பள்ளி மாணவர், "இளம் விஞ்ஞானி விருது" பெற தேசிய, "ரோபோ தொழில்நுட்பம்" போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.
pack
தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பட்டப் படிப்பு மற்றும்
பட்டயப் படிப்பில் சேர, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அடுத்த மாதம், 15ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாதிரி பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம்
சேலம் மாவட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்
செயல்பட்டு வந்த மாதிரிப்பள்ளிகள், 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத
தேர்ச்சி பெற்றதால், புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர,
மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி - தினமலர்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகையில் மோசடியைத்
தவிர்க்க, அரசு தற்போது விதித்துள்ள, கிடிக்கிப்பிடி உத்தரவால், பல பள்ளி
தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு துவங்கியது. விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற
உள்ளது. ஜூலை, 2ம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்குகிறது.
சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு
சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம்
வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை,
செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு
இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
வி.ஏ.ஓ., ஆறாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.
மருத்துவ படிப்பு சென்டாக் கவுன்சிலிங் ஜூலை 6ல் துவக்கம்
மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் வரும் ஜூலை 6ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி: மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங் கட்டணம் வெளியீடு
மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு கவுன்சிலிங் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.180 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு: ஐ.ஓ.பி., மண்டல மேலாளர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 2013-14ம் ஆண்டில் 180 கோடி ரூபாய்
கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ்யின்
ஈரோடு மண்டல மேலாளர் சுந்தர் தெரிவித்தார்.
மாற்றம் தரும் போக்குவரத்து பொறியியல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும்
வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பவர்கள்
டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியர்கள். இத்துறை சார்ந்த இளநிலை மற்றும்
முதுநிலை படிப்புகள் பல்வேறு கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.
மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை பணிநீக்கம்
பழனி அருகே நெய்க்காரபட்டியிலுள்ள பள்ளியில்
மாணவியை பிரம்பால் தாக்கிய ஆசிரியையை பணி நீக்கம் செய்ய, மாவட்டக் கல்வி
அலுவலர் உத்தரவிட்டார்.
எம்.பி.ஏ.,க்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு
எம்.பி.ஏ., பட்டப் படிப்பில் சேர தேர்வானோர் விவரம், சென்னை பல்கலைக்கழக
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்
ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி
முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம்
அறிவுறுத்தியுள்ளது.
கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில் அண்ணா பல்கலை "ஹவுஸ்புல்"
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில், அண்ணா
பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்த இடங்கள், நேற்றுடன்
நிரம்பிவிட்டன.
எம்.பி.பி.எஸ்., இடம் கோரி மாற்று திறனாளி மாணவி மனு
எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் ஒதுக்கக் கோரி, மாற்றுத் திறனாளி மாணவி,
சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்க
உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 1ம் தேதிக்கு, ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
கிராமப்புற சேவை: மருத்துவ மாணவர் எதிர்ப்பு
"கிராமங்களில் பணிபுரியும் மருத்துவருக்கு, 50 சதவீதம் கூடுதல் ஊதியம்
தரப்படும் என்ற அறிவிப்பை, மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்" என சமூக
சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்வு எழுதினால்தான் மாநில அதிகாரிகள் இனி ஐ.ஏ.எஸ்.,
மாநில அளவிலான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற, இனி
தேர்வு எழுத வேண்டும் என, மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)
அறிவித்துள்ளது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது?
பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு பரிசுத் தொகை, இன்று
வரை வழங்கப்படவில்லை.
இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி
உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு
பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக
செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக
இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
அரசு இசைப்பள்ளியில் ஊக்கத்தொகையுடன் இசைப்பயிற்சி
"அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து குரலிசை, வயலின்,
மிருதங்கம், பரதநாட்டியம் பயிற்சி பெற விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியரை
தொடர்பு கொள்ளலாம்" என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை...
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் கல்விக்கு கொடுக்கும்
முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத பள்ளிகளில்
விளையாட்டு மைதானம் புதர்மண்டியும், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றியும்
உள்ளது. மாணவர்களிடம் விளையாட்டு திறனை வளர்ப்பது
கேள்விக்குறியாகிவிட்டது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு
அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு
மவுசு அதிகரித்துள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில், டிகிரி
முடிக்கும் பலர் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளை எழுதுவதில் ஆர்வம்
காட்டுகின்றனர். குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில் திருக்குறள், இலக்கணம்,
இலக்கியம், நூலாசிரியர்கள் என, தமிழ் பாடத்தில் இருந்து 80 வினாக்கள் வரை
கேட்கப்படுகிறது. இதனால், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கருதுவோர்,
பட்டப்படிப்பில் தமிழை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கலைக் கல்லூரிகளில், கடந்த ஆண்டுகளை விட, இவ்வாண்டு தமிழ் இலக்கிய
பாடப்பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும்
நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட 5 முதல் 8 மடங்கு விண்ணப்பங்கள்
வந்துள்ளன.
உதவி தமிழ் போராசிரியர் இளவரசன் கூறும் போது, "முன்பு தமிழ்பாட பிரிவில்
யாரும் சேரமாட்டார்கள்.வேறு பாடப்பிரிவு கிடைக்காதவர்கள் தான் தமிழில்
சேருவர். தற்போது, போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
போட்டி தேர்வில் தமிழுக்கு முக்கியம் இருப்பதால், தமிழ்பாடத்தில் சேர
ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.
