக, தேர்ந்தெடுத்தது செல்லும்" என, சென்னை ஐகோர்ட், உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலை உதவித்தொகை: தொடர்பு மையம் அமைக்கிறது அரசு
வெளிநாட்டு பல்கலைகளில் உள்ள படிப்புகள், அங்கு கிடைக்கும் உதவித்தொகை,
வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை, மாணவர்கள் அறியும் வகையில், பன்னாட்டு
தொடர்பு மையத்தை, தமிழக அரசு அமைக்க உள்ளது.
போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு
"காவல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பல்கலைக் கழகம், சென்னை அருகே
அமைக்கப்படும்" என முதல்வர், ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.
அரசு கல்லூரிகளில் அம்மா உணவகம்: மாணவர்கள் எதிர்பார்ப்பு
ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசு கல்லூரிகளில், அம்மா உணவகம், திறக்கப்பட வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர்கல்வி சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: சந்துரு வருத்தம்
"கல்வியில் மாற்றம் கொண்டு வர, நீதிமன்றம் தான் காரணம் என்றாலும்,
உயர்கல்வி தரமற்று இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம் என்பது
வருத்தமளிக்கிறது" என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறினார்.
ஆசிரியர்களை மாணவர்கள் மறக்கக் கூடாது
"மாணவர்கள் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் பாடம் கற்றுத்தந்த
ஆசிரியர்களை மறக்க கூடாது," என, தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்
சொக்கலிங்கம் பேசினார்.
பட்டதாரிகள் ஏமாற்றம்: வேலைவாய்ப்பு அலுவலர் முற்றுகை
சிவகங்கையில், வேலைவாய்ப்பு சந்தை நடத்தி, இளைஞர்களுக்கு
வேலை வழங்கப்படும் என அறிவித்த, வேலைவாய்ப்பு அலுவலரை, கண்டித்து,
பட்டதாரிகள் முற்றுகையிட்டனர்.
Subscribe to:
Posts (Atom)