வி.ஏ.ஓ., ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்கு, 50 சதவீதம் பேர்
வரவில்லை. டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதி, 1,870
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, போட்டித் தேர்வு நடத்தியது. தேர்வு
பெற்றவர்களுக்கு, கடந்த ஜனவரியில், முதல்கட்ட கலந்தாய்வு நடந்தது.
இதன்பின், மேலும், மூன்று கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.
எனினும்,
நிர்ணயிக்கப்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால்,
ஐந்தாம் கட்ட கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று நடந்தது. 102
பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் வரவில்லை.
வி.ஏ.ஓ., தேர்வில் தேர்வு பெற்ற பல தேர்வர்கள், குரூப்-2 உள்ளிட்ட இதர
தேர்வுகளில், தேர்வு பெற்றதால், அந்தப் பணிகளுக்கு சென்று விட்டனர்.
இதனால், வி.ஏ.ஓ., பணியிடம், தொடர்ந்து காற்றாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment