தகுதியான, நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு
வசதிகள் இல்லாதது போன்ற குறைகளை மறைத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை,
ஆண்டுதோறும் கடல்சார் படிப்புகளில் சேர்த்து, கடல்சார் பல்கலை, மோசடி
செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல்கலையில் சேரும்
மாணவர்களின் கடல்சார் பணி, கனவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
pack
பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் சேர்க்கும் பணி
தாயனூர், அவலூர்பேட்டை பகுதியில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்கும் பணி நடந்தது.
ஆங்கில வழிக் கல்வி: மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம்
ரூர் மாவட்டத்தில் ஐம்பது அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி
துவக்கப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்
ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீடு குறித்து பயிற்சிஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது. முகாமில், செயல்வழிக் கற்றல் அட்டைகளில் உள்ள மாற்றங்கள், படைப்பாற்றல் கல்வி முறை குறித்து விளக்கப்பட்டது. அதபோல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் செயல்பாடுகள், தேர்வுகள் எவ்வாறு அமைப்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள், 96 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும் தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது. முகாமில், செயல்வழிக் கற்றல் அட்டைகளில் உள்ள மாற்றங்கள், படைப்பாற்றல் கல்வி முறை குறித்து விளக்கப்பட்டது. அதபோல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் செயல்பாடுகள், தேர்வுகள் எவ்வாறு அமைப்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள், 96 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை
பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், தமிழகம் முழுதும் உள்ள வட்டார வள மையங்களிலும் குறுவள மையங்களிலும் 06.07.2013 அன்று நடைப்பெற்றது.
முகாமில், செயல்வழிக் கற்றல் அட்டைகளில் உள்ள மாற்றங்கள், படைப்பாற்றல்
கல்வி முறை குறித்து விளக்கப்பட்டது. அதபோல், தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீட்டு முறையில் செயல்பாடுகள், தேர்வுகள் எவ்வாறு அமைப்பது பற்றியும்
எடுத்துரைக்கப்பட்டது.
தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள், 96 பேர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிராவில் கல்லூரி, பல்கலையில் கேமரா மொபைலுக்கு தடை?
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர், கேமரா மொபைல் போன்களை
பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க, மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களின் கருத்துகள் கோரப்பட்டு
உள்ளது.
மாணவர்களே நடத்தும் அங்காடி: அரசுப்பள்ளி அசத்தல்
உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், மாணவர்களே அங்காடி
அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி
உள்ளது.
மதுரை புத்தகக் கடைகளில் அதிகாரிகள் சோதனை
மதுரையில் தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள் கூடுதல் விலைக்கு
விற்கப்படுவதாக எழுந்த புகாரின்படி, கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடக்கக் கல்வி பட்டய படிப்பு சேர்க்கை: நாளை கவுன்சலிங்
"தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு
சேர்க்கைக்கான கவுன்சலிங், நாளை (ஜூலை 8), நாமக்கல் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளயில் துவங்கி, வரும் 15ம் தேதி வரை நடக்க உள்ளது" என,
முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார் தெரிவித்தார்.
பொறியியல் பாடங்கள்:மாற்றி அமைத்தது அண்ணா பல்கலை
பொறியியல் படிக்கும் மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை மேம்படுத்தி,
வேலை வாய்ப்பு பெறுவதற்கான திறனை அளிக்கும் வகையில், பாடத்திட்டங்களை
மாற்றி அமைத்து, அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது.
போலி செவிலியர் பயிற்சி நிறுவனங்கள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
நெல்லை மாவட்டத்தில் போலி செவிலியர்,
பிசியோதெரபி பயிற்சி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் கல்வி
நிறுவனங்களில் செவிலியர், பிசியோதெரபி, ஆய்வக நுட்பனர் ஆகியவற்றிற்கான
பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் கற்றுத் தரப்படுகிறது.
"கிரீன் கார்டு" வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன?
அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா
குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு,
ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.
