இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும்
ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது
நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல்
ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்
விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
pack
அதிகரிக்கும் பட்டதாரிகள் - திணறும் சீனா
சீனாவில் அடுத்தாண்டு கல்லூரிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 7.27
மில்லியனாக (70 லட்சத்திற்கும் மேல்) இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெறிமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தேவை: பல்லம் ராஜு
நெறிமுறை சார்ந்த ஒரு முழுமையான வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது
என்பது குறித்து அறிய, மாணவர்களுக்கு உதவ, நமது உயர்கல்வி அமைப்பு அதிக
கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திறந்த புத்தக தேர்வுக்காக கூடுதலாக 30 நிமிடம்
9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2014ம் ஆண்டு மார்ச்
மாதம் இறுதி தேர்வுகளில், திறந்த புத்தக தேர்வுக்காக 30 நிமிடங்கள்
கூடுதலாக வழங்க CBSE முடிவு செய்துள்ளது.
60% குறைவான தேர்ச்சி: அரசு பள்ளிகளுக்கு கெடு
"கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட 617
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரும் பொதுத்தேர்வில், 80
சதவீதத்திற்கும் அதிகமாக தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்" என பள்ளி
கல்வித்துறை கெடு விதித்துள்ளது.
தபால் மூலம் நிர்வாக பணியா? கல்வி துறை மீது அலுவலர்கள் கடுப்பு
"தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த கால கட்டத்திலும், தபால் மூலம்
நிர்வாகப் பணியை செய்யும் முறைக்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும்" என பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், வலியுறுத்தி
உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்புச்சத்து மாத்திரை
"ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அரசு பள்ளி
மாணவர்களுக்கு தினமும் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் உள்ளதாக"
சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பணியில் சேர தயக்கம்: மருத்துவர் காலியிடங்கள் அதிகரிப்பு
"ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தால், அரசு பணியில் சேர டாக்டர்கள்
தயங்குகின்றனர்" என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார்.
பீகாரில் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வி
பீகாரில், ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், 10 ஆயிரம்
ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக மீண்டும் ஒரு தேர்வு
நடத்தப்படும். அதிலும், தேர்ச்சி அடையாவிட்டால், பணியில் இருந்து அவர்கள்
"டிஸ்மிஸ்" செய்யப்படுவர் என அம்மாநில கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர்.
பீகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் கல்வித்
திறனை மேம்படுத்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர்களின் தகுதியை தெரிந்து கொள்வதற்காக,
சமீபத்தில், மாநிலம் முழுவதும் உள்ள, 43,447 ஆசிரியர்களுக்கு தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, ஆங்கிலம்,
கணிதம், இந்தி, பொது அறிவு ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், தோல்வி அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு, தங்களின் தகுதித் திறனை அதிகரிக்கும்படி,
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்காக, மீண்டும் ஒரு தேர்வை நடத்தவும்,
முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் தோல்வி அடைவோர்,
பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர். இவ்வாறு, அந்த அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் 3ல் சென்னையில் ஆலோசனை
"10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி
அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது" என அரசு
தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
"படிப்பை தள்ளி வைக்காதீர்; அதுதான் முதல் எதிரி"
"என்னால் முடியும் என மனப்பூர்வமாக நம்புகிறவர்கள் தான், உலகில்
வெற்றியடைந்துள்ளனர். நம்பிக்கை வந்துவிட்டால், உழைப்பு தானாக வரும். "நாளை
படிக்கலாம்" என தள்ளி வைப்பதுதான் முதல் விரோதி. அதை விட்டொழியுங்கள்;
வாழ்வில் எளிதாக ஜெயிக்கலாம்" என பட்டிமன்ற பேச்சாளரும் கல்வியாளருமான,
பாரதி பாஸ்கர் பேசினார்.
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள்
வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு
முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.
இணைப்பு பள்ளிகள் சான்றுத்துவம் பெறுவது கட்டாயம் சி.பி.எஸ்.இ
அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று
அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை
தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில்
பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில்
எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள்...நியமனம்! 196 பேருக்கு விரைவில் உத்தரவு வழங்க ஏற்பாடு
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்
பணியிடங்கள் இன்னும், 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான நேர்முக
தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.
அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை
அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
32 செயற்கைக்கோள்கள்: ரஷ்ய ராக்கெட் சாதனை
செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி
போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29
செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.
பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?
வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக
உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை
தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும்
பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான
தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும்
மாணவப்பருவத்திலேதான்.
பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்"
திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி
வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாநில
அளவில் கட்டுரை, பேச்சு போட்டிகள், கல்லூரி, மேல்நிலை பள்ளிகள் அளவில்
நடத்தப்படுகிறது.
ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி: பல்லாயிரக்கணக்கான மாணவர் குவிந்தனர்
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்துவந்த "தினமலர்" நாளிதழின்
"ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சி சென்னை நகரில் நேற்று துவங்கியது. சென்னை
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று
பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் குவிந்தனர்.
பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்
மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக
விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை
சேர்க்கப்பட்டுள்ளார்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
பணிநிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தரம் உயர்ந்தும் பணியிடங்கள் இல்லை: "கவுன்சிலிங்" கனவில் ஆசிரியர்கள்
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர்
சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல்,
"பொறுப்பு" ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு ரூ.2,500: பரிதவிப்பில் பட்டதாரிகள்
"கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு' என்ற மோகம் குறையவில்லை
என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு, 3
மாதங்களுக்கு நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் சாட்சியாக உள்ளது.
அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
"அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட
உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார்
தெரிவித்தார்.
"குறிப்பிட்ட முடிவை எதிர்பார்த்து ஆய்வுசெய்ய தூண்டக்கூடாது"
பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தும் பள்ளி தலைமைத்துவ மாநாடு(School
Leadership Conference), சென்னையில் நவம்பர் 18ம் தேதி துவங்கியது. இதில்
கலந்துகொண்டு உரையாற்றிய கல்வித்துறை நிபுணர்கள் பலர், தங்களின் ஆலோசனைகளை
வழங்கினார்கள்.
குழந்தைகளுக்கான தண்டனை: பள்ளி, வீடுகளில் தொடர்கிறது வன்முறை
"பள்ளி மற்றும் வீடுகளில் குழந்தைகளுக்கு தரப்படும்
தண்டனைகளில் மாற்று முறைகளை கையாள வேண்டும்" என, குழந்தைகளுக்கான
நலக்குழுமம் தெரிவித்துள்ளது.
எண்ணங்கள் தெளிவானால், வாழ்வினில் வெற்றி வசமாகும்
மனிதன் தனிமையிலே எதை சிந்திக்கிறானோ அது தான் அவன் குணமாக இருக்கும்
என்பது மனோதத்துவ இயலாளர்களின் கருத்து. படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என
ஒவ்வோருவரும் தாங்கள் சிந்திக்கும் விதத்தாலேதான் வெற்றி அடைகிறார்கள்.
குரூப் - 2 தேர்வு எழுதுவதை தடுப்பதற்கு கட்டாய பணி ஒப்பந்தம்
குரூப்-4 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு குரூப்-2 தேர்வு
எழுதி வெளியேறுபவர்களை தடுக்கும் முயற்சியாக நில அளவைத் துறையில் புதிதாக
சேர்ந்தவர்களிடம் ஐந்தாண்டு கட்டாயம் பணியாற்ற ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.
உலகவெளியில் இனிய ஒலி ஏற்படுத்தலாம் வாருங்கள்
புதுமையான
வேலைவாய்ப்புகள் வாழ்க்கையை ரசிக்கும்படியாக மாற்றிவிடுகிறது. வாழ்க்கை
ரசிக்கும்படியாக இருந்தாலும், வருமானமும் வளமான வாழ்க்கைக்கு அவசியம்.
அப்படி வருமானத்தை ரசிப்புத்தன்மையுடன் தரும் பணிகளில் ஒன்று ஒலிப்
பொறியாளர் எனும் "சவுண்ட் இன்ஜினியர்" பணியாகும்.
