தமிழக அரசு மகளிர் திட்டத்தின் சார்பில் கிராமப்புற
இளைஞர்களுக்கு 4 சக்கர வாகனம் ஒட்டுவதற்கான இலவச பயிற்சி முகாம் நெல்லை
சிட்டி டிரைவிங் பயிற்சி பள்ளியில் நடைபெறவுள்ளது.
நெல்லை மாவட்ட மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்
வேலைவாய்ப்புடன் கூடிய 4 சக்கர வாகனம் ஒட்டுவதற்கான இலவச பயிற்சி 45
நாட்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் சேர தகுதி 10ம் வகுப்பு முடித்தவராகவும், 20
வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். வயது வரம்பு 35க்குள்
இருக்கவேண்டும். பயிற்சிக்கு பின் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு
பரிந்துரை செய்யப்படும்.
மேலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் 10ம் வகுப்பு கல்விச் சான்றிதழ்
நகல், குடும்ப அட்டை நகல், 100 நாள் தேசிய வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல்
ஆகியவற்றுடன் அக்.30ம் தேதிக்குள் சிட்டி டிரைவிங் ஸ்கூல், 18/1 குற்றாலம்
ரோடு, நெல்லை டவுன் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இதுகுறித்து மேலும் விபரம் அறிய 98421 76639 என்ற நம்பரில்
தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சிட்டி டிரைவிங் ஸ்கூல் இயக்குனர் நைனா
முகம்மது தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment