பி.எட்., மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில், மதிப்பெண்
விவரங்கள் தவறாக அச்சாகி உள்ளன. இதையடுத்து, பல மாவட்டங்களில் இருந்து
வந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல்
மேம்பாட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
pack
சென்னை பல்கலை தொலைதூரக் கல்வி இளங்கலை தேர்வு முடிவு
சென்னை பல்கலை, தொலைதூரக் கல்வி திட்டத்தின், இளங்கலை பட்டப்படிப்பு
தேர்வு முடிவுகள், இன்று, வெளியிடப்படுகிறது. பல்கலையின், அனைத்து வகையான
இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், பல்கலையில், இன்று
வெளியிடப்படும்.
டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு
"வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க,
அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார்
தெரிவித்தார்.
டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று
மாலை வெளியிடப்பட்டது. வரும், 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு
நடக்கிறது. ஏழு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
1,690 பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயம்
"விரைவில், 1,690 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணம்
நிர்ணயிக்கப்படும்" என, தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர்
சிங்காரவேலு கூறினார்.
நீட் தேர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு
"மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு, நுழைவுத்
தேர்வு நடத்தக் கூடாது" என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை
எதிர்த்தும், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், தனியார்
அமைப்பு ஒன்று, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மேல் முறையீட்டு மனு தாக்கல்
செய்துள்ளது.
ஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்
விழுப்புரம் அருகே, அரசு பள்ளியில் ஆசிரியர்
பற்றாக்குறையால், உள்ளூர் பட்டதாரி மாணவிகள் ஊதியம் இன்றி, மாணவர்களுக்கு
பாடம் கற்பித்து வருகின்றனர்.
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளை
தடுக்கும் வகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அடையாள
அட்டை வழங்கி, அவர்களின் முழுமையான விவரங்களை, இணையதளத்தில் வெளியிட, அண்ணா
பல்கலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஓரிரு நாளில் நடக்க உள்ள,
"சிண்டிகேட்" கூட்டத்தில், ஒப்புதல் பெறவும், பல்கலை முடிவு செய்துள்ளது.
ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவு: நேரில் வரத்தேவையில்லை
தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்டதாரிகள், கல்வித் தகுதியை தொழில்
மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மதுரை) "ஆன்லைனில்" பதிவு
செய்யலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த அலுவலகத்தின் கிளை, மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மாடியில் உள்ளது.
வேலை கிடைக்கவில்லையா? தளர்ந்து போகாதீர்கள்
இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் ஒவ்வொரு நிறுவனமாக வேலை தேடி செல்வதை
பார்க்க முடியும். சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து
விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை
கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்திலும்
தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் அறிவுரை
"மாணவர்கள் படிக்கும்காலத்தில் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும்," என சென்னை உளவியல் நிபுணர் ரகுநாத் பேசினார்.
பள்ளி மாணவர்களுக்கு "யோகா" கல்வி கட்டாயம்: ம.பி. அரசு
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, யோகா கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தூக்கம் ஒரு பிரச்சனையா? உங்களோடு ஒரு ஆய்வு -4
நான் நன்றாக தூங்கினேன் என்று மனம் துள்ள பேசும் ஒரு நபர், ”ஏப்மா டல்லா இருக்கே?” என்று கேட்டவுடன், தூக்கம் குறைவுப்பா அதான் என்பார் ரொம்ப சோர்ந்து, தூக்கம் குறைந்த நாளில். ஏன் இந்த துள்ளல் மற்றும் சோர்வு? தூக்கம் சார்ந்த நம் மனப்பான்மை இயற்கையை ஒட்டி இயங்காமை தான் என்பதை முதலில் உணர வேண்டும். சரி என்ன செய்யலாம்?
பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: 94% பேர் தேர்ச்சி
பி.எட்., படிப்பிற்கான தேர்வு முடிவுகளை,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 94 சதவீதம்
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரிவிக்கலாம்": கலெக்டர் அறிவிப்பு
அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 203 மாணவ,
மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்
அஹமது தலைமை வகித்து பேசியதாவது:
துறவு / துறப்பு என்பது எதை? துறந்தால் இன்பம் கிட்டுமா? ”நான்” என்றால் என்ன? உங்களோடு ஓர் ஆய்வு- 2
(உங்களை ஒப்பிட்டு பொறுமையோடு முழுமையாக படியுங்கள்)
துறவு என்பது வாழ்வை துறப்பதா?
