உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே,
மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை
பெரும்பாலானோர் எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே
இல்லை. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், சுகாதாரம் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பால் ஏப்.,7ம் தேதி,
உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.
pack
10ம் வகுப்பு கணித தேர்வு கடினமாக இருந்தது ஏன்?
தமிழகத்தில், 10ம் வகுப்பு கணித தேர்வு, பெரும்பான்மையான மாணவர்களுக்கு
கடினமாக இருந்ததற்கு, புதிய காரணம் கூறப்படுகிறது. கணிதப் பாட, "ப்ளூ
பிரின்ட்' அமைப்பில், தமிழக அரசு செய்த மாற்றம், அனைத்து கணித
ஆசிரியர்களையும் சென்றடையவில்லை. இதனால், மாணவர்கள் மட்டுமின்றி,
ஆசிரியர்களும் குழப்பம் அடைந்தனர்.தமிழகத்தில் நேற்று முன்தினம், 10ம்
வகுப்பு கணித தேர்வு நடந்தது. இதில், ப்ளூ பிரின்ட் படி, கேள்விகள்
கேட்கப்படவில்லை; தேர்வு கடினமாக அமைந்தது; 15 மதிப்பெண் வரை மாணவர்கள்
இழக்க நேரிடும் என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். மாணவர்கள்
தரப்பிலும், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.
200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி
போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல்
கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல
பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால
கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை
வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்
"அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி
புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான
தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி.,
கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை
(இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது.
தொடக்க கல்வி அதிகாரியிடம் கூடுதல் பணி ஒப்படைப்பு
தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர்
பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இணை இயக்குனர்
ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி,
கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி
புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25
சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ள
நிலையில்,அரசின் முயற்சிக்கு எதிராக, தனியார் பள்ளிகள் போர்க்கொடி தூக்கி
உள்ளன.
11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு
தமிழகத்தில், 11 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு தெரிவித்து உள்ளது.
பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்
இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது
தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும்
கலக்காமலும் உள்ளனர். அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும்
என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து
வருகிறது.
"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்திக் குறிப்பு : குரூப்- 4ல்,
இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பணிக்கு, 2012, ஜூலை7 ல், தேர்வு
நடந்தது.
சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு அரங்கு விடுதியில், கல்லூரி மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது.
விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம்
ரயில் நிலையத்தில், அஞ்சல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" சிரமம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து
"பத்தாம் வகுப்பு கணித தேர்வில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பது சிரமம்" என, மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"
"இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என,
வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.
சென்னையில் நேற்று நடந்த தினமலர்
வழிகாட்டி நிகழ்ச்சியில், "வெளிநாட்டில் மேற்படிப்புக்கான சாதக, பாதகங்கள்"
குறித்து அவர் பேசியதாவது:
விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்
பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம்
மூலம் அனுப்பும் பணியின் போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர்
களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும் என்று, மதுரை மாவட்ட
தேர்வு பார்வையாளர் சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்)
தெரிவித்துள்ளார்.
1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன் குறைந்த மாணவர் களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி
குமரி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிய
திறனறி தேர்வு அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்பட உள்ளது என்று
கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
"புளூபிரின்ட்"படி கேள்விகள் கேட்கவில்லை: சாதாரண மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்,"கட்"
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித தேர்வில்,
"புளூபிரின்ட்" (கேள்வித்தாள் அமைப்பு) படி, கேள்விகள் கேட்கவில்லை
எனவும், இதனால், சாதாரண மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 15 மதிப்பெண்கள்
வரை, பாதிப்பு ஏற்படும் எனவும், கணித ஆசிரியர்கள், ஆவேசமாக தெரிவித்தனர்.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு,
இந்த ஆண்டு, பொதுத் தேர்வு துவங்கியதில் இருந்து, தொடர் குளறுபடிகள் நடந்து
வருகின்றன. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும், அடுத்தடுத்து அதிர்ச்சி
அடைந்து வருகின்றனர்.
