டாடா சமூக அறிவியல் கல்வி நிலையம் இளைஞர்களின் மன நிலையை
அறிந்து கொள்வதற்காக "இளம் இந்தியா" என்ற ஆய்வை இளைஞர்களிடையே
மேற்கொண்டது. இந்த ஆய்வில், மும்பை பகுதியைச் சேர்ந்த 250 இளைஞர்களும்,
டில்லி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுமாக மொத்தம் 500 இளைஞர்கள்
கலந்துகொண்டனர்.
pack
"தொடர்ந்து படித்தால் புதிய சிந்தனை உருவாகும்"
"தொடர்ந்து படிக்கும்போது தான், புதிய சிந்தனை உருவாகும்," என காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுடலைமுத்து பேசினார்.
ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க சிவப்பு சீருடை அணியும் மாணவர்கள்
ஜார்க்கண்டில், ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள, மூன்று அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ரயில் விபத்துகளிலிருந்து தப்பிக்க,
தினமும் சிவப்பு சீருடை அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரிப்பு: காவல்துறை நடவடிக்கை தேவை
ஈரோடு நகரில் பள்ளிக்கு டூ வீலரை ஓட்டி வரும் மாணவர்கள்
அதிகரித்துள்ளனர். விபத்துக்கள் மூலம் உயிர்பலி ஏற்படும் முன் போலீஸார்
நடவடிக்கையுடன், பெற்றோரிடம் இதுபற்றி அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி
செல்லா மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த, 10ம்
தேதி துவங்கி வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.
அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்
அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி
பிரிவு கட்டயாமாக துவக்க வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்
"ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட
உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்ரல் 17ல் துவங்குகிறது" என,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்வி: அடுத்த வாரம் அறிவிப்பு?
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய
தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய பாடத்திட்டங்கள்,
சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில் மீண்டும், தமிழில்
இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு,
அடுத்த வாரம் வெளியாகிறது.
மலைவாழ் மக்கள் கல்வி பெற "இக்னோ" புதிய திட்டம்
"மலைவாழ் மக்களிடம், உயர்கல்வியை கொண்டு செல்லும் வகையில், மழைவாழ்
பகுதியில், தொலைதூரக் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, இக்னோ
சென்னை மண்டல இயக்குனர் அசோக்குமார் கூறினார்.
வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த பள்ளிச் சிறுவன்
கிராம மக்களின் சுகாதாரம் கருதி, கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில்,
வீட்டில் மட்டுமின்றி, கிராமத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான், 13
வயது பள்ளி சிறுவன்.
ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்
இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரத்தத்தில்
குளித்த ஒரு நிகழ்வு தான், 1919 ஏப்., 13ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில்,
"ஜாலியன்வாலா பாக்' எனும் திடலில், வெள்ளையர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி
சூடு.
உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம் -DINAMALAR
தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., கட்டுப்பாட்டில் வரும், பகல்நேர பராமரிப்பு
மையங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், நிதி ஒதுக்கீடு செய்யாததால், இயலாக்
குழந்தைகள், மூன்று நேர உணவுக்கு வழியின்றி தவிக்கின்றன.
அடுத்த மாதத்தில் நடமாடும் அருங்காட்சியகம் செயல்படும்
அருங்காட்சியகங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக,
அமைக்கப்படும் நடமாடும் அருங்காட்சியகம், அடுத்த மாதத்திலிருந்து செயல்படத்
துவங்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனி ஆன்லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி,
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த
வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவருக்கு கல்விக்கடன்: ஐகோர்ட் உத்தரவு
மதுரை புதூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு, கல்விக்கடன்
வழங்க, இந்தியன் வங்கி கிளை மேலாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு
பிறப்பிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக
கேட்கப்பட்டிருந்ததால், சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்ணிற்கு
மேல் பெறலாம். நன்றாக படிக்கும் மாணவர்கள், "சென்டம்" பெற, அதிக
வாய்ப்புள்ளது என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.இ., மேம்பாட்டுத் தேர்வு நடைமுறைகளில் மாற்றம்
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல், ஒரு அதிர்ச்சி
காத்திருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், இம்ப்ரூவ்மென்ட்
மற்றும் கம்பார்ட்மென்ட் தேர்வுகளை எழுதும் முயற்சிகளின் எண்ணிக்கையை,
வாரியம் குறைக்க முடிவு செய்துள்ளது.
பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?
தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது
குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி
எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன்
அளித்த பதில்:
தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்க உத்தரவு
"தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத
பணியாளர்களுக்கு, வங்கி மூலம் ஊதியம் செலுத்தப்படும்' என, தமிழ்நாடு
ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க சத்துணவு பணியாளர் கோரிக்கை
ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு, கடைசி மாத
ஊதியத்தில், பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு
சத்துணவு பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு
சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
தொடர் முழக்க போராட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், நடந்தது.
தவணையல்ல, உரிமை!
பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒரு மாதத்துக்கு மேலாக வசூலிக்கக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, ஒரு பள்ளி மாணவருக்கான கல்விக் கட்டணத்தை அந்தந்த மாதம் 10-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதுமானது என்கிறது தீர்ப்பு.
தொலைநிலை கல்வியின் குரல்வளை நசுக்கப்படுகிறதா? கல்வி கவுன்சிலின் உத்தரவுக்கு எதிர்ப்பு
தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கு, அதிகார எல்லையை
நிர்ணயித்து, தொலைநிலை கல்வி குழு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் மட்டுமே, கல்வி மையங்களை
அமைக்க வேண்டும். மாநில எல்லையைக் கடந்து, அரசு பல்கலைக் கழகங்கள் சேவையைத்
தொடரக் கூடாது என்று, கல்விக் குழு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்
வழி கற்றலை, தமிழகத்துக்கு வெளியே உள்ளவர்கள் எப்படி பயன்படுத்த முடியும்
என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
சரியும் மாணவர் சேர்க்கை; தமிழகத்தில் கல்லூரிகள் விற்பனை அமோகம்: கோவை மண்டலம் டாப்
தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகள் விற்பனை
செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மண்டலத்தில் சுமார் 15 கல்லூரிகள்
விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இன்ஜினியரிங் கல்லூரிகள்
ஆகும். இதனால் கல்லூரி உரிமையாளர்கள் ஆகும் ஆசையில் ஏராளமானோர் தமிழகத்தை
நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
How to Unlock Data Card-Internet Modems to use any network sim ?
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால்அவர்களுடைய
SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து
இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால்
Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த
Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி
கண்டுபிடிப்பது?
மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு
ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை
அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து, மே 4 ல்
அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு
செய்துள்ளது.
ஜனவரி 2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை
ஜனவரி
2013 முதல் 8 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க கோரி அகில இந்திய இரயில்வே
சங்கம் சார்பில் அதன் பொது செயலாளர் திரு.சிவ கோபால் சர்மா மத்திய நிதி
அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விடைத்தாள் திருத்த ஆசிரியர் இல்லை: வேறு மையத்திற்கு மாற்றம்
சிவகங்கை மையத்தில், பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்கள் போதிய
ஆர்வம் காட்டாததால், குறிப்பிட்ட சில பாடத்திற்கான விடைத்தாள்கள்,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நாளையுடன் முடிகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
கடந்த மாதம், 27ம் தேதி துவங்கிய, 10ம் வகுப்பு பொது தேர்வு, நாளை, 12ம் தேதி நடக்கும் சமூக அறிவியல் தேர்வுடன் முடிகிறது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும்
வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள
3500 அரசால் நடத்தப்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் ஆங்கிலப் பயிற்று மொழி
வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்
34871 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 8500 பள்ளிகள் ஆங்கிலப் பயிற்று
மொழிப் பள்ளிகளாக உள்ளன.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இந்த வாரத்துடன் நிறைவு
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், இந்த வாரத்துடன் முடிவடைகின்றன.
இதையடுத்து, "டேட்டா சென்டரில்" மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள்,
மும்முரமாக நடந்து வருகின்றன.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு
முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், விருப்பப் பாடமாக,
சட்டப்பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு
ஒரு மாத விடுமுறைக்கு பின், சட்ட கல்லூரிகள், வரும், 15ம்
தேதி திறக்கப்படுகின்றன. தேர்வுகள், இரு வாரங்களுக்கு தள்ளி
போகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம்,
பொறியியல், சட்டம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம்
தேதி, போராட்டங்களை துவங்கினர்.
அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!
"அரசு ஆரம்பப்பள்ளியை, பலகோணத்தில் சீர்த்திருத்தம்
செய்து, அரசு ஊழியர் மற்றும் அனைத்து குழந்தைகளும் அங்கு படிக்க வழிவகை
செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்" என, நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!
அல்ஜீப்ரா குறித்து பயமும், கவலையும் கொண்டவர்களுக்கு ஒரு சந்தோஷமான
செய்தி. டிராகன் பாக்ஸ் என்ற ஒரு கருவியின் மூலம், அல்ஜீப்ராவை எளிதாக
கற்றுக் கொள்ளலாம். இந்த புதிய கண்டுபிடிப்பு, விளையாட்டு அடிப்படையிலான
கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்
சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் வங்கியில் பணம் எடுத்து ரொக்கமாக ஊதியம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்
SSLC பொதுத் தேர்வு, ஆங்கிலம் இரண்டாம் தாளில்
மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த
கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி
நேரம் முடிந்ததும் பள்ளி தேர்வில் வினாத்தாள் குளறுபடி குறித்து கவன
ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்
கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால்
ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங்கை
நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழக மாநில தலைவர் சுப்பையா பேசினார்.
செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள்
விடைத்தாள் மாயமான விவகாரத்தில், நீண்ட ஆலோசனைக்குப் பின், "பாதிக்கப்பட்ட,
221 மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது" என, தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தரா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அனைத்து மாணவர்களுக்கும் ஆறு மதிப்பெண்கள் : பிளஸ் 2 கணித விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்
பிளஸ் 2 கணித தேர்வில், ஆறு மதிப்பெண் கொண்ட வினா ஒன்றுக்கு, அனைத்து
மாணவர்களுக்கும், மதிப்பெண் அளிக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள
அறிவிப்பால், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்
குழப்பமடைந்துள்ளனர்.
நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும்,
முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம்
செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள், நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல
பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள் : அதிக மாணவர்கள் 100 மார்க் பெறுவார்கள்
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், அனைத்து கேள்விகளும் எளிமையாக
இருந்ததால், அதிகம் பேர் 100 மார்க் பெறுவார்கள் என மாணவர்கள், ஆசிரியர்கள்
மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்'
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல
குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த
அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண்
பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய
மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: சட்டசபையில் முதல்வர் அறிவி்ப்பு
தமிழக சட்டசபையில் விதி எண் 110 -ன் கீழ் முதல்வர்
ஜெயலலிதா பேசியதாவது, தமிழகத்தில் மேலும் 4 அறிவியல் மற்றும் கலை
கல்லூரிகள் துவங்கப்படும். சென்னையில் உலக செஸ் சாம்பியன் ஷிப் தொடர் வரும்
நவம்பரில் சென்னையில் நடக்கிறது. இந்த போட்டிக்காக தமிழக அரசு சார்பில்
ரூ. 29 கோடி நிதி ஒதுக்கப்படும்.
வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்: துணைவேந்தர் பேச்சு
வகுப்பறைகள் போர்க்களமாக மாறாமல் இருக்க வேண்டுமெனில்,
ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம், என பட்டமளிப்பு விழாவில், ஆசிரியர்
பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
"நூலகங்களில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் வலியுறுத்தல்
"நூலகங்களில், புதிதாக, ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, மாவட்ட நூலக
அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை
செல்வன் வலியுறுத்தினார்.
டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைன் தேர்வு: கூடுதலாக தேர்வர்கள் பங்கேற்றதால் காலதாமதம்
உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடத்துக்கான, டி.என்.பி.எஸ்.சி.,
ஆன்-லைன் தேர்வில், தேர்வு எழுத அதிகப்படியானோர் வந்ததால், காலதாமதம்
ஏற்பட்டது.
எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ரயில்களில் கொண்டு செல்லப்படும் எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
"சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்"
"சராசரி மதிப்பெண் பெறுபவர்களே, சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்,'' என, கல்வியாளர் ரமேஷ் பிரபா கூறினார்.
புதுகைக்கு நாளை உள்ளூர் விடுமுறை
புதுகை மாவட்ட கலெக்டர் மனோகரன் தெரிவித்திருப்பதாவது,
புதுக்கோட்டையில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில், பங்குனித்
திருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்ச்சியாக நாளை தேரோட்டம் நடக்கிறது.
இதையடுத்து நாளை புதுகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
விடப்படுகிறது.இருப்பினும் அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.
இவ்வாறு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)