டில்லியைச் சேர்ந்த மாணவி, 23 வயதிலேயே, சி.ஏ., - சி.எஸ்., - 
சி.டபிள்யூ.ஏ., என, கணக்கியல் தொடர்பான, மூன்று பட்டங்களில், தேர்ச்சி 
பெற்று சாதனை படைத்துள்ளார்.
டில்லியைச் சேர்ந்தவர், பல்லவி சச்தேவா, 23. இவர், இந்த இளம் வயதிலேயே, 
கணக்கியல் தொடர்பான, சி.ஏ., எனப்படும், "சார்ட்டர்டு அக்கவுன்டண்ட் - 
சி.ஏ.,"; காஸ்ட் அன்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டன்ட் - சி.டபிள்யூ.ஏ., ; கம்பெனி 
செக்ரட்டரி - சி.எஸ்.,; ஆகிய மூன்று பட்டங்களில் தேர்ச்சி பெற்று, சாதனை 
படைத்துள்ளார்.
இளம் வயதில், இந்த மூன்று படிப்புகளில் தேர்ச்சி பெறுவது என்பது, 
மிகவும் கடினமான விஷயம். இதையடுத்து, நாடு முழுவதிலுமிருந்து, அவருக்கு 
பாராட்டுகள் குவிகின்றன.
இதுகுறித்து பல்லவி கூறியதாவது: பாடங்களை மனப்பாடம் செய்வதை தவிர்த்து, 
புரிந்து படித்ததே, என் வெற்றிக்கு காரணம். சர்வதேச நிதி நிறுவனத்தில் 
பணியாற்றுவதே, என் கனவு. தற்போது, சர்வதேச நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து, 
எனக்கு அழைப்பு வந்துள்ளதன் மூலம், என் கனவு நிறைவேறியுள்ளது. 
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவர், சாந்தா கோச்சார் தான், என் ரோல் மாடல். 
அவரைப் பார்த்து, பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு, பல்லவி 
கூறினார்.
 
 
  
No comments:
Post a Comment