10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு தேர்வுகளிலும், குளறுபடிகள்
ஏற்பட்ட நிலையில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. இந்த தேர்வாவது, குளறுபடி
இல்லாமல் நடக்குமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால், இதிலும் குளறுபடி நடந்து, மாணவர்களை, மேலும் கவலை அடையச்
செய்துள்ளது.
எந்தெந்த பாடத்தில் இருந்து, எத்தனை கேள்விகள் கேட்கப்படும், எத்தனை
மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்பது குறித்து, முன்கூட்டியே
அட்டவணை தயாரிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும்
வழங்கப்படுகின்றன. இதுதான், "புளூபிரின்ட்&' என, அழைக்கப்படுகிறது.
இதில், உள்ள கேள்விகள் அமைப்பின்படியே, காலாண்டு, அரையாண்டு, மாதிரி
தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என, அனைத்திற்கும் கேள்விகள் கேட்க வேண்டும்.
பொதுத்தேர்வுக்கு சற்று முன் நடந்த மாதிரித் தேர்வுகளில், கணித பாட
தேர்வில், "புளூபிரின்ட்" படியே, கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆனால், நேற்று நடந்த மிக முக்கியமான பொதுத் தேர்வில், கேள்வித்தாள்
அமைப்பின்படி, பல கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும், இதனால், "ஆவரேஜ்"
மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும்,
கணித ஆசிரியர்கள் குமுறினர். 15 மதிப்பெண்கள் வரை, அவர்களுக்கு இழப்பு
ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
கணித ஆசிரியர்கள் சரமாரி கேள்வி: ஐந்து மதிப்பெண் கேள்வி பகுதியில்,
45வது கேள்வியும், இரண்டு மதிப்பெண் கேள்வி பகுதியில், 30வது கேள்வியும்,
கட்டாய கேள்விகள். இரு கேள்விகளை கொடுத்து, ஏதாவது ஒரு கேள்விக்கு,
மாணவர்கள், கட்டாயம் விடை அளிக்க வேண்டும்.
இந்த நான்கு கேள்விகளும் (தலா 2 கேள்விகள்), முறையே, 2, 3, 5, 8 ஆகிய
பாடங்களில் இருந்து கேட்கப்படும் என, "புளூபிரின்ட்"டில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிதாகரஸ்" தேற்றம், தொடுகோடு நாண் தேற்றம் ஆகிய
பகுதிகளின் கீழ், "நிரூபணம் இன்றி" என, தரப்பட்டுள்ளது.
இந்த பகுதி கேள்விக்கான விடையை எழுதும் போது, சான்று அளிக்க தேவையில்லை.
அதன்படி, இந்த பகுதி, இரு மதிப்பெண் கேள்வியில் மட்டுமே கேட்கப்படுகிறது.
ஐந்து மதிப்பெண் கேள்வியில், கேட்டது கிடையாது. அதனால், நாங்களும்
நடத்தவில்லை. ஆனால், "பிதாகரஸ் தேற்றம் எழுதி நிரூபி" என, ஐந்து மதிப்பெண்
பகுதியில், கட்டாய கேள்வியாக கேட்டுள்ளனர்.
"புளூபிரின்ட்"படி, இந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது. மாணவர்கள்,
கோர்ட்டுக்குச் சென்றால், தேர்வுத்துறை, பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிதாகரஸ் தேற்றம் பகுதிக்கு, சான்று இருப்பதாகவும், இது, ஐந்து மதிப்பெண்
பகுதிகளில் இடம்பெறும் என்றும், கடைசிவரை, தேர்வுத்துறை கூறவில்லை.
இது, தேர்வுத்துறையின் தவறு. "புளூபிரின்ட்" விதிக்கு மாறாக, கேள்வியை
கேட்டுள்ளனர். "புளூபிரின்ட்"படி, "கணங்களும், சார்புகளும்" என்ற பாடத்தில்
இருந்து, ஐந்து மதிப்பெண் பகுதியில், இரு கேள்விகள் கேட்க வேண்டும்.
கணங்கள் பகுதியில், 3 பயிற்சிகளும், சார்புகள் பகுதியில், ஒரு பயிற்சியும்
உள்ளன.
கணங்கள் பகுதி, எளிதானவை. மேலும், அதிக பயிற்சிகள் உள்ள பகுதி.