வசூலாகாத கல்வி கடன்கள்: கனரா வங்கி புதிய திட்டம்
வசூலாகாத கல்விக் கடன்களை திரும்பப் பெறுவதற்கு, கடன் சீர்திருத்த
திட்டத்தை, கனரா வங்கி செயல்படுத்த உள்ளது. இவ்வங்கியின் வசூலாகாத கல்விக்
கடன், 9 சதவீதமாக உள்ளது. இதை, 2 சதவீதமாகக் குறைக்க இவ்வங்கி
திட்டமிட்டுள்ளது.
போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு
அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு
மவுசு அதிகரித்துள்ளது.
அரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன் அரசாணை வெளியிட்டும்,
பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.
பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு
இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள்
செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி,
தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின்
துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல்
மிஸ்ரா அறிவித்துள்ளார்.
தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை
மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட
வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை
எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.
மாணவர்கள் கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த
ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு
தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யு.ஜி.சி., துணைத் தலைவராக சென்னை பல்கலை பேராசிரியர் நியமனம்
பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் துணை தலைவராக, சென்னை
பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் தேவராஜ், 59 நியமிக்கப்
பட்டுள்ளார். இவர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக தற்காலிக பொறுப்பு
வகித்துள்ளார்.
சட்டப் படிப்புக்கு 9,000 விண்ணப்பம் விற்பனை: ஜூலை 10 கடைசித் தேதி
சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 9 ஆயிரத்தை தாண்டியது.
மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கு, வரும், 10ம் தேதி வரை விண்ணப்பம்
வினியோகிக்கப்படும்.
தொழிற்கல்வி பிரிவு பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 1ல் துவக்கம்
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம்
தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு
மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவ படிப்பு: 28ல் கலந்தாய்வு
அண்ணாமலைப் பல்கலையில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, வரும் 28ம்
தேதி கலந்தாய்வு துவங்குகிறது. இன்ஜினியரிங் படிப்புக்கு, ஜூலை 3ம் தேதி
துவங்கி, 7ம் தேதி வரையிலும், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை
படிப்புக்கு, ஜூலை 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
கவனிக்க வேண்டிய காப்புரிமைப் படிப்பு
மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை
பெறுவது அத்தியாவசியம். காப்புரிமைச் சட்டம் எனப்படும் பேடன்ட் ரைட் என்பது
ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடியது.
ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்
"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி
மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பார்டென்டர் பணி - சந்தோஷமும், சம்பாத்தியமும் பெறலாம்!
பானங்களை கலத்தல் மற்றும் பொருத்திப் பார்த்தல் ஆகிய கலையில் ஆர்வம்
கொண்டிருந்து, இரவில் விழித்திருந்து பணி செய்வதை ஒருவர் விரும்பினால்,
பார்டென்டர் பணிக்கு அவர் பொருத்தமானவர்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்
இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை
பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர்
தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
திட்டக்குழு அனுமதி முறையை ரத்துசெய்ய கோரிக்கை
"பள்ளி கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழும அனுமதி தேவை, என்ற உத்தரவை
ரத்து செய்ய வேண்டும்" என, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க
நிர்வாகிகள் கூறினர்.
ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம்
மதுரையில், தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான
புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம்
பாடம் நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும்
மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால்,
கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள்
நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும்
அதிருப்தி அடைந்தனர்.
நீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா? - இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...
சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான
ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய
பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில்
அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, காரைக்குடியில் நடந்தது. 3,837 பேர் தேர்வெழுதினர்.
குரூப்-4 தேர்வு - புரோக்கர்கள் தலையீடு இருந்தால் வெளிப்படையாக புகார் தரலாம்
"குரூப்-4 தேர்வில், புரோக்கர்கள் தலையீடு இருந்தால், தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தில், வெளிப்படையாக புகார் தரலாம். புரோக்கர்கள்
சிறையில் தள்ளப்படுவர்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்,
நவநீதகிருஷ்ணன் கூறினார்.
ஜுலை 4ம் வாரத்தில் கால்நடை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு
கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, ஜூலை நான்காம் வாரத்தில் துவங்குகிறது.
பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம்
புதிதாக தங்களது பட்டப்படிப்புகளை முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள்
அதிகமாக இருக்குமிடம் கால் சென்டர்கள் தான். இந்தியப் பொருளாதாரம்
தாராளமயமாக்கப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பல பணிகளை
அவுட்சோர்சிங் செய்து இந்தியாவில் கடை விரித்தன.
வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்
ஆசியாவிலேயே முதல் வானிலை கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது தான்
வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்.
குழப்பத்தை குழி தோண்டி புதையுங்கள்...
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது,
எந்தப் படிப்பை படித்தால் நல்லது, எந்த படிப்பு எளிதாக இருக்கும், எந்த
படிப்பை படித்தால் வேலை கிடைக்கும், அதிக சம்பளம் தரும் படிப்பு எது என
பல்வேறு கேள்விகள் மண்டையை குடையும்.
கல்லூரிகளில் முடங்கும் நாட்டு நலப்பணி திட்டம்
அரசு வழங்கும் நிதி உரிய காலத்தில் கிடைக்காததால், கல்லூரிகளில், நாட்டு
நலப்பணி திட்டத்தை செயலாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
பி.இ., மாணவர் சேர்க்கை: என்.ஆர்.ஐ., இடங்கள் குறைப்பா?
பி.இ., படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான
(என்.ஆர்.ஐ.,) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று இப்பிரிவின்
கீழ், கலந்தாய்விற்கு வந்திருந்த பலர், அண்ணா பல்கலை அலுவலர்களுடன்
வாக்குவாதம் செய்தனர்.
Subscribe to:
Posts (Atom)