பட்டதாரி இளைஞர்களுக்கு கடனுதவி: மத்திய அரசுடன் பேச முடிவு
பட்டதாரி இளைஞர்கள், சுயதொழில் துவங்குவதற்கு வழங்க வேண்டிய கடனுதவியை,
உடனடியாக வழங்க கோரி, மத்திய அரசுடன், தமிழக அரசு அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை: சீன அரசு அறிவிப்பு
வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத் தண்டனை அளிக்கப்படும், என்று சீன அரசு அறிவித்துள்ளது.
நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி
நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கியது.என்.எல்.சி.,
நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி வட்டம் 10ல் உள்ள புத்தகக் கண்காட்சி
திடலில் 16ம் ஆண்டு கண்காட்சியை நேற்று மாலை சென்னை ஐகோர்ட் நீதிபதி
தனபாலன் தொடங்கி வைத்தார்.
பள்ளி செல்ல முடியாத குழந்தைகளுக்கு "பாதுகாவலர்" நியமன முறை அமல்
போக்குவரத்து மற்றும் சாலை வசதி இல்லாததால், பள்ளிக்கு செல்ல முடியாமல்
உள்ள குழந்தைகளுக்கும், கல்வி வழங்கும் நோக்கில், சர்வ சிக்ஷ அபியான்
திட்டத்தில், "பாதுகாவலர்" - எஸ்கார்டு நியமன முறையை அமல்படுத்த, அரசு
திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி சதவிகிதம் சரிவு
சென்னை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்,
பிளஸ் 1 மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி
உள்ளன.
ஆதிதிராவிட மாணவருக்கு இலவச கல்வி: அரசாணையை அமல்படுத்த புது நடைமுறை
"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள், கல்லூரிகளில் எந்த
கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்" என்ற அரசாணையை அமல்படுத்துவதில்,
ஆதிதிராவிடர் நலத்துறை, புது நடைமுறையை பின்பற்றுகிறது.
கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்
"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை
குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச
நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
9,900 ஐ.ஐ.டி., இடங்களுக்கு 14 ஆயிரம் பேர் போட்டி
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., (தன்பாத்) கல்வி நிறுவனங்களில் உள்ள,
9,900 இடங்களுக்கு, 14 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். ஐ.ஐ.டி.,
சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன.
வெளியாகாத இளங்கலை தேர்வு முடிவுகள்: மாணவர்கள் அவதி
இளங்கலை தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில், பல கல்லூரிகளிலும்,
பல்கலைக்கழகங்களிலும் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, கல்வி
நிறுவனங்கள் துவங்கியுள்ளது, மாணவர் மற்றும் கல்வியாளர்களுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், 62 அரசு கலை,
அறிவியல் கல்லூரிகளும், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 438 சுயநிதி
கல்லூரிகளும் என, 633 கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 40 சதவீத கல்லூரிகள்,
தன்னாட்சி பெற்றவை.
தன்னாட்சி கல்லூரிகளில், கல்லூரி நிர்வாகமே தேர்வுகள் நடத்தி, முடிவுகளை
வெளியிடும். பல்கலைக் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில், தேர்வுகளை
நடத்தி, முடிவுகளை வெளியிடும் பணியை, பல்கலைக் கழகங்கள் செய்கின்றன.
தன்னாட்சி கல்லூரிகளில், இந்தாண்டிற்கான இளங்கலை தேர்வு முடிவுகள்
வெளியாகி விட்டன. பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், இளங்கலை
தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, தற்போது தான் நடந்து வருகிறது.
இந்நிலையில், முதுகலை பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, பல
கல்லூரிகள் துவங்கி விட்டன. ஆனால், முதுகலை மாணவர் சேர்க்கை தொடர்பான
அரசாணையில், "இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, முதுகலை பட்டப்
படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைக்கு மாறாக, முதுகலை பட்டப் படிப்புக்கான மாணவர்
சேர்க்கையைத் துவங்கியுள்ளது, முறைகேடுக்கு வழிவகுக்கும் என, குற்றம்
சாட்டப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க
தலைவர் தமிழ்மணி கூறியதாவது:
சென்னை, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்
கழகங்களில், முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டனர்.
சென்னையில் உள்ள பல அரசு உதவி பெறும் கல்லூரிகளும், சுயநிதி கல்லூரிகளும்,
முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
மாணவர்களின் முதல், ஐந்து பருவத் தேர்வு மதிப்பெண்ணை கொண்டு, கல்லூரி
நிர்வாகம், முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தி, கல்வி கட்டணத்தையும்
வசூலிக்கின்றன. ஒருவேளை, மாணவர், ஆறாவது பருவத் தேர்வில் தோல்வியடைந்தால்,
மாணவர் சேர்க்கை கதி என்ன என்பது பற்றி, தெளிவான தகவல் இல்லை.
பல்கலைக்கழகங்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது
வருத்தத்திற்குரியது. இதனால், நல்ல மதிப்பெண் பெறும் மாணவருக்கு, இடம்
கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு தமிழ்மணி கூறினார்.
இதுகுறித்து, முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம்
கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும், ஒரே நேரத்தில்,
தேர்வுகள் நடத்தி, முடிவுகள் வெளியிட வேண்டும். அப்போது தான், அனைத்து
தரப்பு மாணவருக்கும், கல்வி கற்க, சம வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு
சென்று மேல்படிப்பை தொடரும் மாணவருக்கும், சிக்கலின்றி வாய்ப்பு
கிடைக்கும். இவ்வாறு, திருவாசகம் கூறினார்.
பள்ளி மேற்படிப்பு பயில்வதில் சிரமம்; நலன் காக்க பார்வையற்ற மாணவர்கள் வேண்டுகோள்
"தஞ்சை சுற்றுவட்டார பார்வையற்றோர் மாணவ, மாணவியர் ப்ளஸ் 1
படிக்க சென்னைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க,
தஞ்சையிலுள்ள பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம்
உயர்த்த வேண்டும்" என, கலெக்டரிடம் பார்வையற்ற மாணவர், பெற்றோர் மனு
கொடுத்தனர்.
மாணவர்களை ஊர்வலத்திற்கு பயன்படுத்த எதிர்ப்பு
பள்ளி நேரத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபடுத்துவதால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை: முடங்கும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம்
போதிய நிதி இல்லாததால், கல்லூரிகளில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் செயல்படுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு புதிய தேடல் வேண்டும்: பயிற்சி முகாமில் அறிவுரை
"மாணவர்கள் புதிய தேடல்களில் ஈடுபடுவதால் தவறுகளை குறைக்க
முடியும்" என பொள்ளாச்சியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் வாழும்
கலை குழும நிர்வாகிகள் பேசினர்.
10ம் வகுப்பு வரலாறு புத்தகத்தால் சர்ச்சை
மும்பையில் 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் தவறான பகுதிகளை
நீக்கி விட்டு நடப்பு ஆண்டுக்கான பாட புத்தகத்தை கல்வித்துறை சமீபத்தில்
வழங்கியது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள்
திருப்பூரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிது.
பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை
திட்டக்குடி பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு காலை, மாலை
வேளைகளில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தேசிய இளைஞர் விருது: விண்ணப்பம் வரவேற்பு
சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும்
இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆழ்கடலை ஆராயும் தொல்லியல் வல்லுனர்கள்
உலகளவில் கடல்சார் ஆராய்ச்சிகள் அதிகளவில் தற்போது நடைபெற்று வருகின்றன.
அரசுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய பணிக் காலியிடங்களுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்காததால் கற்பிப்பதில் சிக்கல்
உடுமலையில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,
அனைவருக்கும் புத்தகப்பை வழங்கப்பட்டும், புத்தகங்கள் முழு அளவில்
வழங்கப்படவில்லை; புத்தகங்கள் பற்றாக்குறையாக வந்துள்ளதால், மாணவர்களுக்கு
பாடங்கள் கற்பிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
வணிகப்பள்ளிகளில் சேர்வதற்கான சிமேட் தேர்வு அறிவிப்பு
ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ஏ.ஐ.சி.டி.இ.)அமைப்பு
"காமன் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்"(சிமேட்) 2014-2015 தேர்விற்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு
தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02
லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம்
தெரிவித்துள்ளது.
மாநில நல்லாசிரியர் விருது: இணையத்தில் விண்ணப்பம் வெளியீடு
மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம்,
முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் இந்தாண்டு
வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவரை அலட்சியப்படுத்தும் பேருந்து ஊழியர்கள்: நீதிமன்றத்தில் வழக்கு
இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும்,
அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம்
இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை
மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால்
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கோரிக்கை விடுத்துள்ளனர்.
50 சதவீதம் பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள் இல்லை
தமிழகத்தில், 50 சதவீதம் பள்ளிகளில் போக்குவரத்து குழுக்கள்
அமைக்கப்படாதது குறித்து, போக்குவரத்து துறை கவலை தெரிவித்துள்ளது.
விபத்துகளை தடுக்க, இக்குழுக்கள் அமைப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை பல்கலை., முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழக முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று
(3ம் தேதி) வெளியாகிறது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
அறிக்கை:
மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் : அங்கீகாரம் இல்லாததால் மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில், கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின்
பெயரை, மாநில தரப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை சேர்க்காததால், அரசின்
சலுகைகளைப் பெற முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.
கழிப்பறை சுத்தம் செய்ய மாணவர்கள்: புகார் சொன்ன தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்
அரசு பள்ளி கழிப்பறையை, மாணவர்கள் உதவியடன், சுத்தம் செய்த ஆசிரியர்கள்
மீது, புகார் செய்ததால், மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு வழங்குமாறும்,
தலைமை ஆசிரியை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாலிடெக்னிக் கல்லூரிகள் 10ம் தேதி திறப்பு
முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்து வரும், 10ம் தேதி, பாலிடெக்னிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தடை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்.,
மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,)
இரண்டாண்டுகள் தடை விதித்துள்ளது" என, மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
அரசு பள்ளியில் குண்டுவெடிப்பு: 19 மாணவர்கள் காயம்
ஒடிசாவில், அரசுப் பள்ளியில் குண்டு வெடித்ததில், 19 மாணவர்கள்
காயமடைந்தனர். கட்டாக்கின் புறநகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்,
மாணவர்களின் வருகைப் பதிவேட்டை, நேற்று ஆசிரியை சரிபார்த்துக் கொண்டிருந்த
போது, திடீரென குண்டு ஒன்று வெடித்தது.
மருத்துவ படிப்பில் 3 இடங்கள் காலியாக வைக்க ஐகோர்ட் உத்தரவு
மாற்றுத் திறனாளிகளுக்காக, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மூன்று இடங்களை
காலியாக வைத்திருக்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் இடைக்கால
உத்தரவிட்டுள்ளது.
என் வாழ்வில் ஒளியேற்றுங்கள்: ஓய்வுபெற்ற ஆசிரியர் உருக்கம்
"பேருந்தில் தவறவிட்ட, ஐந்து லட்சம் ரூபாயை எடுத்தவர்கள், அப்பணத்தைத்
திருப்பிக் கொடுத்து, என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்" என ஓய்வுபெற்ற
ஆசிரியர், உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டர்: தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள்
* கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பள்ளிகளில் இன்டர்நெட் முடக்கம்: கணினி கல்வி கற்பதில் சிக்கல்
அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், கணினி கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மின்சாரம் தாக்கி மாணவி பலி: தலைமையாசிரியர் கைது
அரசு பள்ளி ஆய்வு கூடத்தில், மின்சாரம் தாக்கி, மாணவி இறந்தது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உள்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெட் தேர்வு: தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு
பல்கலைக்கழக மானிய குழு சார்பில் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர்
தகுதிக்கான, தேசிய தகுதி தேர்வு (நெட்) நாடு முழுவதும் நேற்று நடந்தது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலங்களில், 30
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
Subscribe to:
Posts (Atom)