கணங்களில் இருந்து, ஒரு கேள்வியை கூட கேட்காமல், சார்புகள் பகுதியில்
இருந்தே, 2 கேள்விகளையும் கேட்டுவிட்டனர்.
இரண்டாவது பாடத்தில் (மெய் எண்களின் தொடர் வரிசைகளும், தொடர்களும்)
இருந்து, இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகள், "புளூபிரின்ட்&'படி கேட்க
வேண்டும். ஆனால், ஒரே ஒரு கேள்விதான் (கேள்வி எண்:33) கேட்டுள்ளனர்.
"அல்ஜீப்ரா" பாடத்தில் (மூன்றாவது பாடம்) இருந்து, மூன்று ஐந்து
மதிப்பெண் கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால், இரண்டு தான் கேட்டுள்ளனர். ஒரு
கேள்வியை கேட்கவில்லை. "அணிகள்" (நான்காவது பாடம்) பாடத்தில் இருந்து,
ஐந்து மதிப்பெண் கேள்வியில், ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர். இதேபோல், "முக்கோணவியல்"
(ஏழாவது பாடம்) பாடத்தில் இருந்து, ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்க
வேண்டும். இதற்கு மாறாக, இரு கேள்விகளை கேட்டுள்ளனர்.
இப்படி, "புளூபிரின்ட்"டிற்கு மாறாக, பல கேள்விகளை கேட்டதன் மூலம்,
"ஆவரேஜ்" மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், 15 மதிப்பெண்கள்
வரை இழப்பு ஏற்படும். இவ்வாறு, கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தேவச்சந்திரன், பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை புழுதிவாக்கம்:
உறவினர்கள் சொன்னது போல தேர்வு கடினமாக இல்லை. எளிதாக இருந்தது. கட்டாயம்,
70க்கும் அதிகமாக மதிப்பேன் எடுப்பேன். ஆசிரியர்கள் நடத்திய பல கேள்விகள்
வினாத்தாளில், அப்படியே இடம் பெற்றிருந்தன.
கவுதம், பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை புழுதிவாக்கம்:
வினாத்தாள், 10 சதவீதம் கஷ்டமாக இருந்தது. "புளு பிரின்ட்"டில் இருந்தது
போல் கேள்விகள் வரவில்லை. புத்தகத்தில் இல்லாமல், சொந்தமாக சில கேள்விகள்
கேட்கப்பட்டிருந்தன. வகுப்பில், சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு, கணித
தேர்வு கஷ்டமாக இருக்கும்.
மந்த்ரா, எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்: கணிதத்
தேர்வு எளிதாக இருந்தது. இதுவரை வராத வினாக்கள் இம்முறை
கேட்கப்பட்டிருந்தது. என்னுடன் படிக்கும் மாணவியரும், வினாத்தாள் எளிதாக
இருந்ததாக தெரிவித்தனர்.
நவீன்குமார், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்:
வினாத்தாள் எளிதாக இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக
இருந்தது. பத்து வினாக்கள் எழுத வேண்டியதற்கு, எட்டு வினாக்கள் மட்டுமே,
என்னால் எழுத முடிந்தது.
சங்கீதா, ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்; அனைத்து
கேள்விகளும் ஓரளவிற்கு சுலபமாக இருந்தன. ஆனால், "புளூ பிரின்ட்" வகையில்
கேள்விகள் கேட்கப்படவில்லை. 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. 2
மதிப்பெண் கேள்விகள் ஒன்று சுலபமாகவும், ஒன்று கடினமாகவும் இருந்தது. 10
மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் சுலபமாகவே இருந்தன. பிதாகரஸ் கேட்கப்பட்டது
கடினமாக இருந்தது. கணக்கு பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுவது
கடினம்.