ஸ்மார்ட் கார்டு பணிக்கு பள்ளி மாணவர்களிடம் கட்டாய வசூல்
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு
தயாரிக்கும் பணிக்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களிடம் பணம்
வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பரிந்துரை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதி பற்றாக்குறையை காரணம்
காட்டி ஆரோக்கிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதற்கான
நிதியை மீண்டும் வழங்க கோவை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
கடல்சார் படிப்புகள்: அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்
கடல்சார் படிப்புகளை முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சி.டி.சி.,
சான்றிதழ் பெற மும்பைக்கு சென்று காத்திருக்க வேண்டி உள்ளது. பாஸ்போர்ட்
பெறுவது போல் தனியார் உதவியுடன் இதை எளிமையாக்கி வழங்க மத்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திறனாய்வு தேர்வில் பங்கேற்க மாணவர்களிடையே ஆர்வம் குறைவு
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள10ம் வகுப்புக்கான தேசிய
திறனாய்வு தேர்வு எழுத தேனி மாவட்டத்தில் மாணவர்களிடையே போதிய ஆர்வம்
இல்லை.
மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: யு.ஜி.சி., தலைவர்
மாநில அரசுகள் உயர்கல்வியை மேம்படுத்துவதில்,
போதியளவு சிரத்தை எடுத்து செயல்படவில்லை என்று யு.ஜி.சி., சேர்மன் வேத்
பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறப்பாக செயல்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்கள்!
பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய சி.பி.எஸ்.இ., மாணவர்கள், பிற
வாரியங்களில் அத்தேர்வெழுதிய மாணவர்களைவிட, சிறப்பான செயல்பாடு மற்றும் சுய
மேம்பாடு ஆகியவற்றில் திறமையாக செயல்பட்டுள்ளனர் என்று CBSE மேற்கொண்ட ஒரு
சர்வே தெரிவிக்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு
"மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல
நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், கவுன்சிலிங்
மையங்களை நிறுவ வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தங்களுக்கான கின்டர்கார்டன் சேர்க்கையில், 4
பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும்
என்று உத்தரவிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பள்ளி, சிறியதா,
பெரியதா? என்பது இந்த கணக்கில் வராது.
கல்வி உதவித் தொகை திட்டத்தில் மாற்றம் வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட கல்வி உதவித் தொகை
திட்டத்தில் மாற்றம் வேண்டும், என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி. மவுனம்: குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் தவிப்பு
குரூப்-4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் தேர்வு
முடிவை வெளியிடாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
(டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய 12
லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.
மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு
அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்!
உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க
நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல
சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு
அனுபவித்து தொடர முடியும்.
உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து
எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், சேலம், திருவண்ணாமலை,
தர்மபுரி, விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிக மோசமாக உள்ளது
தெரிய வந்துள்ளது.
எந்தப் படிப்புக்கு எது சமம் - அரசாணை வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சில பட்டப் படிப்புகளுக்கு
சமமான பாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தொலைநிலைக் கல்வி - உங்களின் பாடம் பற்றி புரியவில்லையா?
தொலைநிலைக் கல்வி முறையில், சில பாடங்கள் பற்றி, மாணவர்களால் சுயமாகப்
புரிந்துகொள்ள முடியாது. அந்த தலைப்புகளை, கருத்தாக்க ரீதியில்
புரிந்துகொள்ளவும், அந்த பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள அம்சங்களை எப்படி
படிப்பது என்பது குறித்தும் ஒரு தெளிவு அனைத்து மாணவர்களுக்கும்
ஏற்படுவதில்லை.
பள்ளி, கல்லூரி விடுதிகளில் உணவினை ஆய்வு செய்ய உத்தரவு
பள்ளி, கல்லூரி விடுதிகளில், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை
ஆய்வு மூலம் உறுதிசெய்ய, கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அலகுத்தேர்வு நேரத்தை மாற்ற மாணவர்கள் கோரிக்கை
"பொதுத்தேர்வு மாணவருக்கு, மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் நேரத்தில்,
அலகுத்தேர்வு நடத்துவதை மாற்றியமைத்து, முதல் வகுப்பு தொடங்கும் காலை
நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.எல்., படித்தவர்களுக்கும் அரசு பணி: ஐகோர்ட் உத்தரவு
"பிற பட்டதாரிகளைப் போல, பி.எல்., (5 ஆண்டு) முடித்தவர்களையும் சமமாக
கருதி, அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்.... பீரோக்களில் பூட்டிவைப்பு
அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில்
வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால்
பயன்பாடின்றி முடங்கி உள்ளது.
Subscribe to:
Posts (Atom)