வாழ்வின் அடிப்படையான ஆசைகளை துறப்பதா ?
ஆசைகளின் அடிப்படையான எண்ணத்தை துறப்பதா ?
எண்ணம் துறந்த மனம் எப்படி இருக்கும்/ இயங்கும்?
எண்ணமற்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே அந்த எண்ணமற்ற நிலைக்கும் வித்து எண்ணம்?
துறவு என்பது வாழ்வை துறப்பதா?
வாழ்வின் அடிப்படையான ஆசைகளை துறப்பதா ?
ஆசைகளின் அடிப்படையான எண்ணத்தை துறப்பதா ?
எண்ணம் துறந்த மனம் எப்படி இருக்கும்/ இயங்கும்?
எண்ணமற்று இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே அந்த எண்ணமற்ற நிலைக்கும் வித்து எண்ணம்?
கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை...
ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில்,
மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான
வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 1,390 சீட்கள் கூடுதலாகிறது
நாடு முழுவதும், 32 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்.,
படிப்பில் சேர, கூடுதலாக, 1,390 இடங்களை உருவாக்குவதற்கு, மத்திய அரசு
அனுமதி வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் கூட்டம், நேற்று
நடந்தது. இதில், மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ், இடங்களை
கூடுதலாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
போலி சான்றிதழ்: மாநகராட்சி ஆசிரியர் நியமனத்தில் புது சர்ச்சை
சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட
பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர்
மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்!...
வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
குரூப்-4 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்வு
: "அடுத்த மாதம், 25ம் தேதி நடக்க உள்ள குரூப் - 4 தேர்வு எழுதுவோர்
எண்ணிக்கை 17.5 லட்சமாக உயர்ந்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான இறுதிக்
கட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்தி, கூடுதலாக, 1.37 லட்சம் பேர் குரூப் - 4
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, "கீ-ஆன்சர்", டி.ஆர்.பி., இணையதளத்தில்
நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வர்கள் விடைகளைப் பார்த்துவிட்டு, ஏதேனும்
சந்தேகங்கள் இருந்தால், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாகவோ,
நேரடியாகவோ தெரிவிக்கலாம்.
ஆபாச பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது வேதனைக்குரியது: டி.ஐ.ஜி., ஆதங்கம்
"கலை நிகழ்ச்சிகளில் ஆபாச பாடல்களுக்கு மாணவ, மாணவிகள்
நடனம் ஆடுவது வேதனைக்குரியது," என சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு
டி.ஐ.ஜி. பாரி, கரூரில் நடந்த கல்வி நிதி வழங்கும் விழாவில் கூறினார்.
வளம் தரும் தாவரவியல் படிப்புகள்
அறிவியல் பாடங்களுக்கு அண்மை காலமாக முக்கியத்துவம் வழங்கக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்
"ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்பது பழமொழி. ஆடி
மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண்
அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன
ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது.
பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376
மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா
குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு,
சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி
அளிக்கப்படுகிறது.
சத்துணவு திட்டத்துக்கு தரமான அரிசி வினியோகம்
சத்துணவு திட்டத்திற்கு வழங்கப்படும் உணவு பொருட்களை, பல கட்ட
சோதனைக்கு பின்னரே வினியோகம் செய்ய, உணவுத்துறை அதிகாரிகள் முடிவு
செய்துள்ளனர்.
35% பெற்று பி.இ.,க்கு விண்ணப்பித்த எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் ஏமாற்றம்
பிளஸ் 2 தேர்வில், 35 சதவீத மதிப்பெண் பெற்று, பி.இ.,க்கு விண்ணப்பித்த
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். 35 சதவீதம்
தேர்ச்சி பெற்றவர்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு முடிவடையாததால்,
இந்நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு
பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, மாத கடைசி வெள்ளிக்கிழமை
நடத்தி, அறிக்கை அனுப்ப அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
உத்தரவிடப்பட்டு உள்ளது.
பி.இ., சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 77,619 பேர்: நகர்ப்புறம் பின்னடைவு
பி.இ., படிப்பில், நகர்ப்புற மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.