சிவபிரகாசம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம்: இந்த
முறை ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும், புத்தகத்தில் இருந்தே
கேட்கப்பட்டதால், அனைத்தும் சுலபமாகவே இருந்தன. இரண்டு பாடத்தில் இருந்து,
ஒரு வரைப்படம் கேட்கப்பட்டது. கடந்த முறையை காட்டிலும், இந்த முறை கணக்கு
தேர்வு சுலபமாகவே இருந்தது. ஐந்து மதிப்பெண் கேள்விகளில், 37வது கேள்வி
ஓரளவிற்கு கடினமாக இருந்தது.a
கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்
கத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு, புதிதாக, 398 பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 வணிகவியல் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பம்
பிளஸ் 2 வணிகவியல் ஆங்கில வழியில், "பகுதி அ" வில் 10வது வினா:
கீழ்க்கண்ட சூழ்நிலைகளுள் எப்போது கடனீட்டுப் பத்திரதாரர்கள் வட்டிபெறும்
உரிமை பெற்றுள்ளனர். விடை: (அ) நிறுமம் லாபம் ஈட்டும்பொழுது, (ஆ)
பங்குநர்கள் பங்காதாயம் பெறும்பொழுது, (இ) நட்டம் ஏற்படும் ஆண்டு உட்பட
எந்த ஆண்டிலும்.
தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், தொழில் கல்வி தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்குமா?
"தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என,
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வழங்கப்படவில்லை"
என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பார்த்திபன் கூறினார்.
மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்
"கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு,
மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு
மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர்
ஜெயலலிதா கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: பி.எட்.,படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட்.
படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல்
5-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு
ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு,
லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும் என, தமிழக அரசு
அறிவித்துள்ளது.சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை
மானியக் கோரிக்கையில், அமைச்சர் வளர்மதி வெளியிட்ட அறிவிப்பு:
அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி
அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார்.
10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது
செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது.
மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு
"கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, ஒவ்வொரு
மாவட்டத்திலும், மூன்று வேலைவாய்ப்பு முகாம்கள், 2013-14ம் ஆண்டில்
நடத்தப்படும்" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வித் திட்டம்?
நீலகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்
எண்ணிக்கையை அதிகப்படுத்த, ஆங்கில வழிக் கல்வியை போதிக்கும் திட்டம்
விரிவுபடுத்தப்பட்டு வருகிறது; ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் "ஆங்கில
வழிக்கல்வி" துவங்கும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.
கல்விக்கடனுக்கான அனுமதி கடிதம் தராமல் இழுத்தடிப்பு: அலைய வைக்கும் வங்கி அலுவலர்கள்
கல்விக் கடனுக்கான விதிமுறைகள் ஒரே மாதிரியாக
இருந்தாலும், சில வங்கிகளின் அதிகாரிகள் கடன் அனுமதி கடிதம் தராமல்,
பெற்றோர், மாணவர்களை தொடர்ந்து அலைய வைக்கின்றனர்,
மன உளைச்சல் இல்லாத தேர்வு முறை தான் தீர்வு
பொதுத்தேர்வுகளில்,
தொடர் குளறுபடி ஏற்பட்டு வருவது குறித்து, கல்வியாளர் ராஜகோபாலன்
கூறியதாவது: தபால் துறை, தற்போது போதிய பணியாளர்கள் இல்லாமல், செயல்திறன்
குறைந்து விட்டது.
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு :மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி
"பத்தாம்
வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், அனைத்து வினாக்களும்
எதிர்பார்த்தபடி மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவர்களும்,
60 மதிப்பெண்கள் பெறக்கூடும். நன்றாக படிக்கும் பலர் "சென்டம்' பெற
வாய்ப்புள்ளது' என, மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.
விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை
பொதுத் தேர்வு விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில்,
தபால்துறை தொடர்ந்து சொதப்பி வருவதால், பார்சல் லாரியில் விடைத்தாள்களை
அனுப்பும் திட்டத்திற்கு மாறுவது குறித்து, தேர்வுத்துறை இயக்குனரகம்,
தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.
குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்
டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் 4 ல் தேர்வானவர்கள் மற்ற துறைகளைவிட, கல்வித்துறை அலுவலக பணியில்
சேர ஆர்வம் காட்டுகின்றனர்.சமீபத்தில் நடந்த குரூப் 4 போட்டி தேர்வில்,
பி.எட்.,ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஏராளமானோர் தேர்வு பெற்றனர்.
