கோபியில் தாய், மகள் மற்றும் தந்தை, மகன் 10ம் வகுப்பு தேர்வை நேற்று எழுதினர்.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது.
கோபியில், தனித்தேர்வர், 1,122 பேர் உட்பட, 16,309 பேர் தேர்வு எழுதினர்.
ஆசனூரைச் சேர்ந்தவர் ஜெடேசாமி, 40. இவர் மனைவி மகேஸ்வரி, 36. இவர்கள் மகள்
ரூபா, 15. கோபியில், மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படிக்கிறார். ரூபாவும்,
மகேஸ்வரியும், நேற்று ஒரே நாளில் தமிழ் தேர்வு எழுதினர்.
இதுகுறித்து தாய், மகேஸ்வரி கூறியதாவது: என் சொந்த ஊர், கடம்பூர்.
அங்கு, எட்டாம் வகுப்பு வரை படித்தேன். மீண்டும் படிக்க வேண்டும் என்ற
ஆர்வத்தால் கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதினேன். தமிழ்,
ஆங்கில பாடத்தில் தோல்வி ஏற்பட்டது. தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும்
நடப்பாண்டு எழுதினேன். இவ்வாறு அவர் கூறினார்.
கோபி கோட்டத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறையில், சாலை பணியாளராக
பணிபுரிபவர் குணசேகரன், 50. இவரும், இவர் மகன் தமிழீழமும், நேற்று, 10ம்
வகுப்பு தேர்வு எழுதினர். மகன், தமிழீழம், அரசுப் பள்ளியிலும், தந்தை,
குணசேகரன், மற்றொரு பள்ளியிலும் தேர்வு எழுதினர்.
குணசேகரன் கூறியதாவது: சாலை பணியாளராக, 14 ஆண்டு வேலை பார்க்கிறேன்.
துவக்கத்தில் வேலைக்கு சேரும் போது, ஐந்தாம் வகுப்பு படித்திருந்தேன்.
படிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, கடந்த ஆண்டு 8ம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதி தேர்ச்சி பெற்றேன். நடப்பாண்டு, 10ம் வகுப்பு தேர்வு எழுதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment