மதுரை, அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல்
கல்லூரியில், "மாணவ இயக்குனர் 13"க்கான, ஐந்து நாட்கள் குறும்பட தயாரிப்பு
பயிற்சி முகாம், நேற்று துவங்கியது.
pack
உலக சிறுவர் நூல் தினம்: தாங்களே சிறுவர் நூல் தயாரித்த ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள்
உலக சிறுவர் நூல் தினத்தையொட்டி,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
தாங்களே சிறுவர் நூல்களை தயாரித்து பாராட்டு மற்றும் பரிசு பெற்றுள்ளனர்.
5 வருட ஒருங்கிணைந்த படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நொய்டாவில் உள்ள கௌதம புத்தா பல்கலைக்கழகத்தில்,
இந்த கல்வியாண்டில் 5 வருட ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் வழங்கப்படுகின்றன.
இப்படிப்பில் சேர விரும்பும் தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.டெக்., + எம்.டெக்/எம்.பி.ஏ.,
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) ஆகிய பாடப்பிரிவுகள் எடுத்து 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை கிரேடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் அல்லது வரைவோலை வழியாக செலுத்தலாம்.
ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க: தபால் மூலம் விண்ணப்பிப்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பொதுப்பிரிவினர் ரூ.1200ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
தேர்வு முறை: நுழைவுத்தேர்வு மற்றும் குழுக்கலந்துரையாடல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மே 26 நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.gbu.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.டெக்., + எம்.டெக்/எம்.பி.ஏ.,
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) ஆகிய பாடப்பிரிவுகள் எடுத்து 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை கிரேடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் அல்லது வரைவோலை வழியாக செலுத்தலாம்.
ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க: தபால் மூலம் விண்ணப்பிப்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பொதுப்பிரிவினர் ரூ.1200ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
தேர்வு முறை: நுழைவுத்தேர்வு மற்றும் குழுக்கலந்துரையாடல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மே 26 நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.gbu.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
மேட் நுழைவுத்தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.,16 கடைசி
மத்திய அரசின் வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
(IIM) உட்பட 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் எம்.பி.ஏ படிப்பில் சேர
மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியான மாணவர்கள் மேட் நுழைவுத்தேர்
மதிப்பெண் அடிப்படையில் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவர்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"
"இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமானால், ஆங்கிலம் படிப்பது
மிகவும் அவசியம். இளம் தலைமுறைக்கு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லை
என்றால், அவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும்" என, மத்திய மனிதவளத் துறை
இணை அமைச்சர், சசி தரூர் கூறியுள்ளார்.
பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?
பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான காலக்கெடு இன்று 31ம் தேதியுடன் முடிகிறது. அடிப்படை வசதிகளை இதுவரை பூர்த்தி செய்யாத 1000 தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் இயங்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
போதிய வசதிகள் செய்து தரவில்லை பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: ஆசிரியர்கள் எச்சரிக்கை
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாக்குறுதி அளித்தபடி
கல்வித்துறை வசதிகள் செய்து தராததால் விடைத்தாள் திருத்தும் பணியை
புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை
டில்லியைச் சேர்ந்த மாணவி, 23 வயதிலேயே, சி.ஏ., - சி.எஸ்., -
சி.டபிள்யூ.ஏ., என, கணக்கியல் தொடர்பான, மூன்று பட்டங்களில், தேர்ச்சி
பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல் செயல்படும் 312 கல்வி நிறுவனங்கள்
"நாட்டில், முறையான அனுமதி பெறாமல், 312 பொறியியல் மற்றும் மேலாண்மை
கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன" என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்து உள்ளது.
10ம் வகுப்பு விடைத்தாள் நாசம்: ரயில்வே மீது வழக்கு
"பத்தாம் வகுப்பு விடைத் தாள்களை தவறவிட்ட, ரயில்வே நிர்வாகம் மீது
வழக்கு தொடரப்படும்" என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்
கூறினார்.
அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக
பள்ளிகள் செயல்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு அரசு அனைத்து விதமான கட்டுமான
வசதி, அடிப்படை வசதிகளை செய்கிறது.
கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்
அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர்
ஒருவர், ஊர் ஊராக சென்று, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு
நன்கொடை சேகரிக்கிறார்.
விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது, தமிழ் முதற் தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது என தேர்வுத்துறை அறிவிப்பு
"விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த
விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள்
எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம்
தாளுக்கும் வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி
தெரிவித்துள்ளார்.
நாளை சட்டசபை கூட்டம் : மானிய கோரிக்கைகள் மீது விவாதம் ஆரம்பம் ,10ம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை
தமிழக அரசின் 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 21ம் தேதி சட்டசபையில்
தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4
நாட்கள் சட்டசபையில் பொது விவாதம் நடந்தது.
குரூப் 4ல் தேர்வான 210 சர்வேயர்கள் ஓட்டம்: நிலஅளவை பயிற்சியில் அதிகாரிகள் அதிர்ச்சி
குரூப் 4ல் தேர்வான, 210 சர்வேயர்களுக்கு, குரூப் 2ல் அதிகாரமிக்க பதவி
கிடைத்ததால், நிலஅளவை பயிற்சியில் கலந்து கொள்ளாமல் ஓட்டம் பிடித்தனர்.
கடந்தாண்டு ஜூலையில், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,
சர்வேயர், டிராப்ட்மேன் ஆகிய காலிப்பணியிடத்துக்கு, 10,718 பேருக்கான
தேர்வு நடந்தது.