கல்லூரிகள் இன்று திறப்பு
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு எதிராகவும், இலங்கை தமிழர்களை காக்க
வலியுறுத்தியும் மாணவர் கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதிலும் பல்வேறு
போராட்டங்கள் நடத்தியதால் காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் இன்று முதல்
திறக்கப்படுகிறது.
ஒரு மார்க் வினாவில் அச்சுப்பிழை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வர்கள் வருத்தம்
எஸ்.எஸ்.எல்.ஸி., ஆங்கிலம் இரண்டாம் தாளில், "சரியான விடையை தேர்ந்தெடுத்து
எழுதுக' என்ற ஒரு மார்க் கேள்வி அச்சுப்பிழை இருந்ததால் தேர்வர்கள்
குழப்பமடைந்தனர்.
விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற தேர்வுத்துறை ஆலோசனை
பொதுத் தேர்வு விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில்,
தபால்துறை தொடர்ந்து சொதப்பி வருவதால், பார்சல் லாரியில் விடைத்தாள்களை
அனுப்பும் திட்டத்திற்கு மாறுவது குறித்து, தேர்வுத்துறை இயக்குனரகம்,
தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.
மடிக்கணினி வழங்குவதற்கு லஞ்சம்: தலைமை ஆசிரியர் இடை நீக்கம்
விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
வழங்குவதற்கு ரூ.200 வீதம் லஞ்சம் வாங்கியதாக இலவசனாசூர்கோட்டை தலைமை
ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்
பொள்ளாச்சி சப்-டிவிஷன்; கிணத்துக்கடவு, வால்பாறை
தாலுகாக்களை உள்ளடக்கியது. உடுமலை திருப்பூர் மாவட்டமாக இருந்தாலும்,
உடுமலைக்கு நெருங்கிய டவுனாக பொள்ளாச்சி விளங்குகிறது. மருத்துவம்,
மார்க்கெட், விவசாய விதைகள், மருந்துப்பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட
பல்வேறு பணிகளுக்கு பொள்ளாச்சிக்கே பொதுமக்கள் வரவேண்டிய கட்டாய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி: குவியும் ஆசிரியர்கள்
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதி மங்கலங்கிழார்
பயிற்சி மையத்தில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு,
இலவச பயிற்சி அளிப்பதால், பயிற்சி பெற வரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை,
நாளுக்கு அதிகரித்து வருகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச கணினி, ஆங்கில பயிற்சி
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில், பிளஸ் 2
மாணவர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி
ஏப்.,8ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கூடுதல் நேரம் திறக்க வேண்டும்: மாணவர்கள் எதிர்பார்ப்பு
"ஐ.ஏ.எஸ்., போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை, காலை 8
மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, கோரிக்கை
எழுந்துள்ளது.
நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு
மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான
பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்
கடைபிடிக்கப்படுகிறது.
ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிக எளிமை: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள், மிக மிக எளிமையாக இருந்தது. பாடப்
புத்தகத்தில் இருந்தே, அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டதால் மாணவர்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய,
வினா எண், 62ற்கு, முழு மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
"விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை": பி.ஆர்.ஓ., விளக்கம்
"பத்தாம் வகுப்பு விடைத்தாள் பண்டல், ரயிலிலிருந்து விழுந்ததுக்கு
ரயில்வே துறை காரணமில்லை" என, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் செய்தி
தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் இன்னொரு பெற்றோர்: உலக குழந்தைகள் புத்தக தினம்
குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும்,
குழந்தைகளுக்கான புத்தங்கங்கள் எழுத, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்
விதமாகவும் ஏப்., 2ம் தேதி உலக குழந்தைகள் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது.
சம்பாதிப்பதோடு நாட்டுப்பற்றும் வேண்டும்: மாணவ இயக்குனர் பயிற்சி முகாமில் தகவல்
மதுரை, அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல்
கல்லூரியில், "மாணவ இயக்குனர் 13"க்கான, ஐந்து நாட்கள் குறும்பட தயாரிப்பு
பயிற்சி முகாம், நேற்று துவங்கியது.
Subscribe to:
Posts (Atom)