நடப்பாண்டில், நகர்ப்புறங்களில் இருந்து, 47,155 பேர் மட்டுமே, பி.இ.,
படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், கிராமப்புறங்களில் இருந்து, 77,619 பேர்
சேர்ந்து, அசத்தியுள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை சரிபார்க்க ஆன்லைன் வசதி
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை பிறதுறையினரும் சரி பார்க்க ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் 5ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு | Medical 2nd phase counselling on august 5th
மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆக., 5 முதல், 16ம்
தேதி வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணையை, மருத்துவக் கல்வி இயக்ககம்
வெளியிட்டு உள்ளது.
அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை – எப்படி? ஒரு யதார்த்த ஆய்வு உங்களோடு – பாகம் 1:
அன்பு என்பது அறிவின் மேன்மை நிலை என்று குறிப்பிட்டு நான் சில
மாதங்களுக்கு முன்பு முகநூலில் பதிவு செய்த பதிவையும் நேற்று என் இணையதளப்
பார்வைகள் 50 இலட்சத்தை எட்டியதை தொடர்ந்து வெளியிடப்பட்ட பதிவிலும் அன்பு
என்பதை யான் பதிவு செய்ததையும் நினைப்படுத்தி வெகு வெளிப்படையாக கருத்துகளை
பரிமாறிக்கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னோடு பேசும் போது நகச்சுவை
உணர்வோடு “ அன்பு” அதெல்லாம் ’சும்மா’ சார், நடைமுறை அது வாழ்க்கைக்கு
’ஒத்து’ வராது, எல்லாம் ஒரு ’மோடிவோடு” (motive) தான் செயல்படறாங்கன்னு
சொன்னார்.
அவருடைய கருத்தை அன்போடு உணர்ந்ததால் ”அன்பு என்பது
அறிவின் மேன்மை நிலை” என்பது எப்படி? என்று எனக்கு ஏற்பட்ட கருத்து சூழலை
இங்கு உங்களோடு ஆய்ந்து பதிவு செய்ய விரும்புகிறேன் உங்கள் அன்பை
எதிர்பார்த்து.
அன்பு, சும்மா, ஒத்து, மோடிவ் என்கின்ற ’நோக்கு’
போன்ற வார்த்தைகளின் அறிவுநிலை சொற்களின் உண்மைநிலையினை பொறுமையற்ற
சிந்தனையால் ஏற்படும் உணர்ச்சி வயத்தாலோ, அறியாமையாலோ, பழக்கத்தாலோ அதன்
மெய் உணர்வினை அறிய இயலாமல் போகிறது. அதனால் அவ்வொவ்வொன்றையும்
சிந்திப்போம். இக்கருத்து அத்தனையையும் உங்கள் கருத்தோடு அனுபவத்தோடு
இணைத்து அமைதி நிலையில் உள்ளது உள்ளபடி சிந்தித்துப்பாருங்கள்.
அன்பு:
அன்பற்ற மனதிலே வெறுமை, பயம், வெறுப்பு, கோபம், எரிச்சல், அறுவறுப்பு
உணர்வு, கவலை, வருத்தம் போன்ற ஏதேனும் ஒன்றோ பலவோ இணைந்து முறையற்ற
தன்முனைப்பு (Improper EGO) ஏற்படுகிறது. உண்மையில் இந்த உணர்வுகள் மனதின்
சமநிலையை அதாவது அமைதியை முதலில் கெடுக்கிறது.
நோக்கு:
அமைதியற்ற மனம் தன்னுடைய நோக்கை (Motive) சீராகவோ முழுமையாக உணர
முடிவதில்லை. உணராமையால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவோ தன் நோக்குக்கொப்ப
உடல், மனதை மடைமாற்றிக்கொள்ளவோ (Channelising) இயல்பாக இயலுவதில்லை,
உள்ளுணர்வின் விடா வழிகாட்டலாலோ முன் அனுபவத்தாலோ அந்த சூழலை நாம்
நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறையால் (Fixed Approach) அணுகுகிறோம் சூழலுக்கு
ஒத்ததாய் (Situational opt) அது இருப்பதில்லை, ஆயினும் சூழலை சமாளித்து
விடுகிறோம். மேலும் மனதின் இயல்பான செயல்பாட்டில் இடர்கள் (Obstacles),
இன்னல் (Pains) ஏற்பட்டு அந்த உரசல்களை துன்பமாக மனதில் அனுபவிக்கிறோம்.