அனைத்து வசதிகளையும் கொண்ட அதிசய கிராமம் கங்கதேவி பள்ளி
ஆந்திராவில், ஒரு அதிசய கிராமம் உள்ளது. அனைத்து உள்கட்டமைப்பு
வசதிகளுடன், 24 மணி நேர மின் வினியோகத்துடன், சுத்தம், சுகாதாரத்துடன்
விளங்கும் இந்த கிராமம், நாட்டின் முன்னணி கிராமங்களில் ஒன்றாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல விருதுகளைப் பெற்றுள்ள இந்த கிராமத்தின்
தலைவர், சந்திர மவுலி, நேபாள நாட்டின் சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டுள்ளார்.
இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி
உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு
செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு
அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்
வகுப்பைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுப் பயிற்சி
அளிப்பதற்காக, பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில்,
இலவசமாக கல்வி கற்க, சென்னை பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு
வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின்
அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது
ரயிலில் அனுப்பப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்த சம்பவத்தில்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது என தேர்வுத்துறை
அறிவித்துள்ளது. சிதம்பரத்தையடுத்த பி.முட்லூர் மையத்தில் தமிழ் இரண்டாம்
தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டைக்கு ரயிலில் அனுப்பப்பட்டது.
கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை
விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில்
தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர்
வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக
எனக்கும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை
அளிக்கும்படி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ்,
மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி - ஜி. ராமகிருஷ்ணன்
கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவது
குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவுகளில் மிகச்
சிறப்பாகக் கருதப்படும் மாநிலங்களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதியமைச்சர்
சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி
குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்.1ம் தேதி முதல் பிபிஎப், மூத்த குடிமக்கள் சேமிப்புக்கு வட்டி குறைப்பு
வரும் 1ம் தேதி முதல், பிபிஎப் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு
திட்டத்துக்கான வட்டி 0.1 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி
அறிவித்துள்ளது.
கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
"மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க
வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.
வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்
தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.
"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"
"விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின்
தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்
பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்
தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில்
நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்
"அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 47 ஆயிரத்து 273
பேர் நியமிக்கப்பட உள்ளனர்" என, அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்பில் சேர இணையத்தில் விண்ணப்பம்
அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளில் சேர, பல்கலை
இணையதளம் வழியாக, ஏப்., 13ம் தேதி வரை, பதிவு செய்யலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு
கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து
மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த
உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது.
கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும்
குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி.,
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி.,
முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., வாபஸ்
பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும்
எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.
10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு
10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில்,
வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல
பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத
முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை
இயக்குனர் அறிவித்துள்ளார்.
கல்வி கடன் பெற எளிய வழி என்ன?
மதுரையில் "தினமலர்" சார்பில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில்
மாணவர்களுக்கு கல்வி கடன் எளிய வழியில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து
மதுரை கனரா வங்கி சீனியர் மேனேஜர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாதாந்திர கட்டணம் உயர்வு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாதாந்திர கட்டணங்கள், வரும், ஏப்ரல்
மாதம் முதல் உயர்த்தப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை,
கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனினும், டியூஷன் கட்டணங்களில், எவ்வித
மாற்றமும் இல்லை.
10ம் வகுப்பு வினாத்தாளில் "பார் கோடு'
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.
வினாத்தாள்கள், அந்தந்த கல்வி மாவட்ட மையங்களுக்கு, பத்து நாட்களுக்கு
முன்பு அனுப்பப்படும். ஒவ்வொரு மையங்களுக்கும், பணி மூப்பு அடிப்படையில்
இரு தலைமை ஆசிரியர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் : டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்
தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளில்
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு தமிழக அரசு கடிதம்
எழுதியிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்
தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனங்களின், இளங்கலை தேர்வுக்கு,
வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது"
"உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, மாணவர்களை பள்ளி நிர்வாகம்
பாரபட்சமாக நடத்தக்கூடாது" என, பள்ளிக் கல்வி துறை செயலர்
உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள்
மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று
கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?
பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள்
வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால்,
கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு
தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச இட வசதியை ஏற்படுத்தாத தனியார்
பள்ளிகள் பிரச்னை குறித்து, ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன்
தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இக்குழு, மூன்று மாதங்களில், தமிழக அரசுக்கு, அறிக்கையை வழங்கும் என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சி.ஏ., படித்தால் வளமான எதிர்காலம்: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்
"பிளஸ் 2 முடித்து சி.ஏ., (பட்டய கணக்காயர்) படிப்பை தேர்வு செய்தால்,
அதிக சம்பளத்துடன் வளமான எதிர்காலம் அமையும்" என, ஆடிட்டர் சரவணபிரசாத்
தெரிவித்தார்.
"கால்நடை, வேளாண் அறிவியல் படிப்புகளுக்கு காத்திருக்கு வேலை"
"கால்நடை மற்றும் வேளாண் அறிவியல் படிப்பு முடித்தால் உடனடி
வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன" என்று, மதுரையில் நடந்த தினமலர்
வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.
எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புக்களை எவ்வாறு
தேர்வு செய்வது என்று, மதுரையில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி
நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கினார்.
யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின் முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது.
இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்?
கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு
வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை,
மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது.
இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள்
ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகளில் பொதுத்தேர்வு எதிரொலி: பேரணி, கருத்தரங்குக்கு தடை வருமா?
"பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், பள்ளி மற்றும்
கல்லூரி மாணவ, மாணவியர் பங்குபெறும், பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள்
மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என, பெற்றோர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)