அது ஒரு அனுபவமாக மனதில் பதிகிறது. ஒருவேளை உணர்ச்சிகள் ஓங்கி உள்ளுணர்வு
நின்று நாம் விளைவறிந்த (சரியான) நோக்கோடு செயல் புரிய இயலாமலோ அல்லது
விளைவறியாமல் (தவறான) செயல் செய்து நிரந்தர துன்பத்திற்கு ஆளாகிறோம்.
ஒரு அனுபவமாக பதியும் பதிவைக்கொண்டுள்ள மனம், அந்த சூழலை மீண்டும்
அனுகும்போது அதே உணர்ச்சி/ உணர்வு நிலைகள் மனதிலே அனுபோகமாக எழுகிறது.
இங்கு அந்தந்த மனிதற்கு அவர் மனதிற்கு ஏற்ப இந்த சூழலை மறுமுறை
எதிர்கொள்கின்றனர். ஒன்று ஏற்பட்ட துன்பத்தால், மறுமுறை சூழலை
எதிர்கொள்ளாமல் விலகுவது, சூழலை தவிர்க்கவியலாதபோது மீண்டும் அதே துன்பநிலை
உணர்வோடு போராடுவது, தன்முனைப்பால் முறன்பட்ட மனதோடு ஆக்கப்பூர்வமான
அணுகுமுறையால் சற்று நிதானித்து சூழலை சமாளிப்பது, இத்தகைய மனநிலைகளால்
மனதில் இடர், இன்னல், உரசல், இறுக்கம், அழுத்தம் ஆகியவற்றை
ஏற்படுத்தவல்லது. இந்த மனநிலை தவிர்க்க/ மாற்ற நாம் நம் மனதை மடைமாற்ற
(Divert) முயல்கிறோம்.
இது நல்ல அணுகுமுறை தான். ஆனால் நிரந்தர
தீர்வை தராது. மேலும் மடைமாற்று என்ற பெயரில் உடலை மனதை கெடுத்துக்கொள்ளும்
பழக்கங்களுக்கும் மனம் அடிமையாகிறது. முல்லை முல்லால் எடுப்பது போல் மனதை
மனதால் தான் சீர் செய்ய முடியும். குறிப்பாக உங்கள் மனதைப்பற்றி உங்கள்
மனதை விட நன்கு இந்த உலகத்தில் எவரும் அறியார். மனதின் பினக்குகளுக்கான
தீர்வு/ மருந்து அம்மனதிலே தான் இருக்கும். அம்மருந்தை காட்டவல்ல கருவி
தான் அன்பு எனும் அறிவுணர்வு/ இயற்கை உணர்வு. அப்போது ஏற்பட்ட அனுபவத்தை
அமைதி நிலையில் அன்போடு அணுகி ஆய்ந்து உணர்வுகளை சீர்படுத்தி மறுமுறை சீரான
நோக்கோடு அணுகி பிழைகளை நீக்கி வெற்றி கொள்வது தானே சீரான நிலை?
நோக்கின்றி (Motive) மனிதனால் இயங்க முடியுமா?
அணு முதல் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு நோக்கோடே இயங்குகின்றன. நோக்கை
தவிர்த்தால், அது இயற்கைக்கு முறன்பட்டதாகும். நோக்கற்ற மனதால் இயல்பாக
இருக்க இயலாது, அது துன்பத்தையும் தரும். நோக்கு என்பதை விருப்புள்ள எண்ணம்
என்றோ, ஆசை என்றோ கொள்ளலாம். ஆசை இல்லையேல் துன்பம் நிச்சயம். பசி
எடுக்கிறது-ஆசை, உணவு உண்ணவில்லையெனில் துன்பம் வரும். தயவு கூர்ந்து
புத்தர் கூரிய ”ஆசை தான் துன்பத்திற்கு காரணம்” என்ற கருத்தை இங்கு தவறாக
இணைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. அதன் விளக்கம் வேறு, அது ஓர் உயர்
கருத்து அதைப்பற்றி பிரிதொரு முறை ஆய்வோம்.
நோக்கும் ஆய்வும்:
உங்களுடைய நோக்கு சரியானதாகவோ தவறாதாகவோ இருக்கலாம் முதலில் அதை உங்கள்
உள்ளம் விரும்ப வேண்டும், அதாவது சரி தவறு என்பதை எப்படி வரைவறுப்பது?.
அன்பு என்பதை எப்படி விளங்கிக்கொள்வது / உணர்வது? அறிவியல் பூர்வமாக இதனி
விளங்கிக்கொள்ள முடியுமா? ஆசை பற்று வேறுபாடு என்ன? என்ன குழப்பம் இது.?.
தொடர்ந்து ஆய்வோம். கொஞ்சம் இடைவெளி விட்டு…
இக்கருத்து சார்ந்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...
வாழ்க வையகம்!... வாழ்க வளமுடன்!!...
ச.பிரகாசம்
Forensic Science Dept | பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!...
ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும்
படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு
நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய
அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.
45 HMs promoted as DEO | தலைமை ஆசிரியர் 45 பேருக்கு டி.இ.ஓ.,வாக பதவி உயர்வு
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 45 பேர்,
மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்
மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
Education is Future Insurance | கல்வியே எதிர்காலத்திற்கான காப்பீடு
கல்வி என்பது முதலீடு மட்டுமல்ல, நமது வாழ்க்கை முழுவதற்குமான
காப்பீடும் ஆகும். கல்வி என்பது மாபெரும் காப்பீடு எனினும் அது பாடங்கள்
சம்பந்தப்பட்ட கல்வி மட்டும் அல்ல. வாழ்வில் வெற்றியடைந்த வெற்றியாளர்கள்
கல்வியின் உறுதுணையுடன் தான் வெற்றிக் கனியை தக்க வைத்திருக்கிறார்கள்
என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.
Higher studies Incentive Problem | உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்குவதில் முரண்பாடு
உயர் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்குவதில், முரண்பாடு நிலவுவதால்,
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், போர்க்கொடி தூக்கி
உள்ளனர்.
3 Lakh Teachers boycott Mid Day Meal Scheme| மதிய உணவு திட்டத்தை புறக்கணிப்பதாக 3 லட்சம் ஆசிரியர்கள் அறிவிப்பு
பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்த சம்பவத்தை
தொடர்ந்து, "மதிய உணவு வழங்கும் பணியில், இனி, ஈடுபட மாட்டோம்" என
அம்மாநிலத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
Science Express arrive on 27th to Chennai | அறிவியல் எக்ஸ்பிரஸ்: சென்னைக்கு 27ம் தேதி வருகை
பல்லுயிர்களையும், தட்பவெப்ப மாறுதல்களையும் மையமாக கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ள, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 27ம் தேதி, சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது.
Engineering 2 Phase counselling july 28 | ஜூலை 28ல் இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு
"இரண்டாம் கட்ட பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு, வரும், 28ம் தேதி
நடக்கும்" என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும்
மாணவர்கள், வரும், 27ம் தேதி வரை, அண்ணா பல்கலையில், நேரடியாக
விண்ணப்பிக்கலாம்.
சுகாதாரமான முறையில் சத்துணவு தயாரிக்கப்படுகிறதா?
பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறப்பு, நெய்வேலியில்
குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,
அங்கன்வாடி சத்துணவு மையங்களை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது; ஆய்வுப் பணி இன்று தொடங்குகிறது.
பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்திற்கு மவுசு
பி.இ., கலந்தாய்வு துவங்கியதில் இருந்து, இ.சி.இ., (எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) பாடப் பிரிவு தான், முதலிடத்தில்
இருந்தது. தர வரிசையில் முதலிடங்களை பெற்ற மாணவர் உட்பட அனைவரும், இந்த
பாடப் பிரிவைத் தான் தேர்வு செய்தனர்.
குரூப் 4 பயிற்சி வகுப்பு: பங்கேற்க அழைப்பு
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பொறியியல் இடங்கள் நிரம்பின: இன்னும் 90,000 காலி
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு, ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில்,
இதுவரை, ஒரு லட்சம் மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
எனினும், 90 ஆயிரம் இடங்கள், இன்னும் நிரம்பாமல் உள்ளன.
ஆசிரியர் அல்லாத பள்ளிகள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள்
தமிழத்தின் 16 பள்ளிகளில் சுத்தமாக ஆசிரியர்களே இல்லை என்றும், பல
பள்ளிகளில் 1 அல்லது 2 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், ராஷ்ட்ரிய மத்யமிக்
சிக்ஷா அபியான் சர்வே, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
விரும்பியதை தேர்ந்தெடுக்கும் தலைமுறை: டாக்டர்களின் குழந்தை இன்ஜினியர்
ஒவ்வொரு மாணவருக்கும் ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது கனவு.
ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டுமெனில் ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ.,
அட்வான்ஸ்டு ஆகிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இது பின்
தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானது. இதையும் மீறி நிறைய மாணவர்கள்
சாதிக்கின்றனர்.
ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
"அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு
குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட
"லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று
ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தபால் மூலம் எம்.பில்., பிஎச்.டி.,: அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
"தபால், தொலைதூர கல்வி, திறந்தவெளி பல்கலை மூலம்,
எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களை, கல்லூரிகளில்
விரிவுரையாளராக நியமிக்கத் தகுதியில்லை" என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய
மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, 2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தபால் அல்லது தொலைதூர கல்வி அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள், அரசு நியமனங்களுக்கோ, சுயநிதி கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமனம் பெறவோ தகுதியில்லை" என, கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை, தன்னிச்சையானது; யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிரானது. கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம், யு.ஜி.சி.,க்கு தான் உள்ளது. தபால் மற்றும் தொலைதூர கல்வி மூலம் வழங்கப்படும் படிப்புகளை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் யு.ஜி.சி., அங்கீகரித்துள்ளது. தொலைதூர கல்விக் குழுவும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளை, அங்கீகரித்துள்ளது.
யு.ஜி.சி., விதிமுறைகளில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதியை, பொதுவாக தான் குறிப்பிட்டுள்ளது. ரெகுலர் படிப்பு அல்லது தபால் மூலம் அல்லது தொலைதூர கல்வி மூலம் தான், இந்த தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என, கூறப்படவில்லை. எனவே, உயர் கல்வித் துறையின் அரசாணைக்கு, தடை விதிக்க வேண்டும். அதை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் பானுமதி, சிவஞானம் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜரானார். "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: "கல்வியாளர்களின் ஆலோசனை பெற்று, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு எடுத்துள்ள முடிவில், இந்த கோர்ட் குறுக்கிட முடியாது. யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு அல்லது வேறு எந்த சட்டப் பிரிவுகளுக்கும் முரணாக, இந்த அரசாணை இல்லை. எனவே, அரசாணையை ரத்து செய்யத் தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.
வேலூர், ஊரிஸ் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவரும், வழக்கறிஞருமான, இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கடந்த, 2009ம் ஆண்டு, உயர் கல்வித் துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தபால் அல்லது தொலைதூர கல்வி அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள், அரசு நியமனங்களுக்கோ, சுயநிதி கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமனம் பெறவோ தகுதியில்லை" என, கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணை, தன்னிச்சையானது; யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிரானது. கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம், யு.ஜி.சி.,க்கு தான் உள்ளது. தபால் மற்றும் தொலைதூர கல்வி மூலம் வழங்கப்படும் படிப்புகளை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் யு.ஜி.சி., அங்கீகரித்துள்ளது. தொலைதூர கல்விக் குழுவும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகளை, அங்கீகரித்துள்ளது.
யு.ஜி.சி., விதிமுறைகளில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., தகுதியை, பொதுவாக தான் குறிப்பிட்டுள்ளது. ரெகுலர் படிப்பு அல்லது தபால் மூலம் அல்லது தொலைதூர கல்வி மூலம் தான், இந்த தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என, கூறப்படவில்லை. எனவே, உயர் கல்வித் துறையின் அரசாணைக்கு, தடை விதிக்க வேண்டும். அதை, ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் பானுமதி, சிவஞானம் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி ஆஜரானார். "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: "கல்வியாளர்களின் ஆலோசனை பெற்று, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு எடுத்துள்ள முடிவில், இந்த கோர்ட் குறுக்கிட முடியாது. யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு அல்லது வேறு எந்த சட்டப் பிரிவுகளுக்கும் முரணாக, இந்த அரசாணை இல்லை. எனவே, அரசாணையை ரத்து செய்யத் தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது." இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.60 கோடி! முன்னோடி வங்கி மேலாளர் தகவல்
"நடப்பு கல்வியாண்டில், கனரா வங்கி கிளைகள் சார்பில்,
மாணவர்களுக்கு கல்விக்கடனாக 60 கோடி ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது,"
என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் தெரிவித்தார்.
டைப்ரைட்டிங் தேர்வுகள் ஆக.18ம் தேதி ஆரம்பம்
தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)